செவ்வாய், 13 ஜனவரி, 2015

விநாயகர் என்பது என்ன ?

விநாயகர் என்பது என்ன ?

நமது இருதயத்தின் ஸ்தானத்தில் இரண்டரை அங்குலத்தில் மலர்ந்த வாழைப் பூ போல் ஒரு பை உண்டு .அது வெண்மையாய் இருக்கும்.இதைக் கைலாயம் என்று சொல்லப் படுகின்றது.அந்தப் பைக்கு அருகில் கோடி பங்கில் ஒரு பங்காக வெகு நேர்மையாய் அக்கினி மயமாய் ஒரு ஆவி இருக்கும் அதற்கு காரணாக்கினி என்று பெயர் இப்பையின் அருகில் இடது புறத்தில் மலர்ந்த தாமரைப் பூப்போல் ஒரு பை உண்டு அந்த பை பசுமை வண்ணமாய் இருக்கும்.

அதற்கும் முன் சொன்ன வெண்மைப் பைக்கும் ஒரு நாடி உண்டு அதன் மூலமாய்க் கார்ணாக்கினி அதிகப் படுத்தாமலும் குரை படுத்தாமலும் சமம்படுத்தி வைக்கும்.இந்த மலர்ந்த பைக்கும் கீழ் இருக்கும் ஷீராப்திப் பைக்கும் ஒரு நாடி உண்டு.அதன் மூலமாய் அதற்கு உஷ்ணம் கொடுத்து நிலையில் வைக்கும்.இதனால் ருத்திரன் இடத்தில் விஷ்ணு பிறந்ததாய் சொப்பப்டுகின்றது.

இந்த நாடி மூலமாய் விஷ்ணு இடமாகிய ஜலத்திலும் ,பிரமன் இடமாகிய இந்திரியத்தாலும் உள்ள குற்றங்களைக் கண்டிப்பதால் ருத்திரனை சம்கார கர்த்தா என்று சொல்லப் படுகின்றது.

இந்த அக்கினிப் பையில் ,குண்டலினி வட்ட நரம்பு ஒன்று உண்டு .அதில் மூன்றாகப் பிரியும் கிளை உண்டு.அது மூலம் முதல் பிரமந்திரம் வரையில் இடம் ,வலம், நடு, என்று கத்திரி மாறலாய்ப் பிராணனுக்கு இடங் கொடுத்துக் ஊடுருவி நிற்கும். இந்த நரம்புகளுக்கு சோம சூரிய அக்கினி என்று பெயர்.

விநாயகர் .

இதன்றி இக் குண்டலி வட்ட நரம்பின் அடியில் நின்று இரண்டு நரம்புகள்...வலது புறத்தில் அஞ்சு கவருடைய தலையையும் ....இடது புறத்தில் ஆறு தலை உடைய கவராயும் நிற்கின்றன

வலத்தில் உள்ளது கணபதி என்று சொல்லப் படுகின்றது .இடத்தில் உள்ளது சுப்பரமணியர் என்று சொல்லப் படுகின்றது.வலத்தில் உள்ள கணபதி
(விநாயர் ) என்னும் நாடி இடைவிடாமல் அசைந்து கொண்டே இருக்கும்.இடைவிடாது அசைந்து கொண்டு உள்ளதால் அதற்கு யானை துதிக் கை போன்று வைத்துள்ளார்கள் .இந்த நரம்பு இடைவிடாது அசைந்து கொண்டு உள்ளதால் நாம் உண்ணும் உணவை அரைத்து திரவமாக்கிக் வெளியே ஒரு பாகம் சக்கையாகவும்,(மலம் )ஒருபாகம்,திரவமாகவும் தள்ளி விடுகின்றது .
இருந்த இடத்தில் இருந்தே அந்த நாடி வேலை செய்வதால் அதற்கு பிள்ளையார் என்றும் .விநாயகர் என்றும்,ஆணை முகத்தான் என்றும் சொல்லப் படுகின்றது.

வெளியே வரும் அந்த திரவத்தை இடது புறம் உள்ள நாடியின் வழியாக உடம்பில் உள்ள அனைத்து நாடிகளுக்கும் பிரித்து அனுப்பப் படுகின்றது .ஆறு ஆதாரங்கள் வழியாக உடல் முழுவதுக்கும் அனுப்புவதால் அதற்கு ஆறு முகம் என்றும் .சுப்பரமணியர் என்றும் சொல்லப் படுகின்றது.

அந்த இரு நாடிகளும் ஒன்றை ஒன்று பிரியாமல் செயல்படுவதால் சகோதரர்கள் என்று சொல்லப் படுகின்றது.அதாவது ஆண்ணன் தம்பி என்று வைத்துள்ளார்கள்.

இந்த இரண்டு நாடி களும் இல்லை என்றால் நம்முடைய உடம்பிற்கு சக்தி என்னும் திரவம் செல்லாது.அந்த இரண்டு நாட்களின் செயல்களால் எழுபத்தி இரண்டாயிரம் (72000) நாடிகளும் இடைவிடாமல் செயல் படுகின்றன.

சிவன், பார்வதி கையில் உள்ள ஞானப் பழத்தை யார் முதலில் உலகத்தை சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கு தருவதாக சொல்லப்படும் கதையில் ,விநாயகர் தாய் தந்தையரை சுற்றி வந்து பெற்றுக் கொள்கிறார் என்பது .ஆன்மாவில் இருந்து வரும் பிராணவாயுவு என்னும் உஷ்ண சக்தியை விநாயகர் என்னும் நாடி அருகில் உள்ளதால் ஆன்மாவை சுற்றி வந்து பெற்றுக் கொள்கிறார் என்பதாகும்.

சுப்பரமணி என்னும் நாடி நேராக ஆன்மாவை தொடர்பு கொள்ள முடியாது எல்லா நரம்புகள் வழியாக சென்றுதான் ஆன்மாவைத் தொடர்பு கொள்ளும் ஆதலால் மாயை என்னும் மயில் மீது ஏறி சென்று ஆன்மாவைப் தொடர்பு கொள்ளுவதால்.முருகன் நேரம் கழித்து வந்தார் என்றும் .விநாயகர் அம்மை அப்பனை சுற்றி ஞானப் பழத்தைப் பெற்றுக் கொண்டார் என்றும் சொல்லப்படுகின்றது.

இந்த உடம்பின் தத்துவத்தை மக்களுக்கு புரிய வைக்காமல் மறைத்து வைத்து விட்டார்கள் .மக்கள் உண்மையாகவே விநாயர் ஒருவர் உள்ளார் என்றும்.முருகன் என்பவர் ஒருவர் உள்ளார் என்றும் நம்ப வைத்து விட்டார்கள்

இன்னும் உடம்பின் தத்துவத்தின் உண்மையை வெளிப்படையாக வள்ளல்பெருமான் தெளிவுப் படுத்தி விட்டார் .அதனால்தான் வள்ளல்பெருமான் பெருபதேசத்தில் இதை மறைத்தவன் ஓர் வல்லவன் அவன் பூட்டிய பூட்டை ஒருவரும் திறக்க வரவில்லை. உடைக்கவும் வரவில்லை என்கிறார்.அவன்தான் மறைத்து வைத்து விட்டான்

அவர்களுக்கு பின்னாடி வந்த பெரியவர்கள் என்று பெயரிட்டுக் கொண்ட ஆன்மீக பெரியவர்களும் கண்ணை மூடிக் கொண்டு ஒன்று கிடக்க ஒன்றை உளறி வைத்து விட்டார்கள் என்று வேதனைப் படுகின்றார் .

இந்த உண்மைகள் எல்லாம் மக்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகின்றார்களோ தெரியவில்லை.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான் மக்களுக்கு தெளிவுப் படுத்த வேண்டும். .

நாளைக்கு ஆயிரக்கணக்கான மண்ணால் ஆன விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்து ஆற்றிலும் கடலிலும் கொண்டுபோய் விடுவார்கள் .இதனால் மக்கள் என்ன லாபத்தை அடைகிறார்கள் என்பது தெரியவில்லை.

வள்ளல்பெருமான் கொள்கைகளை பின்பற்றினால் அல்லது உண்மையை இந்த உலகம் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பே இல்லை. காலம்தான் பதில் சொல்ல வேண்டும் .

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு