வியாழன், 7 ஜூலை, 2011

சமய சின்னங்கள் !


Kathir Kathirvelu திரு நீருக்கு சைவ சமயத்தில் பெருமை தந்து புகழ் பாடி இருக்கிறார்கள்.வைணவத்தில் நாமத்திற்கு புகழ் பாடி இருக்கிறார்கள்.கிருத்தவத்த​ில் சிலுவைக்கு புகழ் பாடி இருக்கிறார்கள்.இஸ்லாத்தில்​ குல்லாய்க்கு புகழ் பாடி இருக்கிறார்கள்.எல்லா மதங்களும் ஏதாவது ஒன்றை பிடித்துக் கொண்டு இருகின்றன.இவை யாவும் புறச சின்னங்களாகும்.யார் யார் எந்த மதத்தை சேர்ந்தவர்கள்,எந்த சமயத்தை சார்ந்தவர்கள் என்பதை அடையாளம்.காட்டி,மனித குலத்தை பிரித்து விட்டார்கள்

உலக மக்களை ஒன்று படுத்த,அனைவருக்கும் பொதுவான ஒரு புனித நெறியை தந்துள்ளார் வள்ளலார் அவர்கள் .அதுதான் சுத்த சன்மார்க்க தனி நெறியாகும்.அனைவரும் உண்மையான ஆண்டவரின் அருளைப்பெற வழி காட்டுவதாகும்.

அவர் உலக மக்களுக்காக ஒரு விண்ணப்பம் வைக்கிறார்கள் அவை ,

எல்லாம் உடைய அருட்பெரும்ஜோதி ஆண்டவரே !

இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளாகிய,சமயங்கள்,மதங்கள் மார்க்கங்கள் என்பவற்றின் ஆச்சார சங்கற்ப விகற்பங்களும் ,ஆசிரமம் முதலிய உலகாசார,சங்கற்ப விகற்பங்களும்,எங்கள் மனதில் பற்றாவண்ணம் அருள் செய்தல் வேண்டும்.

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை,எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும்,எவ்விதத்தும்,எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச செய்வித்தல் வேண்டும்.

எல்லாமாகிய தனிப்பெரும் தலைமை அருட்பெரும்ஜோதி ஆண்டவரே !

தேவரீர் திருவருட் பெரும் கருணைக்கு வந்தனம்! வந்தனம்!

இதில் இருந்து நாம் தெரிந்து கொள்வது யாதெனில் சாதி மதம் சமயம் யாவும் மனித நேயத்தை ஆண்மநேயத்தை பிரித்ததே அன்றி ஒன்று படுத்தவில்லை என்பது தெளிவாகிறது இல்லையா ?
எல்லா உலகத்திற்கும் எல்லாருக்கும் பொதுவான சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை அமைத்துள்ளார் வள்ளலார் அவர்கள் ,

அந்த உண்மை நெறியை கடைபிடித்து அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற்று அனைவரும் நலமுடன் வாழ்வோம்.

வள்ளலார் எழுதிய பாடல்களில் ஒன்று !

சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச சந்தடிகளிலே கோத்திரச சண்டையிலே
ஆதியிலே அபிமாநித்து அலைகின்ற உலகீர்
அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல்அழ்கலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே ஞான
நிருத்தமிடும் தனித் தலைவர் ஒருத்தர் அவர் தாமே
வீதியிலே அருட்ஜோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே !

என்று உலக மக்களை அழைக்கிறார் வள்ளலார் அவர்கள்.
உண்மையை அறிவோம் உண்மையுடன் வாழ்வோம்.

அன்புடன் --ஆன்மநேயன் கதிர்வேலு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு