செவ்வாய், 20 ஜனவரி, 2015

கண்டதும் கேட்டதும் !


கண்டதும் கேட்டதும் !

சென்னையில் நடக்கும் சன்மார்க்க விழாவில் கலந்து கொள்ள ஈரோட்டில் இருந்து சென்னைக்கு ரயில் வண்டியில் பயணம் செய்து கொண்டு இருந்தேன் .

என் அருகில் ஒரு அன்பர் அமர்ந்து இருந்தார் .அவர் என்னிடம் எங்கு செல்கிறீர்கள் என்றார்.

நான் சென்னையில் வள்ளலார் காட்டிய சன்மார்க்க விழாவில் கலந்து கொள்ள செல்கிறேன் என்றேன் .

அதற்கு அவர் அப்படியா மிக்க மகிழ்ச்சி என்று சொல்லியதோடு மீண்டும் பேச ஆரம்பித்தார் .

அய்யா உலகிலேயே ஒரு உண்மையான ஒழுக்க நெறியை வள்ளலார் போல் சொல்லியது யாரும் இல்லை .மேலும் நான் பல நாட்டு ஆன்மீக நூல்களையும் படித்து உள்ளேன் .வள்ளலார் போல் கடவுளைப் பற்றியும் ,உலக ரகசியங்களையும் அதன் உண்மையை பற்றியும் உலக மக்களுக்கு யாரும் அவரைப் போல் சொல்ல வில்லை என்றார் .

நீங்கள் எங்கு இருந்து வருகிறீகள் என்றேன் .நான் கோவையில் இருந்து சென்னை செல்கிறேன் என்றார்.மேலும் நான் ஒரு பிராமணன் என்றார் .நாங்கள் பொய்யான தெய்வங்களை வழிபாடு செய்து கொண்டு வந்தோம்.வள்ளலார் எழுதிய திரு அருட்பாவை படித்து தெரிந்து கொண்ட பிறகு .எங்கள் வீட்டில் அருட்பெருஞ் ஜோதி வழிபாடு செய்து கொண்டு வருகிறோம் என்றார் .

இப்போது உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கின்றது என்றேன் .ஐயா நாங்கள் ஜோதி வழிபாடு செய்ய அரம்பித்திலில் இருந்து எங்கள் குடும்பத்தில் எந்த குறைபாடும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம் .என்றார்.

சாதி ,சமய,மத பற்றுள்ள ,அந்த பிராமண அன்பர் சொன்னது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது..

எங்கள் இருவரின் பேச்சு சென்னை செல்லும் வரை வள்ளலார் எழுதிய .அவர் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை முறைகளைப் பற்றியும் .மற்ற ஆன்மீக பெரியவர்களின் செயல்பாடுகளும் எந்த நிலையில் எப்படி இந்த மக்களுக்கு சொல்லி உள்ளார்கள் என்பதை எல்லாம் பேசிக் கொண்டே சென்றோம் .

சென்னை பயணம் மிகவும் பயன் உள்ளதாக இருந்தது.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் /

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு