செவ்வாய், 20 ஜனவரி, 2015

வருடம் ஒன்று மாதம் பனிரண்டு !


வருடம் ஒன்று மாதம் பனிரண்டு !

ஒவ்வொரு மனிதர்களுடைய உயிரும் உடம்பும் உற்பத்தி யாகும் காலம் பனிரண்டு ஆகும்.

ஆண்களின் சுக்கிலத்தில் ஆன்மா வந்து அமர்ந்து விட்டால் .ஆன்மாவில் இருந்து உயிர் வெளியில் தோன்றுவதற்கு இரண்டு மாதங்கள் ஆகின்றது.

இரண்டு மாதம் பூர்த்தி யாகி விட்டால் உணர்ச்சி தோன்றி பெண்ணின் உறவு கொண்டு ஆன்மாவும் உயிரும் பெண்ணின் சோனிதப் பைக்குள் சென்று விடும்.

பெண்ணின் சோனித வழியாக சென்ற ஆன்மாவும் உயிரும் பெண்ணின் கருப்பைக்குள் சென்று விடும் .கருப்பைக்குள் சென்றதும் .பெண்ணின் தொப்புளில் தொடர்பு கொண்டு அமுதக் காற்றை சுவாசிக்கும்.

தொப்புள் வழியாக வரும் திரவமும் அமுதக் காற்றும் உண்டு ஐந்து மாதம் வரையில் உறுப்புகளை உருவாக்கும் குழ்வியாகிக் கொண்டு செயல்பாடும்..மேலும் ஐந்து மாதத்திற்குள் அனைத்து உறுப்புகளும் ஒன்றோடு ஒன்று பின்னப்பட்டு முழு உருவமாக அழகான உடம்பு படைக்கப் பட்டுவிடும் .பின் வெளியே வருவதற்கு தயாராகி விடும் .

ஆக ஆண்களின் சுக்கிலத்தில் இரண்டு மாதம்,பெண்ணின் கருப்பையில் பத்து மாதங்கள் .மொத்தம் பனிரண்டு மாதத்தில் ஆன்மா உயிர், உடம்பு எடுத்து இந்த பஞ்ச பூத உலகத்திற்கு வருகின்றது .

ஆன்மாவும் உயிரும் உடம்பும் எப்படி உண்டாயின என்ற உண்மையை அறிந்து கொண்டால் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற அறிவு விளங்கும் என்பதை வள்ளல் பெருமான் தெளிவாக விளக்கி உள்ளார் .

மனிதப் பிறப்பின் உண்மையை விளக்கும் வகையில் ஒரு வருடம் என்றும் .ஒவ்வொரு மாதமும் குழந்தையின் வளர்ச்சி விகிதத்தை குறிக்கும் வகையில் மாதம் பனிரண்டு என்றும் வகுக்கப் பட்டதாகும்.

சிந்திப்போம் செயல்படுவோம் .
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு