செவ்வாய், 20 ஜனவரி, 2015

வினைப்பதிவுகள் எதனால் தீரும் ?


வினைப்பதிவுகள் எதனால் தீரும் ?
வினைப்பதிவுகள் என்பது நாம் செய்யும் ஒவ்வொரு காரியங்களிலும் வெளிப்படும் நன்மை தீமை என்ற இரு பகுதிகளாக ஆன்மாவில் பதிவாகிக் கொண்டே இருக்கும்
உயிர்க்ளுக்கு நன்மை தரும்படியான செயல்கள் அதிகம் பதிவானால் வாழ்க்கையில் துன்பம்,துயரம்,அச்சம்,
பயம்,குறைந்து இன்பமான வாழ்க்கை வாழலாம் .
மற்ற உயிர்களுக்கு துன்பம் தரும்படியான செயல்களை அதிகம் செய்தால்,அவை ஆன்மாவில் பதிவாகி, துன்பம், துயரம் அச்சம்,பயம்,அதிகம் உண்டாகி வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் கஷ்டங்களை அதிகம் அனுபவிக்க நேரிடும் .
துன்பத்தை அதிகம் அனுபவிப்பவர்கள்,அதை தீர்த்துக் கொளவதற்கு கோவில்களுக்கும் ,புண்ணிய நதிகளுக்கும் சென்றுக் கொண்டு இருக்கிறார்கள்.
மேலும் ஆன்மீக குருக்களையும்,சந்நியாசிகளையும் தேடி அலைந்துக் கொண்டு உள்ளார்கள் .எதிலும் தீர்வு காண முடியவில்லை என்றால் .
தியானம் ,யோகம்,தவம் செய்யும் பயிற்சி மையங்களுக்கு சென்று ஆயிரக்கணக்கில் பணம் கட்டி பயிற்சியை மேற்கொள்கிறார்கள்
இவைகளில் எல்லாம் நம்முடைய குறைகள் குற்றங்கள் தீர்ந்துவிடுமா என்றால் தீராது ....இவைகள் யாவும் அறியாமையில் செய்யும் செயல்களாகும் .
நம்முடைய ஆன்மாவில் பதிவாகி இருக்கும் வினைகளை நீக்குவதற்கு ஒரே வழி ..ஜீவ காருண்யம் என்னும் உயிர் இரக்கம் ஒன்றினால்தான் தீரும் .
ஏன் என்றால் மற்ற உயிர்களுக்கு துன்பம் செய்வதால் வரும் வினைகளை ,உயிர்கள் வழியாகத்தான் வினைகளை நீக்க முடியும் மற்ற வழிகளால் நீக்க முடியாது என்பதை உயர்ந்த அறிவு படைத்த மனிதர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் .
உயிர்கள் மேல் உண்மையான அன்பு,தயவு,கருணை கொண்டு உயிர்களைக் கொல்லாமல் ,அதன் புலாலை உண்ணாமல்,அவரவர்கள் தகுதிக்குத் தகுந்தவாறு .பசித்த ஏழைகளுக்கு உணவு கொடுத்தல்,உயிர்கள் மேல் அன்பு செலுத்துதல் .இவைகளை ஒவ்வொருவரும் உண்மை உள்ளத்தோடு செயல்பட்டால் நம்முடைய ஆன்மாவில் பதிவாகி உள்ள தீய வினைகள் நீங்கப் பெற்று ,துன்பம் இல்லாமல் மகிழ்சியுடன் வாழலாம்.
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு