செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

உண்மையை அறியும் வழி !

கேள்விகள் நியாயமானது /அதற்கு பதில் சொல்ல அனுபவ அறிவு வேண்டும் .அந்த அனுபவ அறிவு மனிதன் எழுதிய நூல்களில் கிடைக்காது .படித்து உணர்ந்து அறிந்து சொலவதெல்லாமே நூல்கள்  வாயிலாகத்தான்.அதனால் உண்மை இந்த உலகத்தில் மறைக்கப் பாட்டு விட்டது .உண்மையை உணர்ந்தவரும் இல்லை ,உண்மையை சொன்னவரும் இல்லை .ஆதலால் இந்த கேள்விகள் பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் மனதில் நிலைத்து விட்டன .இன்று விஞ்ஞானம்,அறிவியல் வளர்ந்து விட்டதாக சொல்கிறார்கள் .விஞ்ஞானம் எங்கிருந்து வந்தது .இந்த உலகத்தில் இருந்துதான் வந்தது .இந்த உலகம் எங்கிருந்து வந்தது .யாரால் தோற்று விக்கப்பட்டது இதற்கு விஞ்ஞானம் பதில் சொல்ல முடியாது .அப்படி ஆராய்ச்சி மூலம சொன்னாலும் அவை தவறாகி விடுகின்றது,மனிதனுடைய அறிவு ஒரு எல்லைக்கு மேல் செல்லாது ,செல்ல முடியாது .ஆதலால் மரணம் அடையும் மனிதன் உண்மையை உணரமுடியாது.மரணம் அடையாமல் இருக்க வழி உண்டா ?என்பதை யாரும் கண்டு பிடிக்க முடியவில்லை .அதற்கு வழி கண்டவர்தான் நம்முடைய தமிழ் நாட்டில் தோன்றிய அருளாளர் திரு அருட்பிரகாச வள்ளலார் என்பவராகும் .இந்த உலகில் உள்ள அனைத்து கேள்விகளுக்கும் பதில் சரியாக சொன்னவராகும்.அவர் எழுதியது திரு அருட்பாவாகும் .அவர் மனித தேகத்தில் இருந்து எழுதியது ஒருபாகம் .அருள் என்னும் ஒளி தேகத்தில் எழுதியது ஒரு பாகமாகும் .மனித தேகத்தில் இருந்து எழுதியது பொய்யான தத்துவங்கலாகும்.அருள் தேகத்தில் இருந்து எழுதியது .உண்மையாகும் .அதை புரிந்து அறிந்து கொள்ள தனி அறிவு வேண்டும் /அந்த தனி அறிவுக்கு ஒருமை வேண்டும் .அந்த ஒருமை என்பது,சாதி மதம் சமயம் இனம் தேசம் போன்ற எந்த பற்றும் இல்லாமல் இருப்பது ஒருமை என்பதாகும் .அந்த ஒருமையுடன் திரு அருட்பாவை படித்தால் பொது உண்மை தானே வரும் அப்பொழுது நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் உண்மையான பதில் கிடைக்கும் .இன்மேல் மக்களை யாரும் பொய் சொல்லி ஏமாற்ற முடியாது .உண்மையை உணரும்  காலம் வந்து விட்டது.ஓர் அனவிற்கு அடியேன் உண்மையை உணர்ந்துள்ளேன் என்பதை உங்கள் முன் தைரியமாக சொல்லிக் கொள்கிறேன் .உங்கள் சந்தேகம் எதுவாக இருந்தாலும் அதற்கு அனுபவமான விடைகள் இருக்கின்றன. இதற்கு பணம் பொருள் போன்ற எந்த சன்மானமும் தேவை இல்லை .நேரில் வந்தால் சந்தேகங்களுக்கு தெளிவடையலாம் .இல்லையே நீங்கள் எங்கு வரச சொல்லுங்கள் அங்கு வருகிறேன் .இந்த உலகத்தில் அனைவரும் உண்மையை தெரிந்து உண்மையுடன் வாழ வேண்டும் .இதுவே என்னுடைய பேராசையாகும் .அன்புடன் --உங்கள் ஆண்மநேயன் --கதிர்வேலு .       

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு