புதன், 10 ஆகஸ்ட், 2011

உயிர்களை காப்போம் உயிர்நலம் பெறுவோம் !

கடவுள் தூய்மையானவர் கருனையானவர் .நாமும் தூய்மையாகவும் கருனையாகவும் இருக்க வேண்டும் .கடவுள் இந்த உலகத்தை படைத்தது அனைத்து உயிர்களும் வாழ்வதற்கு என்பதாகும் மனிதனுக்கு அறிவு வழங்கப்பட்டுள்ளது மனிதன் வாழ்வதற்கு வாயில்லாத பேசாத எந்த உயிர்களையும் கொளைசெய்யக்கூடாது .அதன் மாமிசத்தை அதாவது இறைச்சியை உண்ணக்ககூடாது.அப்படி செய்தால் கடவுளின் கருணையும் அருளும் நமக்கு கிடைக்காது .இந்த உலகத்தில் உண்டாகும் துன்பம் துயரம் குழப்பம் வருவதற்கு இதுவே முக்கிய காரணமாகும் .இதை எந்த மதமும் சமயமும் மக்களுக்கு போதிக்கவில்லை .நாம் தவறு  செய்து கொண்டு கடவுள் நேசித்தால் கடவுள் கருணைக் காட்டமாட்டார் .கடவுளை வணங்க்குகிரவர்கள் எந்த உயிர்களையும் அழிக்கக் கூடாது என்பதை முதலில் புரிந்து அறிந்து கொள்ள வேண்டும் .இதை வள்ளலார் அவர்கள் அதிகமாக வலியுறுத்தி கூறியுள்ளார்கள் .உயிர்க் கொலையும் புலை புசிப்பும் உடையவர்கள் எல்லாம் புற இனத்தார் என்றும் உயிர்கொளையும் புளைபுசிப்பும் இல்லாதவர்கள் அக இனத்தார் என்றும்,இரண்டு பிரிவுகளாக பிரித்துள்ளார் .இந்த உலகத்தில்உள்ள மக்களை  இரண்டு பிரிவாக பிரித்துள்ளார் .புலால் உண்பவர்கள்,புலால் உண்ணாதவர்கள் .இவர்களில் புலால் உண்ணாதவர்கள் கடவுளை நேசிக்க உரிமை உள்ளவர்கள் .மற்றவர்கள் கடவுளைப்பற்றி பேச தகுதியற்றவர்கள் என்கிறார் வள்ளலார் .இது நான் சொல்லவில்லை கடவுளின் ஆணையாகும் .இறைவனுடைய சட்டமாகும் .இறைவனுடைய  சட்டத்தை மீறலாமா? அப்படி மீறுபவர்களுக்கு இறைவனால் கொடுக்கப்படும் தண்டனைதான் துன்பம் துயரம் .அச்சம் பயம் மரணம் என்பதாகும் .அதனால் கடவுளை தண்டனையில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் உயிர் கொலை செய்யக் கூடாது புலால் அதாவது இறைச்சி உண்ணக கூடாது.இவற்றை மனிதனாக பிறந்த அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் .இதுவே கடவுள் வழிபாடாகும் .உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு .ஜீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவு கோலாகும் .உயிர்களை காப்போம் உயிர்நலம் பெறுவோம் .--அன்புடன் ஆன்மநேயன் --கதிர்வேலு .    

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு