செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

அனைத்தும் பொய்யான நூல்கள் !

அனைத்தும் பொய்யான நூல்கள் !


கண்டதெல்லாம் அநித்தியமேகேட்டதெல்லாம் பழுதே !
கற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே !
உண்டது எல்லாம் மலமே உட கொண்டது எல்லாம் குறையே !
உலகிலீர் இது வரையில் உண்மை அறிந்திலிரே!
விண்டதினால் என் இனி நீர் சமரச சன்மார்க்க
 மெய் நெறியைக் கடை பிடித்து !மெய்ப்பொருள் நன்கு உணர்ந்ததே !
எண்டகு சிற்றம் பலத்தே என் தந்தை அருள் அடைமின் !
இறவாத வரம் பெறலாம் இன்பம் முறலாமே!--


என்கிறார் வள்ளலார் அதனுடைய உண்மை என்ன வென்றால் இதுவரையில் யாரும் உண்மையை முழுமையாக சொல்லவில்லை என்பது தெளிவாகிறது.இவையாவும் சொல்லி விட்டு இதை நான் சொல்லவில்லை எல்லாம் வல்ல அருட்பெரும் ஜோதி ஆண்டவர் என்னுள் இருந்து சொல்லச சொன்னார் அதை நான் சொல்லுகிறேன் என்கிறார் வள்ளலார் .நான் யார் எனக்கு எனஓர் ஞான அறிவு ஏது ,நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான் .என்னை ஒரு கருவியாக பயன் படுத்தி மக்களுக்கு சொல்லச சொன்னார் நான் சொல்லுகிறேன். அதற்குக் காரணம் அவர் என்னுள் இருந்து சொல்லும் அளவிற்கு என்னுடைய உடம்பை ஒளி உடம்பாக மாற்றி இருந்தேன்

.அதனால் என் உடம்பில் புகுந்தார்-- .நீங்களும் அப்படி உங்கள் உடம்பை மாற்றினால் உங்கள் உடம்பிலும் வருவார் உங்களுக்கு உண்மைகளை தெரிவிப்பார் .இது மாய ஜாலங்கள் கிடையாது அறிவியல் மாற்றமாகும் .வேதியல் மாற்றமாகும் .விஞ்ஞான மாற்றமாகும் .அணுவை மாற்றுவதாகும் நம் உடம்பு அணுக்களால் பின்னப்பட்டதாகும் .அந்த அணுக்கள் எப்படி சேர்ந்தது என்பதை புரிந்து கொண்டால்,அதை எப்படி பிரிப்பது என்பதை அறிந்து கொள்ளலாம்.இந்த உலகம் எல்லாம் அணு மயம் ,அதில் எத்தனை விதமான அணுக்கள் உள்ளன என்பதை இதுவரையில் விஞ்ஞானம் கண்டு பிடிக்க வில்லை .

கருவியில் அகப்படும் அணுக்களைக் கண்டு பிடித்துள்ளார்கள், எந்த கருவிகளுக்கும் அகப்படாத அணுக்கள் நிறைய உள்ளன. .

அனைத்து அணுக்களையும் கண்டு பிடித்தவர்தான் வள்ளலார் என்னும் அருள் விஞ்ஞானியாவார்.ஆதலால் இனிமேல் உண்மைக்கு புறம்பான எந்த கதைகளும் செல்லுபடியாகாது .ஆதலால் பழைய குப்பைகளை தள்ளி விட்டு உண்மையை அறிய தயாராகுங்கள் .இனிமேல் உண்மையை அறிய திரு அருட்பாவை விட்டால் வேறு நூல்கள் கிடையாது .உலகில் உள்ள அனைத்து நூல்களும் செய்திகளும் ,பொய்கலந்த நூல்களாகும்.

மனிதனை பன்படுத்தாத புத்தகங்கள் இருந்து என்ன பயன்? மற்ற வியாபாரம் போல் புத்தக வியாபாரம் நாட்டில் நடந்துக் கொண்டு உள்ளன .மனிதனை திருத்த எத்தனை புத்தகங்கள் .அத்தனையும் இருந்தும் என் மனிதன் திருந்தவில்லை என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும் .மனிதன் மனிதனாக வாழ்வதற்கு ஏதாவது ஒரு புத்தகம் உள்ளதா/?

இந்த உலகத்தில் சாதிக் கலவரம், சமயக்கலவரம்,மதக்கலவரம் இனக்கலவரம் நடந்து கொண்டு இருப்பது எதனால் அத்தனையும் அவரவர்கள் மனதில் தோன்றியதை சொல்லால் செயலால் எழுத்தால் வந்ததுதானே!

அதைப்பற்றி வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்களில் ஒன்று ;--  

சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச சந்தடிகளிலே கோத்திரச சண்டையிலே
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்
அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே

என்று இது போன்ற பல்லாயிரம் பாடல்களில் உண்மை நிலையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்கள் .இன்னும் மக்கள் வள்ளலாரை புரிந்து கொள்ளவில்லை .அதற்கு காரணம் சமய மதவாதிகள்தான் காரணமாகும் .

வள்ளலார் கொள்கை மக்கள் மத்தியில் பரவி விட்டால் .மக்கள் திருந்தி விட்டால்.சமயவாதிகளும் மதவாதிகளும் பொய் சொல்லி கொள்ளை அடிப்பது பறிபோய்விடும் என்பது அவர்களுக்கு தெரியும் .

ஆதலால் வள்ளலாரை ஒரு சமய மதவாதியாக சித்தரித்து வைத்துள்ளார்கள் .அதனால் தான் வள்ளலார் கொள்கைகள் வெளியே வராமல் சமயவாதிகள் கையில் சிக்கிக் கொண்டன .உண்மையை யாராலும் தடுத்து நிறுத்தி விட முடியாது .திரு அருட்பா உண்மையை சொல்லும் நூலாகும். .

வள்ளலார் கொள்கைகளை யாரும் தடுத்து நிறுத்தி விட முடியாது அவருடைய அவர் எழுதிய திரு அருட்பா மாபெரும் சக்தி வாய்ந்தது .அதை தடுத்து நிறுத்த யாராலும் முடியாது.தடைகளை தூக்கி எரிந்து விட்டு மக்கள் கைகளுக்கு வந்து விட்டது .இனிமேல் மக்கள் பார்த்துக் கொள்வார்க்கள்.      

திருக்குறள் உலகப் பொது மறை என்று சொல்லுகிறோம் ஏன் திருக்குறளைப் படித்து திருந்த வில்லை மக்கள் !அப்போது அதிலும் ஏதோ ஒரு குறை இருக்கிறது .அதில் முழு உண்மை இருந்து இருந்தால் கற்றது எல்லாம் பொய் என்று சொல்லி இருக்க மாட்டார் .வள்ளலார்

.முதன் முதலில் தமிழ் நாட்டில் திருக்குறளுக்கு,திருக்குறள் வகுப்பு வைத்து நடத்தியவர் வள்ளலாராகும் .

ஆதலால் நான் வள்ளலாரைப் பின் பற்றுவதால் சொல்லுகிறேன் என்று தவறாக நினைத்து விடாதீர்கள் .நீங்கள் அனைவரும் என்னுடைய ஆன்மநேய அன்புடையவர்கள் என்பதால் இதை சொல்லுகிறேன் .எனக்கு சாதி மதம் சமயம் .இனம் தேசம் என்ற வேறுபாடுகள் கிடையாது இதை சத்தியமாக சொல்லுகிறேன் .எல்லோரும் ஆண்டவருடைய குழைந்தைகள் நாம் எல்லோரும் சகோதரர்கள் என்ற உரிமையோடு சொல்லுகிறேன் .---அன்புடன் ஆன்மநேயன்--கதிர்வேலு.       

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு