திங்கள், 8 ஆகஸ்ட், 2011

அருண் பிரபு அவர்களுக்கு கடிதம் !

ஐயா அருண் அவர்களே 

திரு அருட்பாவை சரியாக படிக்காமல் வள்ளலார் பற்றிய உண்மை நிலையை அறியாமல் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிடாதீர்கள்.வள்ளலார் சமாதி அடையவில்லை, வள்ளலார் மரணத்தை வென்றவர் .தன்னுடைய உடம்பை மண்ணுக்குகோ /தீயிக்கோ இறையாக்காமல் ஒளிதேகம் பெற்றவராகும்.அரைகுறையாக படித்து விட்டு உளறவேண்டாம்.அவருக்கு மரணம் என்பது கிடையாது .
மரணம் அடைந்தவருக்குத்தான் சமாதி வைக்கப்படும்.வடலூரில்சமாதியில் தைப்பூசம் கொண்டாடுகிறார்கள் என்பது உங்களுடைய அறிவற்ற கருத்தாகும் .முதலில் உங்கள கருத்தை அடித்து விட்டு மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு இந்த கருத்தை சொன்னவன் யார் ?நீங்களே எழுதினீர்களா என்பதை விளக்கவும்.இதுபோன்ற முட்டாள் தனமான கருத்தை வெளியிடாதீர்கள்.உங்களுக்கு உண்மை புரிய வேண்டுமானால்.திரு அருட்பாவை நன்றாக படியுங்கள்இல்லையேல் எங்களிடம் நேரில் வாருங்கள் உங்களுக்கு சரியான விளக்கம் தருகிறோம்.தயவு செய்து இது போன்ற பொய்யான கட்டு கதைகளை வெளியிடாதீர்கள் .

வள்ளலாருக்கும் தைப பூசத்திற்கும் சம்பந்தமில்லை வள்ளலார் சித்திபெர்றது தைப்பூசத்தன்று அவ்வளவுதான் .அன்று தைப்பூசமாக இருந்தது, .உங்கள் சாத்திரக் கணக்கும் அதுக்கும் சமந்தமில்லை .வள்ளலார் சாதி மதம் சமயம் சாத்திரங்களுக்கு அப்பாற பட்டவர் .அவரை புரிந்து கொள்ள தனி அறிவு வேண்டும் .உங்களைப் போன்ற அறிவு உள்ளவர்களுக்கு புரிய முடியாது .

முருகன் மீது பாடல் இயற்றி உள்ளார் .முருகன் அவர்க்கு காட்சி தந்தார் என்பது முற்றிலும் பொய்யானது .அதுவும் கட்டுக் கதைதான .முருகன் கண்ணாடியில் காட்சி தந்தார் என்பது .முருகன் என்பது அறிவு ,தன்னுடைய கண்களில் உண்மையான அறிவு விளக்கம் இறைவன் தந்தார் என்பது பொருள் .கண் நாடியில் கண்டேன் என்கிறார் .அதை புரியாமல் அனைவரும் உளறிக் கொண்டு இருக்கிறார்கள் .

வள்ளலார் அருட்பெரும் ஜோதியால் வருவிக்க உற்றவராகும் .அவருக்கு அனைத்தும் தெரியும் .அவர் ஓதாமல் உணர்ந்தவராகும் .அவருக்கு எந்த தெய்வமும் கல்வி போதிக்க வில்லை .உண்மையான அருட்பெரும்ஜோதி என்னும் அருள்ஒளிதான்அவருக்கு அனைத்தையும் உணர்த்தியதாகும் .

உங்கள் கருத்தை உடனடியாக அடித்து விடுங்கள் .அதுவே உங்களுக்கு நல்லதாகும் இல்லையேல் உங்களுக்கு தேவையில்லாத சிரமங்கள் ஏற்பட்டுவிடும் .அறிந்தோ அறியாமலோ எழுதி விட்டீர்கள்.அடித்து விடுங்கள் ஆண்டவர் மன்னித்து விடுவார் நாங்களும் மன்னித்து விடுகிறோம் .இவைபோல் பலபேர் விபரம் தெரியாமல் எழுதி மாட்டிக் கொண்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டார்கள் .அவர்கள் அடைந்த துன்பத்திற்கு அளவே இல்லை என்பதை உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன் .மறப்போம் மன்னிப்போம் என்ற முறையில் இதை தெரியப்படுத்திக் கொள்கிறேன் .

அன்புடன் --ஆண்மநேயன் கதிர்வேலு 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு