செவ்வாய், 13 ஜனவரி, 2015

மூளையின் வேலை என்ன ?

மூளையின் வேலை என்ன ?

நம்முடைய தலை பாகத்தில் மிகவும் பாதுகாப்பாக சிறு மூளை பெரு மூளை என்று இரண்டு உள்ளது .இதற்கு என்ன வேலை ?

நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும் இந்திரியங்கள் கரணங்கள் வழியாக ஜீவனை சென்று பின் சிறுமூளை யில் பெரு மூளை யில் பதிவாகி ஆன்மாவை சென்று அடைகின்றது.

இது ஒரு நொடியில் யாவும் நடை பெற்றுக் கொண்டு உள்ளது.

மூலை இருக்கா இல்லையா என்பார்கள் இருக்கு நல்லாவே இருக்கு மூளை யில் பதிவாகும் யாவும் நல்லதை கெட்டதை பிரித்து நான்கு ''பைல்களுக்கு'' அனுப்பி கொண்டே இருக்கும்.

இந்திரியம்,கரணங்கள்,ஜீவன்,ஆன்மா என்ற ''நான்கு பைல்கள்'' நம் தலைப் பகுதியில் உள்ளது .எந்த எந்த பைல்களில் எதை எதை சேர்க்க வேண்டுமோ அந்த வேலையை இடைவிடாது செய்து கொண்டே இருக்கும்

இதுதான் ஆன்மாவில் பதிவாகி திரைகளாக மறைத்துக் கொண்டு உள்ளன அந்த பதிவுகள் யாவும் இந்த உலகத்தில் கண்ட காட்சிகள் ,செயல்கள் ,எண்ணுகின்ற எண்ணங்கள் எல்லாம் பதிவாகி குப்பைகளாக நிறைந்து கொண்டு உள்ளன .

இந்த பதிவுகளை எப்படி நீக்குவது என்பதைப் பற்றித்தான் வள்ளல்பெருமான் தெளிவாக விளக்கி உள்ளார் .

ஜீவகாருண்யம்,சத்விசாரம் என்ற இரண்டு வழிகளில் தான் நீக்க முடியும்.நம்முடைய அன்பர்கள் ஜீவ காருண்யம் செய்து கொண்டு உள்ளார்கள் சத் விசாரம் செய்வதே இல்லை .

இரண்டும் இரட்டை மாட்டு வண்டிபோல் சமமாக போக வேண்டும் ஒன்றை விட்டு ஓன்றை செய்வதால் திரைகள் நீங்காது.சத் விசாரம் என்பது இடைவிடாது ஆன்மாவிடம் தொடர்பு கொள்ளுவது .அப்படி கொஞ்சம் நாளைக்கு செய்து வந்தால் தெரிவிக்க வேண்டியதை அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் தெரிவிப்பார் .

ஆண்டவர் தெரிவிக்கும் வரை ஜீவ காருண்யமும்,சத் விசாரமும் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

அப்படி செய்து வந்தால் மூளையின் வேலை முறையாக செயல்படும் .நீங்கள் செய்யும் செயல்களை ஆன்மாவுக்கு மூளைகள் அனுப்பி கொண்டே இருக்கும் .மறுபடியும் மூளை நமக்குத் தெரிவிக்க வேண்டியதை தெரிவிக்கும்.

முயற்ச்சி செய்து பாருங்கள்.முடியாதது ஒன்றும் இல்லை.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு