வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

குற்றம் எங்கு உள்ளதோ அங்கு பாதுகாப்புத் தேவப்படுகிறது !


குற்றம் எங்கு உள்ளதோ அங்கு பாது காப்புத் தேவைப்படுகிறது !

குற்றம் எங்கு உள்ளதோ அங்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது .அரசனே தவறு செய்தால் யார் பாதுகாப்பு தருவது .அப்போது மக்கள்தான் பாது காப்பு தருகிறார்கள் .தவறு செய்யாமல் மக்களுக்கு நன்மை செய்வான் என்று மக்கள்தானே தேர்வு செய்ளிரார்கள் .அப்படி இருந்தும் ஏன் தவறு செய்கிறார்கள் பொதுது நலம் இல்லாமல் சுயநலம் அங்கே ஆதிக்கம் செய்கிறது .அப்படிப்பட்ட அரசாட்சியாளர்கள் நமக்குத்தேவையா ?மக்களுக்காகவா?மந்திரி ?மந்திரிக்காகவாமக்கள் ?அதேபோல் மக்களுக்காக கடவுள் .கடவுளே குற்ற முள்ளவர்களாக இருந்தால் அந்தக் கடவுள் நமக்குத் தேவையா? குற்றமுள்ள கடவுளாகவே நமது முன்னோர்கள் படைத்து விட்டார்கள் அந்த கடவுளுக்கு குடியிருக்க கோவில் கட்டி வைத்துள்ளார்கள் அந்த கோவிலை கண்கானிப்பவர்கள் .ஊரை ஏமாற்றும் பணக்காரர்கள் .அவர்கள் எப்படி பொது நோக்கத்தோடு செயல்படுவார்கள் .அவர்களாலும் அவர்கள் பாது காக்கும் கடவுளாலும் மக்களுக்கு எந்த பயனும் இல்லை .மக்களை பாதுகாக்க எந்த முட்டாள்களை வேண்டுமானாலும் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கலாம் .கடவுளை தேர்வு செய்ய எந்த கொம்பனாலும் முடியாது .இந்த சமுதாயம் கடவுளை வைத்துக் கொண்டு கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கிறது .அதற்கு என்று ஒரு கூட்டம் மக்களை ஏமாற்றி  மக்கள் உடமைகளையும் உரிமைகளையும் பறித்துக் கொண்டு இருக்கிறது .மூடநம்பிக்கையில் இருந்தது மக்கள் விழித்துக் கொண்டாள் அவர்களால் உழைக்க உழைக்க வேண்டும் அவர்கள் உழைப்பார்களா?அவர்களால் முடியாது .உழைக்காமல் ஊரை ஏமாற்றிக் கொண்டு உயிர் வளர்த்தவர்கள் .அதனால் மக்களை அறிவு பாதைக்கு கொண்டு செல்ல மாட்டார்கள் .ஆனால் மக்கள் இப்போது விழித்துக் கொண்டார்கள்.மக்கள் அறிவு வளர்ந்து கொண்டு வருகிறது .இனிமேல் மக்களை ஏமாற்றுவது கடினம் .இந்த விழிப்பு உணர்வை கொண்டு வந்தவர்தான் திரு அருட்பிரகாச வள்ளலார் என்பவராகும் .மக்களின் அறியாமையை போக்குவதற்காக வந்தவர் .கலையை உரைக்க வந்த கற்பனைக் கதைகளை குழி தோண்டி புதைக்க சொன்னவர் .மனிதன் மனிதனாக வாழ்வதற்கு வழி வகுத்துத் தந்தவராகும் .--மேலும் சிந்திப்போம் .அன்புடன் ஆன்மநேயன் --கதிர்வேலு .    

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு