செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

மாயை என்பது நமக்கு எதிரி அல்ல !

மாயை என்பது நமக்கு எதிரி அல்ல .நமக்கு வேண்டியதை தரும்,மற்ற அனைத்து பொருளைத்தரும் அதிகாரம் மட்டும் மாயைக்கு உண்டு அருளைத்தரும் அதிகாரம் மாயைக்கு இல்லை .அருளைப்பெற வேண்டுமானால் மாயையில் இருந்து விடுபட வேண்டும் என்பது.என்னவென்றால் இந்த உலகத்தில் உள்ள எந்த பொருளும் நமக்கு சொந்தமானதல்ல என்பதை அறிவின் முலம உணரவேண்டும் அப்படி உணர்ந்து அருளைப் பெற முயற்ச்சிக்க வேண்டும்.அருளைப்பெற முயற்ச்சி செய்தால் அருள் கிடைத்து விடுமா என்றால் கிடைக்காது .அப்பொழுது என்ன செய்ய வேண்டும் .இதுவரையில் நாம் இந்த உலகத்தில் பல அனுக்கலான உயிர்களின் தொடர்பால் அனுபவித்து வந்து உள்ளோம் .இதற்க்கு மாயை என்னும் அதிகாரி துணை புரிந்து உள்ளது .ஆதலால் நாம் அனுபவித்த அனைத்தும் மாயையின் இடத்தில் திருப்பித் தரவேண்டும்.அதாவது வாங்கிய கடனை திருப்பி தரவேண்டும் திருப்பித் தராமல் இந்த உலகத்தை விட்டு வெளியே மாயை அனுப்பாது .இதற்க்கு நம் முன்னோர்கள் பல தவறான வழிகளை காட்டி மக்களை குழப்பி விட்டார்கள் .பொருள் மாயை தருவதாகும் அருள் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் தருவதாகும் .அருள் நாம் இந்த உலகத்திற்கு வரும்போதே நம்முடைய உயிர் என்னும் ஆன்மாவில் அருள் வைக்கப்பட்டுள்ளது.அந்த அருள்-- பொருள் என்னும் போகத்தினால் மறைந்து கொண்டு உள்ளது .அந்த மறைப்பை நீக்குவதற்கு மாயை தடையாக உள்ளது என்றார்கள் மாயை தடை இல்லை.நமது அறியாமையே தடையாகும் .அந்த தடையை நீக்க வேண்டுமானால் ஜீவகாருண்யமே வழி என்றார் வள்ளலார் அவர்கள்.உயிர் இரக்கமே வழியாகும்,உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றார், உயிர்இரக்கம் என்பது வாங்கிய கடனைத் திருப்பி தருவதாகும் .அப்படி உயிர்களுக்கு உபகாரம் செய்து கொண்டே வந்தால் உங்கள் கடன் தீருகின்றபோது மாயை உங்களுக்கு தடையாக இருக்காது.உங்கள் ஆன்மாவான உயிரில் அருளை மறைத்து கொண்டு இருக்கும் கதவு திறக்கப்படும் அந்த கதவுதான் ஆன்மாவை மறை த்துக் கொண்டு இருக்கும் திரைகலாகும் அந்த திரைகள் முழுவதும் நீங்கி விட்டால் அருள் என்னும் மாபெரும் பொக்கிஷம் நமக்கு கிடைத்து விடும்.இதைத்தான் கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்றார் வள்ளலார் .திரைகள் நீங்கியயதும்.மாயை நமக்கு எந்த தடையும் தராமல் அதுவே நமக்கு நல்ல வழிகாட்டும் ஆதாலால் நமக்கு மாயை எதிரி அல்ல.ஆண்டவர இட்ட கட்டளையை அவை முறையாக அனைத்து உயிர்களுக்கும் பாது காப்பாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது என்பதை நாம் உணரவேண்டும் . நாம் வள்ளலார் எழுதிய திரு அருட்பாவை முறையாக படித்தால் அனைத்து உண்மைகளும் தெளிவாக விளங்கி விடும் படித்து பயன் பெறுவோம் .அன்புடன் கதிர்வேலு.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு