வியாழன், 11 ஆகஸ்ட், 2011

கடவுளுக்கு கோவில் தேவையா?கடவுளுக்கு கோவில் தேவையா?

 எவ்வளவுதான் படித்திருந்தாலும் எவ்வளவுதான் விஞ்ஞானம் வளர்ச்சிப் பெற்று இருந்தாலும் .இன்னும் இது போன்ற அறியாமையில் வாழும் மக்களை பார்த்தால் வேதனையாக இருக்கிறது .அம்பாள் என்றால் ஏன்ன? கோவில் என்றால் ஏன்னா? கோவில் கட்டி விட்டால் மக்கள் துன்பங்கள் எல்லாம் ஒழிந்து விடுமா?உலகம் முழுவதும் கோவில்கள் உள்ளனவே ஏன் மக்கள் துன்பம் தீரவில்லை .சிந்திக்க வேண்டாமா? துன்பப்படும் உயிர்களுக்கு உபகாரம் செய்யாமல் கல்லுக்கும் மண்ணுக்கும் செலவு செய்வது எவ்வளவு அறியாமைகலாகும் .இதைத்தான வள்ளலார் கலையுரைத்தக் கற்பனையை நிலைஎனக் கொண்டாடும் கண்மூடி பழக்கமெல்லாம் மண் மூடிப்போக என்றார் .

இந்த உலகத்தை படைத்த இறைவனுக்கு தான் குடியிருக்கும் இடம் எங்கு என்பது தெரியாதா?
அறியாத மக்களைப் பார்த்துக் கேட்கிறார் கடவுள் .நான் உன்னுள்ளே உயிர் ஒளியாக இருந்து உன்னை இயக்கிக் கொண்டு உள்ளேன் அதை தெரிந்து கொள்ளாமல் என்னைப்போய் வெளியில் தேடிக் கொண்டி உள்ளாயே உனக்கு அறிவு கொடுத்தும் அறிவை தெளிவுபடுத்தாமல் மழுங்க வைத்து விட்டாயே ,உனக்கு மனித உடம்பு கொடுத்ததே தப்பாய் போச்சு இனிமேல் உனக்கு அறிவு இல்லாத மிருக உடம்பு கொடுத்து அதில் இருந்தது கொள்கிறேன் என்று கடவுள் நினைத்தால் என்னவாகும் என்பதை சிந்தியுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு