திங்கள், 18 ஜூலை, 2011

ஞானம் பெற வழிகள் !

ஞானம் பெற வழிகள் !
எல்லாரும் இறைவனை அடைய வேண்டும் என்ற நோக்கில்... தியானம்மற்றும் யோகா என்ற பெயரில் எதை எதையோ செய்து கொண்டு இருகின்றனர். செய்வது நல்லதா இல்லையா என்பது இல்லை அது என்ன எத்தனாவது நிலை என்று கூட அறியாமல் செய்பவர்களே இங்கு அதிகம்.


இது எங்கிருந்து ஆரம்பிகிறது என்று பாப்போம்......ஆன்மிகத்தில் இதனைஞானிகள் நான்கு வகைகளாக பிரிகின்றனர்.

ஆம்.....

அவைகள் சரியை, கிரியை, யோகம் மற்றும் ஞானம்

இவைகள் ஒவ்வொன்றும் நான்கு நிலைகளாக பிரிகின்றன.........


சரியையில் சரியை,
சரியையில் கிரியை,
சரியையில் யோகம்,
சரியையில் ஞானம்.

கிரியையில் சரியை,
கிரியையில் கிரியை,
கிரியையில் யோகம்,
கிரியையில் ஞானம்.

யோகத்தில் சரியை
யோகத்தில் கிரியை
யோகத்தில் யோகம்
யோகத்தில் ஞானம்

ஞானத்தில் சரியை
ஞானத்தில் கிரியை
ஞானத்தில் யோகம்
ஞானத்தில் ஞானம்


சரியை, கிரியை, யோகம் மற்றும் ஞானம் என்ற ஒவ்வொரு நான்கு நிலையம் என்ன? 


சரியை என்பது.....சுத்தமாக இருப்பது மற்றும் ஆலயங்களுக்கு செல்வது.

கிரியை என்பது..... பூசை மற்றும் சில மந்திரங்கள் சொல்வது மேலும் கையினால் சில முத்திரைகள் போன்றவற்றை செய்வது.

யோகம் என்பது..... உடலால் செய்யும் சில யோகா முறைகள் அதாவது ஆசனங்கள் செய்வது.

ஞானம் என்பது.....முதல் மூன்றிலும் செய்வது என்ன வினையை தரும் மேலும் இதை செய்வதன் மூலம் என்ன பயன் என்று உணர்ந்து செய்வது. சுருக்கமாக சொல்வதானால் எது உயர்ந்தது மற்றும் முடிவானது என்பதை தெரிந்து செய்வது.


ஆனால் இப்படி ஆரம்பித்து 16 நிலைகளும் கடபதற்கு எதனை பிறவிகள்நமக்கு வேண்டுமோ என நமக்கு தெரியாது......................


எடுத்த எடுப்பிலே ஆன்மிகத்தில் 13வது நிலையை அடைய முடியும் என்று வள்ளலாரும் மற்றும் எல்லா சித்தர்களும் சொல்கிறார்கள்


எடுத்த எடுப்பிலே 12 நிலைகளை சுருக்கி யார் வேண்டுமானாலும் 13 வது நிலையை தொடங்க முடியும் என்று ஞானத்தை மிக அழகாக எல்லாரும் புரிந்து கொள்ள முடிய அளவில் சொல்லியும் மற்றும் உணர்த்தி காட்டியதாலே....  வள்ளல் பெருமான் என்று அன்புடன் அழைக்க பட்டார். மற்ற எந்த சித்தர்களுக்கும் இல்லாத "வள்ளல்" என்ற பெயர் வர காரணமே இதுதான்.

ஆம் வள்ளல் பெருமான் "ஞானத்தில் சரியை" என்ற 13வது நிலையில் இருந்தே தொடங்குகிறார். வள்ளல் பெருமான் திருஅருட்பா முழுவதும் அருளி இருப்பது ஞானம் மட்டுமே.

13வது நிலை என்ன?


இதுவரை இந்த 13வது நிலை என்பது மறைத்து வைக்கபட்டே வந்தது. அல்லது அவர் அவர்களுக்கு தெரிந்த தியானம் முறைகளை இதுதான் தியானம் என்று சொல்லி கொடுபவர்களின் பின்பே மக்கள் சென்றனர்.

கண்ணை மூடி கொண்டு எவராவது உங்களுக்கு தியானம் சொல்லி தந்தால் அது மிகவும் தவறு.................. வள்ளல் பெருமான் இந்த தியானம் பற்றிய தவறான கருத்தை "மண் மூடி போக என்று" சொல்கிறார். ஏன் வள்ளல் பெருமான் இப்படி சொன்னார் என்று நாம் சிறிது சிந்தித்து நகர்ந்தோமானால்
அதுதான் 13வது நிலை.

அந்த பாடல்

"கலை உரைத்த கற்பனை எல்லாம்
நிலை என கொண்டாடும்
கண் மூடி பழக்கம் எல்லாம் மண் மூடி போக"


இதைதான் வள்ளல் பெருமான் வருந்தி சொல்கிறார்

"முன் உள்ளவர்கள் உண்மையைத் தெரியவொட்டாது மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள். உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை."ஒரு இடத்தில வள்ளல் பெருமான்........பொற்சபை மற்றும் சிற்சபை என்று பாடுகிறார்... எங்கே?

"நினைந்து நினைந்து
உணர்ந்து உணர்ந்து
நெகிழ்ந்து நெகிழ்ந்து
அன்பே நிறைந்து நிறைந்து
ஊற்றெழும் கண்ணீர்
 அதனால்
உடம்பு நனைந்து நனைந்து
அருளமுதே நன்னிதியே ஞான நடத்தரசே
என்னுரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்ததும்
நாம் வம்மின் உலகியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம்
கண்டீர் புனைந்துரையோன் பொய்புகலேன்
சத்தியம் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகும் தருனம் இதுவே"

என்று பாடுகிறார்...............

இந்த பொற்சபை மற்றும் சிற்சபைகும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது...... எதனுடன்???

வேறு எதனுடன்.......  கரும்புடன்தான்.....


கரும்பு என்ன என்பதை அறிந்து கொள்ளுதல் 13வது நிலையில் நாம் கால் வைக்கிறோம் என்று பொருள்.

உதாரணதிற்கு......... பட்டினத்தார் கரும்பை பார்த்தவுடன் பரவசமடைந்து அதை இறுக பற்றி கொண்டு ஞானம் அடைந்தார் என்று அவர் வரலாறு சொல்கிறது.
இங்கு சிந்திக்க வேண்டியது....... கரும்பை ஏன் பற்றினார் மேலும் கரும்பை பற்றி யாரவது ஞானம் அடைந்திருகிரார்களா? என்றுதான்.  [இது பற்றிய பதிவு விரைவில்]


தயவு செய்து ஒருமுறை செல்லுங்கள்...... வள்ளல் பெருமான் கண்ட ஞான சபைக்கு...........இனி  ஞான சபை உள்ளே இருப்பது என்னவென்று பார்ப்போம் ...காலெடுத்து உள்ளே வைப்பதற்கு முன் ஞான சபையின் வாசலை பாருங்கள்..... அங்கேயே வள்ளல் பெருமான் சொல்லி விட்டார். 

கொலால்/புலை தவிர்த்தவர் மட்டும் உள்ளே வரவும் என்று அங்கேயே  எழுதி வைத்து விட்டார்...

நீங்கள் ஆன்மீகத்தில் ஒரு அடியாவது எடுத்து வைக்க விரும்பினால் இதுதான் அந்த முதல் படி. சுத்த சைவத்துக்கு மாறாமல் நீங்கள் இமய மலைக்கு சென்றாலும் சரி, பாபா குகைக்கு சென்றாலும் சரி.... உங்களால் ஞானம் என்றால் என்னவென்று கூட புரிந்து கொள்ள கூட  முடியாது.

வள்ளலார் மட்டுமா சொல்லி இருக்கிறார்? 

திருவள்ளுவர், திருமூலர் போன்ற எல்லா தெய்வ திருமகன்களும் புலால் மறுத்தலைத்தான் சொல்லி இருகிறார்கள்

"தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் 
எங்கனம் ஆளும் அருள்"

நம் உடம்பின் சதையை பெருக்க இன்னொரு உயிரின் சதையை உண்பவனுக்கு எப்படி கிடைக்கும் அருள் என்று நச்சென்று கேட்க்கிறார்.

"கொல்லான் புலாலை மறுத்தானை கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்"

திருமூலர் பாடல்............

"பொல்லாப் புலாலை நுகரும் புலையரை 
எல்லாரும் காண இயமன்றன்  தூதுவர் 
சொல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்  
மல்லாகப் தள்ளி மரிதுவைப் பாரே"

புலால் உண்பவனை எமதூதன் நரகத்தில் தள்ளி தீயில் வதைப்பார் என்று  திருமூலர் ஞாநியும்தான் சொல்கிறார்.....

ஞான சபை உள்ளே நுழைந்தவுடன் நடுவில் ஜோதி தரிசனம் காட்டுவது அனைவரும் அறிந்ததே.........

ஆனால்  வலது பக்கம் "பொற் சபை" என்று ஒன்றும் இடது பக்கம் "சிற் சபை" என்று ஒன்றையும் வள்ளல் பெருமான் அமைத்து வைத்து இருக்கிறார். மேலும் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் காட்டுவது ஏன் என்றும் நிறைய மனிதர்களுக்கு தெரியாது!!!!


இதில் வள்ளல் பெருமான் "பொற் சபை" மற்றும் "சிற் சபை" என்று எதை சொல்ல வருகிறார் என்று பார்க்க வேண்டும்.

இதை பார்ப்பதற்கு முன்... நாம் வள்ளல் பெருமானின் தை பூச ஜோதி வழிபாட்டை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்

தை பூசம் அன்று காலை 6 மணிக்கு நீங்கள் ஞான சபை உள்ளே சென்று ஜோதி தரிசனம் பார்க்காமல் வெளியே நின்று பாருங்கள்...

நாம் அப்படி வெளியில் நின்று உற்று பார்க்க வேண்டும் என்றுதான் நடுவில் ஞான  சபையை கட்டி அதை சுற்றிலும் காலி இடமாக அமைத்தார்

இப்பொழுது நீங்கள் தை பூசம் அன்று சரியாக 6 மணிக்கு வெளியில் நின்று பார்த்தால்....

இடது பக்கம் அதாவது மேற்கு பக்கம் சந்திரனும், வலது பக்கம் அதாவதுகிழக்கு பக்கம் சூரியனும் ஒரே நேர்கோட்டில் நிற்கும் பொழுது நடுவில் ஞான சபையில் 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் காட்டுவர்

இது அனைத்தும் நம் உடம்பில் இருக்கிறது..... ஆம் சூரியன், சந்திரன், ஏழு திரைகள் மற்றும் ஜோதி இவை அனைத்தும் நம் உடம்பில் இருக்கிறது... இதை நமக்கு விளக்கவே  வள்ளல் பெருமான் சொன்னது.....


இந்த தத்துவம்தான் ஞான சபை உள்ளே வும்  இருக்கிறது.... ஆம் "பொற் சபை" பொன்னிற நிறத்திலும் "சிற் சபை" வெண்மை நிறத்திலும் காணப்படும்.பொற் சபை  - சூரியன்

சிற் சபை  - சந்திரன் இந்த சூரியனும், சந்திரனும் நம் உடம்பில் எங்கே உள்ளது என்று நாம்  கண்டு பிடிக்க வேண்டும்


ஓம்  என்ற வார்த்தையை நாம் எவ்வாறு பிரிப்போம்???

அ + உ + ம் என்றுதானே????

இதில் "அ" வும் "உ" வும் மறைந்து வருகிறது அதன் பொருள் என்ன??

அதன் பொருள் இதுதான்.......

பொற் சபை  - சூரியன் - அ

சிற் சபை  - சந்திரன் - உ

 

தமிழில் "அ" மற்றும் "உ" இன் எண் என்னவாக இருக்கிறது???ஆம் 8 மற்றும் 2 ஆக இருக்கிறது


பொற் சபை  - சூரியன் -  அ  -  8

சிற் சபை  - சந்திரன் -  உ  -  2ஒன்றுமே புரிந்து கொள்ள முடியாதவனை குறிக்க தமிழில் ஒரு  வழக்கம் உண்டு அதாவது...... 8 ம் வாய்ப்பாடு, 2 ம் வாய்ப்பாடு கூட  அவனுக்கு தெரியாது.... அவனிடம் போய் பேசி கொண்டிருகிறாய் என்று கேட்பார்கள்??   ஏன் அவ்வாறு 2, 8 ம் வாய்பாடை மற்றும் குறிக்கிறார்கள். அது ஏன் என்று என்றாவது சிந்தித்து இருக்கிறிர்களா?


ரெண்டு  - 2

எட்டு  - 8


வைத்தால்

தமிழ் ஞான மொழி என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள் ஞானிகள்.......

இப்பொழுது நீங்கள் திருமூலர் தெய்வத்தின் பாடலை இங்கு ஓப்பிட்டு  கொள்ளுங்கள்

"எட்டும் இரண்டும் அறியாத என்னை
எட்டும் இரண்டும் அறிவித்தான் என்நந்தி
எட்டும் இரண்டும் அறிவால் அறிந்தபின்
எட்டும் இரண்டும் இலிங்கமதாகும்"

இதை வள்ளுவ பெருந்தகை....

எந்த இரண்டு எழுத்து எண்ணாகவும், எழுத்தாகவும் இருக்கிறதோ அதை ............ என தகும் என்று சொல்கிறார்"எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு."

 


இப்படி உண்மையை பட்டென உடைத்து இருக்கிறார்.பொற் சபை  - சூரியன் -  அ  -  8  - வலது கண் 

சிற் சபை  - சந்திரன் -  உ  -  2  - இடது கண்.

 

ஆம் நம் கண் விழி வழி தான் நாம் கடவுளை அடைய முடியும்.
இதை தெரிந்து கொள்வதுதான் ஞானம்.... இதை சொல்லி கொடுத்து உணர்த்தி காட்டுபவ்ர்தான் உண்மையான ஞான சற்குரு. இதை சொல்லமால் மற்றதை எல்லாம் சொல்லி கொடுப்பவர்கள்.... குரு அல்ல.
 

உலக மக்கள் அனைவரும் இந்த உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தாலே இந்த உண்மையை இங்கு நாங்கள் சொல்கிறோம்.


சுத்தசன்மார்க்கத்திற்கு முதல்படி ஞானத்தில் யோகம என்னும் ஞான யோகம என்பதாகும் .ஆதலால்தான் வள்ளலார் அவைகள் சுத்த சனமார்க்க சுகநிலை பெறுக உத்தமன் ஆகுக ஓங்குக என்றார்கள் .

வள்ளலார் கட்டிய சுத்த சன்மார்க்கம் உண்மையான பெய்ப பொருளை காண்பதாகும் .

உலகினில் உயிர்களுக்கு உரும இடை யூறு எல்லாம்
விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க !

உலக உயிர்களுக்கு வரும் துன்பங்களை நீக்கி அவைகளின் மகிழ்ச்சியில் வரும் அன்பெனும் ஆற்றல் அமுதமாக மாற வழி செய்யும் என்பது வள்ளலார் வகுத்து தந்த வழியாகும் .

அன்புடன் கதிர்வேலு .   

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு