செவ்வாய், 20 ஜனவரி, 2015

கடவுளிடம் என்ன கேட்க வேண்டும் !

கடவுளிடம் என்ன கேட்க வேண்டும் !
நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்பதை மறந்து விட்டதால் கடவுளிடம் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருக்கின்றோம்.இதுவே அறியாமையாகும்..
நாம் உண்மையான ஒழுக்கமுள்ள குழந்தைகளாக,மனிதர்களாக வாழ்ந்தால் நமக்கு என்ன தரவேண்டும் என்பது கடவுளுக்குத் தெரியும்.
எல்லோரும் பொருள் இருந்தால்தான் மகிழ்ச்சி என்று நினைத்துக் கொண்டு உள்ளார்கள் .அதனால் பொருளையே விரும்புகிறார்கள் .பொருள் இருந்தால் பெண்ணையும் மண்ணையும் தான் வாங்க முடியும்.
மனிதர்களை அழித்துக் கொண்டு இருப்பது மண்ணாசை பெண்ணாசை ,பொன்னாசை ,என்பதாகும்.
துறவிகள் என்பவர்கள் இந்த மூன்று ஆசைகளையும் விட்டு விட்டால் கடவுள் நமக்கு அருளைக் கொடுத்தது விடுவார் என்று நினைந்து கொண்டு மனித நடமாட்டம் இல்லாத காடு,மலை,குகை போன்ற இடங்களுக்கு சென்று தவம் கிடந்தார்கள் .அவர்களுக்கு கடவுள் எந்த விதமான நன்மைகளையும் செய்யவில்லை.
வள்ளல்பெருமான் முன்பு கடவுள் தோன்றி என்ன வேண்டும் என்று கேட்கிறார் .வள்ளல்பெருமான் அவர்கள் கடவுள் இடத்தில் தனக்காக எதையும் கேட்கவில்லை ,எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் .கொல்லா நெறி குவலயம் எல்லாம் ஒங்க வேண்டும்,அதை நீங்கள்தான் செய்ய வேண்டும் என்று மட்டும் கேட்கின்றார் .
அதைக் கேட்ட அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் .தன்னுடைய் அருள் முழுவதையும் கொடுத்து தன்னுடைய கையில் பிடித்திருந்த தனி அருட்ஜோதியை வள்ளல்பெருமானிடம் கொடுத்து,ஐந்தொழில் ஆற்றலையும் கொடுத்துள்ளார் .
இது கதை அல்ல ,கற்பனை அல்ல ,உண்மை !
இது நடந்தது ஸ்ரீ முக வருடம் தை மாதம் ,வெள்ளிக்கிழமை ,30--1--1874 ,ஆம் ஆண்டு இரவு பனிரண்டு மணிக்கு என்பது சன்மார்க்க சங்கத்தை சார்ந்த அனைத்து அன்பர்களுக்கும் தெரிந்த விஷயமாகும் .
மனிதனாக பிறந்த அறிவுள்ள ஜீவர்கள் கடவுளிடம்,என்ன எப்படி எதைக் கேட்கவேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் .நமது தாயாகவும் தந்தையாகவும் உள்ள ஆண்டவரிடம்
அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
என்தந்தை நினது அருட்புகழை இயம்பி இட்டால் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்த சிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான் செய்யுனும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவா நினை பிரியாத நிலையும் வேண்டுவனே !
என்னும் பாடல் வாயிலாக ஆண்டவரிடத்தில் எப்படி வேண்டுதல் செய்ய வேண்டும் என்பதை மனிதர்களுக்கு சொல்லிக் கொடுத்துள்ளார் .அப்படி வேண்டினால் நமக்கு என்ன வேண்டும் என்பதை அவரே தந்து அருள் புரிவார் .
உலக உயிர்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்று வேண்டினால் அதிலே நாமும் அடங்கி விடுகின்றோம்.
ஆன்மநேயன் ஈரோடு ..கதிர்வேல் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு