வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

கடவுள் என்பது என்ன ? யார் அந்தக் கடவுள் !

கடவுள் என்பது என்ன ? யார் அந்தக் கடவுள் !

உலகம் தோன்றியக் காலத்தில் இருந்து மனிதன் அறிவு வளர்சசிக்கும் வாழ்க்கை வசதிக்கும், தேவையானது என்பது எவை ?உண்ண உணவு,உடுக்க உடை,இருக்க இடம்,இவைதான் தேவைப்பட்டது இவை அனைவருக்கும் சமமானதாக இருக்கவேண்டும் என்பது இந்த மத வாதிக்களுக்கும் சமயவாதிகளுக்கும் தெரியாமல் போனது ஏன் ?மதத்தின் பேரால் சமயத்தின் பேரால் சாதிகளைப் பிரித்து ,உயர்ந்தவன் தாழ்ந்தவன் ,என்ற பாகுபாடு வர யார்க் காரணம் ?கடவுளை பெயரால் அல்லவா பிரித்து வைத்தார்கள்.கடவுளுக்கு உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இருக்குமா?அப்படி இருந்தால் அவர் கடவுளா?கடவுளை வழிபட,கடவுளிடம் பேச கடவுளிடம் அருள் வாங்க,கடவுளுக்கு அபிஷ்கம் ஆராதனை செய்ய உயர்ந்த சாதிக் காரன்தான் செய்ய வேண்டும் என்ற நிலை எப்படி வந்தது ?சிந்திக்க வேண்டாமா?உழை க்கின்றவன் தாழ்ந்தவன் சோம்பேறி உயர்ந்தவனா?உழைக்கின்றவன் கடவுளை காணமுடியாது ,கடவுளை தொட்டே பார்க்க முடியாது.இதுதான் கடவுள் கொள்கையா?
கடவுள் எல்லாருக்கும் பொதுவானவன் ,அப்படி இருக்க சாதிக்கு ஒருகடவுள் ,சமயத்துக்கு ஒருகடவுள், மதத்துக்கு ஒரு கடவுளா ?இது என்ன நியாயம் இதுவா கடவுள் கொள்கையாகும்.அதைவிட பெரிய கடவுள் ,சிறிய கடவுள்,புலால் சாப்பிடும் கடவுள்,புலால் சாப்பிடாத கடவுள் ,உயிர்களை பலி வாங்கும் கடவுள்,உயிர்களை பலி வாங்காதக் கடவுள், பேய் பிடிக்கும் கடவுள் ,பேயை விரட்டும் கடவுள,குலத் தெய்வக் கடவுள் காட்டேரி ,கருப்பன் ,மூக்கன்,காளி, பாத்திரக்காளி,போன்ற விகாரமானக் கடவுள் இதுவா கடவுள் கொள்கை எதற்கும் ஒரு வரம்பு வேண்டாமா ?

இதுவா மனிதனை மனிதனாக்குவது உங்கள் கடவுள் கொள்கை சிந்திக்க வேண்டாமா ?மனிதனை முட்டால்களாக்கியது மதக கொள்கைகளும் சமயக் கொகைகளும்,அண்டம் விட்டு அண்டம் பாயும் ஆணுக்களின் விசித்திரங்கள்,உயிர்களின் ஆற்றல்கள் இயற்கையின் அற்புத விநோதங்கள் அளவிட முடியாத அளவிற்கு இயங்கிக் கொண்டு இருக்கும் கடவுளின் சக்தியை ,அளவிட முடியுமா ?

அந்த மாபெரும் சக்தி வாய்ந்தக் கடவுளை ,பலபேர் சேர்ந்து கல்லையும் மண்ணையும் சிமேன்டையும் வைத்துக் கட்டிவிட்டு ,அதில் ஒரு கல்லையும் ,மண்ணையும் செம்பையும் ,தங்கத்தையும் வைத்து கடவுள் என்று பெயர் வைத்து மக்களை ஏமாற்றி வாழ்ந்தது போதும் .இனி மக்கள் ஏமாற தயாராக இல்லை .இனிமேலும் பேசாத சிலையை கடவுள் என்றும் சக்தி இருக்கிறது என்றும் ஏமாற்ற முடியாது .

இவை நம் இந்து மதத்துக்கு மட்டும் இல்லை எல்லா மதத்துக்கும் பொதுவானதாகும் .ஒவ்வொரு மதத்துக்கும் ஒரு கடவுள் என்ன அநியாயம் இது? சூரியன்,சந்திரன்,நட்சத்திரங்கள் ,ஐம்பூதங்கள் போன்ற இயற்கை பொதுவாக இருக்கும் போது,நாட்டுக்கு நாடு கடவுள் வித்தியாசப் பாடுவாரா?மக்கள் சிந்திக்க வேண்டும் .

படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை கடவுள் கொல்கைகளில் ஏமாற்றம் அடைந்தவர்களாகவே இருக்கிறார்கள் .விஞ்ஞானம் ஆராய்ச்சிகள் 
செய்பவர்களும் மூட நம்பிக்கையில்தான் இருக்கிறார்கள் .அனைவரும் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் .

உலக மக்கள் அறியாமையில் இருப்பதால்தான் அவர்கள் அறியாமையைப் போக்குவதற்க்குத்தான வள்ளலார் இந்த உலகத்திற்கு வந்தார் .அவர்தான் இவ்வளவு உண்மைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்கள் .

மனிதன் மனிதனாக வாழ்வது எப்படி என்பதை தெளிப்படுத்தியவர் வள்ளலார் .அவர் எழுதிய திரு அருட்பாவைப் படித்து உணர்ந்த பிறகுதான எனக்கு அறிவு விளக்கம் உண்டானது .இந்த உலகத்தில் சாதி மதம் சமயம் .இருக்கும் வரை உலகம் உருப்படியாகாது .அனைத்தும் ஒழிய வேண்டும் .ஒரே கடவுள் அவர் ஒளியாக உள்ளார் .அவர்பெயர் அருட்பெரும்ஜோதி !அவர் மனிதரல்ல !மனித உருவமில்ல! பல கோடி அண்டங்களை இயக்கிக் கொண்டு இருக்கும் மாபெரும் அருள் சக்தி வாய்ந்த பெரோளியாகும் என்பதை,கண்டு அதனுடன் கலந்து உண்மையை இந்த உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளார்கள் .

வடலூரில் கோவில் என்றும், ஆலயம் என்றும்,மசூதி என்றும்,திருசசபை என்றும் கட்டாமல்,''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை''என்று அமைத்துள்ளார் .அங்கே ஒளிதான் கடவுள் .அங்கே வழிபாடு கிடையாது .சடங்குகள் கிடையாது ,சாதி சமயம் மதம் என்ற பாகுபாடுகள் கிடையாது .அனைத்து உலக மக்களுக்கும் பொதுவான அமைப்பை அமைத்துள்ளார்கள் .

ஒவ்வொரு உடம்பிலும் உயிர் எப்படி இயங்குகிறது என்பதை காட்டும் அமைப்பே அந்த ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையாகும் ''
வள்ளலார் சாதி மதம் சமயம் போன்றவை அனைத்தும் பொய்யானது என்பதை பல்லாயிரம் பாடல்களிலும் உரை நடைப் பகுதிகளிலும் பதிவு செய்துள்ளார்கள் படித்து உணர்ந்து அறிந்து தெளிந்து மனிதன் மனிதனாக வாழுங்கள் .அவர்கள் எழுதிய பாடல்களில் ஒன்று .

சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே 
சாத்திரச சந்த்டிகளிலே கொத்திரசசண்டையிலே 
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர் 
அலைந்து அலைந்து வீணே நீர் அழித்தல் அழகலவே 
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே ஞான 
நிருத்தமிடும் தனித் தலைவர் ஒருத்தர் அவர் தாமே 
வீதியிலே அருட்ஜோதி விளையாடல் புரிய 
மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே !

என்று தெரியப்படுத்தியுள்ளார் .மேலும் சிந்திப்போம் .
அன்புடன் ஆன்மநேயன் கதிர்வேலு. 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு