புதன், 29 ஜூன், 2011

மரணம் அடையாமல் வாழலாம் !

ஆன்மநேய அன்புடையீர் அனைவருக்கும் வணக்கம் .நாம் அனைவரும் உலக உண்மையை தெரிந்து கொள்ளவேண்டும்.
நாம் வாழும் வாழ்க்கை வாழ்க்கை அல்ல,எவ்வளவு வசதி,வாழ்க்கை, புகழ்.பட்டம் ,பதவி இருந்தாலும்.இறுதியில் மரணம் அடைந்து விடுகிறோம்,அனைத்தையும் விட்டு விட்டு மறைந்து விடுகிறோம்,
மரணம் அடையாமல் வாழும் வாழ்க்கை உள்ளது என்பதை,இது வரையில் யாரும் கண்டு பிடிக்க முடியவில்லை.மரணம் என்பது இயற்கை என்று இருந்தோம்,ஆனால் அவை இயற்கை அல்ல செயற்கை என்பதை,கண்டு பிடித்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.ஒருவர்.

அவர் தமிழ் நாட்டில் தோன்றிய வள்ளலார் என்பவராகும்.அவரைப் பற்றியும் அவருடைய கருத்துக்களைப் பற்றியும் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.
அது மட்டும் அல்ல. உலகின் உண்மை ரகசியங்களையும் சொல்லியுள்ளார்கள்.இது வரை சொல்லி வந்தவர்கள் உண்மைக்கு மாறாக சொல்லியுள்ளார்கள்.அவைகளை நம்பி நாம் இது வரையில் ஏமாந்து போய் விட்டோம்.

இனிமேல் உண்மையை தெரிந்து கொள்ளும் தருணம் வந்து விட்டது.இதற்கு எந்த பணச செலவும் தேவை இல்லை.அறிவுதான் மூலதனம்.உங்கள் சந்தேகம் எதுவாக இருந்தாலும் கேளுங்கள் பதில் கிடைக்கும்.

அனைவரும் தெரிந்து மரணத்தை வென்று வாழ வேண்டும் இதுவே எங்களுடைய விருப்பமாகும் .

அன்புடன் --ஆன்மநேயன்-கதிர்வேலு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு