திங்கள், 8 ஆகஸ்ட், 2011

சரோஜா நாராயணன் அவர்களுக்கு கடிதம் !


 • சுமார் ஒரு மணி நேரம் முன்பு
  Saroja Narayanan
  • வணக்கம் ஐயா,என்னுள் ஒரு சிரு சந்தேகம். தங்களின் உதவி தேவைப்படுகிறது.
   அவனது அருளில் அனைவரும் அமைதி, என்ற வரிகள் வாள்ளலார் பாடல்களில்
   எங்கேயாவாது உள்ளனவா? இது பதிகடத்தின் கடைசி வரியாக இருக்கக்கூடும் என நினைக்கின்றேன்.
 • ஒரு நிமிடத்துக்கு முன்
  Kathir Kathirvelu
  • அன்புள்ள சரோஜா அவர்களுக்கு வணக்கம் .

   அவனது அருளில் அனைவரும் அமைதி ,என்ற வரிகள்
   திரு அருட்பாவில் எங்கும் இல்லை .அதேபோல் கடவுளை
   மரியாதைக் குறைவாக எங்கும் இருக்காது .உயர்ந்த நிலையில்
   உள்ள கடவுளை
   அருட்பெரும் ஜோதி ஆண்டவரே!
   .அருட்பெரும் ஜோதி கடவுளே! .
   சர்வ வல்லபராகிய தனித் தலைமைக் கடவுளே !
   எல்லாம வல்ல இயற்கை உண்மைக கடவுளே !
   எல்லாம் உடைய இயற்கை விளக்கக் கடவுளே !
   எல்லாம் ஆகிய இயற்கை இன்பக் கடவுளே !
   அருட்பெரும் ஜோதித் தனித்தலைமைக் கடவுளே !
   சத்திய ஞானானந்தத் தனித் தலைமைக் கடவுளே !
   அருட்பெரும் ஜோதிக கடவுளே!
   சுத்த சன்மார்க்கக் லட்சிய சத்திய ஞானக் கடவுளே!
   அருட்பெரு வெளியின் கண்ணே அருட்பெரும் சோதி
   வடிவராகி விகற்பமில்லாது விளங்கு கின்ற மெய்ப் பொருட் கடவுளே!
   அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாம் உடைய பேரருட்
   பெருஞ்ஜோதிப் பெருந்தகைக் கடவுளே!
   எல்லாம் மானவராயும்,ஒன்றும் மல்லாதவராயும் எல்லா
   அண்டசராசரங்களின்அகத்தும் புறத்தும் நிறைந்து விளங்குகின்ற
   தனித்தலைமைக் கடவுளே !
   இயற்கைத் தனிப்பெருங் கருணைத் தனிப்பெரும் பதியாகிய தனித்தலைமைக் கடவுளே !
   பெருங்கருனைப் பெரும்பதியாகிய கடவுளே !
   தனித்தலைமைப் பெரும்பதியாகிய பெருங்கருணைக் கடவுளே!
   கருனாநிதியாகிய கடவுளே!
   தாயினும் சிறந்த தயவுடையக் கடவுளே!
   களைப்பறிந்து உதவும் கருணைக் கடலாகிய கடவுளே!
   சர்வ வல்லபராகிய தனித்தளைமைக் கடவுளே !
   எல்லாம் உடைய அருட்பெரும் ஜோதி அற்புதக் கடவுளே!
   எல்லாமாகிய தனிப்பெரும் தலைமை அருட்பெரும் ஜோதி ஆண்டவரே !
   அருட்பெரும் ஜோதி ஆண்டவரே !
   ''ஓ '' ஒப்பு உயர்வின்றி விளங்குகின்ற ஒருவரே !

   தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம் வந்தனம் !

   என்று அருட்பெரும்ஜோதி ஆண்டவரை போற்றி புகழ்ந்துள்ளார் வள்ளலார் .
   இந்த உலகில் உள்ள ஞானிகள் கண்ட கடவுள் தன்மை வேறு .
   வள்ளலார் கண்ட உண்மைக கடவுள் தன்மைவேறு, என்பதை மக்கள்
   புரிந்து கொண்டால் மக்களின் குழப்பம் தீர்ந்து விடும்
   எல்லாக் கடவுளர்களுக்கும் .எல்லா தெய்வங்களுக்கும் வேறுபட்டவர்
   எல்லாவற்றிக்கும் முதன்மையானவர் .எல்லாவற்றையும் இயக்கிக்
   கொண்டு இருப்பவர்தான் அருட்பெரும் ஜோதி ஆண்டவர் என்பவராகும் .
   அவருக்கு மனித உருவமோ மற்றைய வேறு உருவமோ கிடையாது .
   அவர் அருள் ஒளியாக உள்ளார் .அருட்பெரும் ஜோதியாக உள்ளார்
   என்பதை உலக மக்களும் ,சம்யவாதிகளும்,மதவாதிகளும் அறிந்து
   புரிந்து கொண்டால் உலகம் அமைதி பூங்காவாக மாறும் .
   உலக உயிர்கள் துன்பம் துயர மற்ற சுதந்திரமாக வாழும் .
   இதுவே உலக மக்களுக்கு கிடைத்த சுதந்திரமாகும் ..

   உங்கள் அனைவருக்கும் அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் அருள்
   கிடைக்கும் .கடவுள் ஒருவரே அவரே அருட்பெரும் ஜோதி ஆண்டவர்
   என்ற உண்மையை உணர்ந்து உண்மையுடன் வாவோம் .

   அன்புடன் உங்கள் ஆன்மநேயன் -கதிர்வேலு.

   8 ஆகஸ்ட், 2011 9:04 am அன்று, "”பேஸ்புக்”" <

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு