வெள்ளி, 1 ஜூலை, 2011

அருள் !பொருள் !


கடவுள் எங்கும் நிறைந்தவர் அவரை துய அன்பால் நேசிக்க வேண்டும் ,அவர் என்றும் நம்மை விட்டு பிரியமாட்டார் ,அவர் படைத்த இந்த உலகத்தில்தான் நாம் வாழ்கிறோம்,இந்த உலகத்தில் நாம் வாழ்வதற்கு மட்டும்தான் உரிமை உண்டு ,அவர் படைத்த எந்த பொருளையும் நம்மால் அழிக்கவோ ஆக்கவோ முடியாது ,நாம் பேராசையினால் பொருள்களை சம்பாதிக்கிறோம் அப்படி சம்பாதித்த பொருள்களை நாம்
கொண்டு போகமுடியாது என்பதை தெரிந்தே தவறு செய்கிறோம் .

பொருள் இருக்கும் இடத்தில் ஆண்டவரின் அருள் இருக்காது.அனைத்துப் பொருள்களும் மற்றவர்கள் உழைப்பினால் வந்தது என்பதை உணர்ந்து,வந்த பொருள்களை அனைவருக்கும் மகிழ்ச்சியுடன்  கொடுத்து விட வேண்டும்.அப்படி கொடுத்த தருணத்தில் ஆண்டவர் நமக்கு கொடுக்க வேண்டியதை அவரே கொடுப்பார்.அதுவரையில் நாம் காத்திருக்க வேண்டும் .

ஆண்டவர் கொடுப்பது அருள்,அந்த அருள் நம்மை அழியாமல் பாது காக்கும் .அருள் கிடைத்தவர்களுக்கு மரணம் இல்லை ,அப்படி மரணத்தை வேன்றவர்தான் வள்ளலார் .

வள்ளலார் வழியில் செல்வோம் மரணத்தை வெல்வோம் மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

அன்புடன் கதிர்வேலு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு