செவ்வாய், 20 ஜனவரி, 2015

விலாசம் தெரியாத மனிதர்கள் !


விலாசம் தெரியாத மனிதர்கள் !
உலகம் தோன்றி உயிர்கள் தோன்றி ,மனிதனாக பிறப்பு எடுத்த மனிதர்கள் அறிந்து கொள்வது என்ன ?
நாம் எங்கு இருந்து வந்தோம்? ஏன் வந்தோம் ? எதற்க்காக வந்தோம் ? மீண்டும் எங்கு செல்ல வேண்டும் ?என்ற உண்மை தெரியாமல் பிறந்து பிறந்து ,இறந்து இறந்து ,பல உயிர்கள் எடுத்து பல உடம்புகள் எடுத்து வாழ்ந்து வாழ்ந்து அழிந்து கொண்டே உள்ளோம் .
வள்ளல்பெருமானுக்கு முன்னாடி தோன்றிய அருளாளர்கள் நாம் செல்ல வேண்டிய இடம்,சொர்க்கம் ,கைலாயம் ,வைகுண்டம்,பரலோகம்,,பரம பிதா வாழும் இடம்,அல்லா இருக்கும் இடம் என்ற பொய்யான இடங்களை காட்டிவிட்டு அவர்களும் மடிந்து போனார்கள் .
நாமும் அவற்றை எல்லாம் உண்மை என்று நம்பி பல பிரிவுகளாக பல மதங்கள் ,பல சமயங்கள் சொல்லியதை ஏற்றுக் கொண்டு அலைந்து திரிந்து அழிந்து கொண்டே உள்ளோம் .
வள்ளல்பெருமான் ஒருவரே சரியான வழியைக் காட்டி நாம் செல்லவேண்டிய இடத்தைக் காட்டி ,எப்படி வாழ்ந்தால் அங்கு செல்ல முடியும் என்பதை தான் வாழ்ந்து மரணத்தை வென்று வழி காட்டி உள்ளார் .
நாம் செல்ல வேண்டிய இடம் ...பலகோடி அண்டங்களை இயக்கிக் இயங்க வைத்துக் கொண்டு இருக்கும் இடம் ,அருட்பெருவெளி என்பாதாகும்.அங்கு அருள் நிறைந்து இருக்கும்.அந்த அருளை இயக்குவது அருள் நிறைந்த போரொளி என்னும் இயற்கை உண்மையாம் ''அருட்பெருஞ்ஜோதி '' என்பதாகும் .அந்த ''அருட்பெருஞ்ஜோதிதான் உண்மையான கடவுள்'' என்பதை கண்டு ,உண்டு,களித்து அதன்மயமாகி உலகில் உள்ள நமக்கு எல்லாம் வழி காட்டி உள்ளார்கள்.
அந்த அருள் பெருவெளியில் உள்ள ஆன்மா ஆகாயத்தில் இருந்துதான் ஆன்மாக்கள் எல்லாம் அனைத்து அண்டங்களுக்கும் அனுப்பி வைக்கப் படுகின்றன.
ஆன்மாக்கள் என்னும் ஒளிதான் கடவுளின் குழந்தைகள் என்பதாகும்
இந்த பஞ்ச பூத உலகத்தில் ஆன்மாக்கள் வந்து உயிரையும் உடம்பையும் எடுத்து வாழ்ந்து கொண்டு உள்ளன.உடம்பும் உயிரும் ஆன்மாவைப் பற்றிக் கொண்டு இருக்கும் வரை ஆன்மாக்கள் அருட்பெரு வெளிக்கு செல்ல முடியாது என்பதை வள்ளல்பெருமான் தெள்ளத் தெளிவாக தெரிவித்து உள்ளார்.
இந்த உலகத்தில் வாழும் ஆன்மாவிற்கு ஜீவ தேகம் உள்ள ஆன்மா என்று பெயர் .உடம்பையும் உயிரையும் ஒளிமயமாக மாற்றிக் கொண்டால் அதற்கு ஆன்ம தேகம் என்று பெயர்.ஆன்ம தேகம் எடுத்த ஆன்மாக்கள் மட்டுமே இந்த பஞ்ச பூத உலகை விட்டு வெளியேற முடியும் .அதற்கு மரணம் இல்லாப் பெருவாழ்வு என்று பெயர் வைத்துள்ளார் வள்ளல்பெருமான்.
ஆட்ண்டவர் இருக்கும் விலாசத்தை மக்களுக்கு கொடுத்து .அங்கு செல்லும் வழியைக் காட்ட வந்தவர்தான் அருட்பிரகாச வள்ளலார் .
உடம்பையும் உயிரையும் ஆன்ம தேகமாக மாற்றும் ஆற்றல் சக்தி ,அருளுக்கு மட்டுமே உள்ளது .அந்த அருளைப் பெறுவதே மனித தேகம் எடுத்த ஆன்மாக்களின் செயல்களாகும்
அருளைப் பெறுவதற்கும் அங்கு செல்வதற்கும் எவை எவை தடையாக இருக்கின்றது அவற்றை எல்லாம் எவ்வாறு விடவேண்டும்,விலக்க வேண்டும், அங்கு செல்வதற்கு எந்த எந்த காரியங்களை செயல்களை பின் பற்ற வேண்டும் என்பதை திருஅருட்பா ஆறாம் திருமுறையில் மிகத் தெளிவாக எழுதி வைத்துள்ளார் படிந்து அறிந்து கொள்வது மனித தேகம் படைத்த அறிவு உள்ளவர்களின் செயலாகும்.
வள்ளல்பெருமான் விலாசம் கொடுத்துள்ளார் ,விலாசத்தை கண்டு பிடித்து செல்வது நமது முயற்ச்சியாகும் நமது கடமையாகும்
அறிவைக் கொண்டு அறிவைத் தேடவேண்டும்.பின் அருளைக் கொண்டு அருளைத் தேடவேண்டும்.அருள்தான் ஆண்டவர் இருக்கும் இடத்தை சரியாக காட்டும் .
முயற்சித்தால் முடியாததது ஒன்றும் இல்லை.
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு