செவ்வாய், 20 ஜனவரி, 2015

சித்தர்கள் !


சித்தர்கள் !
சித்தர்களில் மூன்று பிரிவுகள் உள்ளளன.
கர்ம சித்தர்கள்,யோக சித்தர்கள் ,ஞான சித்தர்கள்..
கர்மம் என்னும் வினையை ஒழித்தவர்கள்.கர்ம சித்தர்கள்,இவர்கள் உடம்போடு உயிரோடு முக்தி என்னும் சமாதி யானவர்கள்.
யோக சித்தர்கள் உடம்பை விட்டு உயிரைக் காப்பாற்றிக் கொண்டு சித்திப் பெற்றவர்கள்.
ஞான சித்தர்கள் உடம்பு,உயிர்,ஆன்மாவோடு மறைந்தவர்கள்.
இவர்கள் மேலும் பல நூறு ஆண்டுகள் அவரவர் செய்கைக்கு தகுந்தாற்போல் உருவம் என்னும் பிறப்பு எடுக்காமல் மீண்டும் மனிதப் பிறவி எடுப்பார்கள்.
வள்ளலார் சுத்த பிரணவ ஞான சித்தியைப் பெற்று கடவுள் நிலை அறிந்து அம்மயமானவர்.வள்ளலாரை ஆண்டவர் ஏற்றுக் கொண்டார்.ஞான சபைத் தலைவனுக்கு வல்ல பிள்ளையாக வாழ்ந்தவர்.
அனைத்து உயிர்களின் மேல் அன்பு தயவு,கருணைக் கொண்டு வாழ்ந்ததால் இறைவன் வள்ளலாரை பரிபூரண அருளைக் கொடுத்து தன்னையே தந்து தன்வசமாக மாற்றிக் கொண்டார்.
தன கையில் பிடித்த தனி அருட்ஜோதியை வள்ளலார் கையில் கொடுத்தார்.
தன்னையே எனக்குத் தந்து அருள் ஒளியால்
என்னை வேதித்த ஏன் தனி அன்பே !
பொன்னுடம்பு எனக்குப் பொருந்திடும் பொருட்டாய்
என்னுளங் கலந்த ஏன் தனி அன்பே !
என்பார் வள்ளலார்.ஆதலால் உலகில் வாழ்ந்த அருளாளர்களின் வரிசையில் முதன்மை இடத்தைப் பெற்றவர் வள்ளல்பெருமான்..
வள்ளல்பெருமான் வாழ்ந்த வாழ்க்கை அனைத்து மனித ஜீவர்களுக்கும் வாழ்வதற்கு வழிகாட்டியாக திகழ்ந்தார் என்பதை மனித சமுதாயம் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆன்மநேயன் ;--ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு