திங்கள், 27 ஜூன், 2011

Vallalar tirumurai the sixth. Letter to a friend


வள்ளலார் எழுதிய ஆறாம் திருமுறை.நண்பருக்கு கடிதம்.

ஆன்மநேய அன்புடைய சகோதரர் அவர்களுக்கு வணக்கம். வள்ளலார் ஆறாம் திருமுறையை வெளியிட வேண்டாம் என்று சொல்லவில்லை.மக்கள் அறியாமையில் இருக்கிறார்கள்,சாதி ,மதம் சமயம்,சாத்திரம் போன்ற பொய்யான கொள்கைகளை பின்பற்றி வருகிறார்கள்,உண்மையை எடுத்து சொல்லியும் புரிந்து கொள்ளாத அளவிற்கு,மக்கள் பொய்யான குப்பைகளை தன்னுடைய உயிரிலே (ஆன்மாவில் )பதியவைத்து இருக்கிறார்கள்.ஏன் என்னுடன் இருக்கும் நிங்களும் இதுவரையில் உண்மை என்ன என்று தெரிந்து கொள்ளாமல் இருக்கீர்கள்.ஆதலால் இப்பொழுது  ஆறாம் திரு முறை வெளியிட்டால் மக்கள் குழப்பம் அடைவார்கள்.காலம் வரும் போது வெளியிடலாம் என்று காலம் தாழ்த்துகிறாரே தவிர ,வெளியிட வேண்டாம் என்று கொள்ளவில்லை.வள்ளலார் உடன் இருந்த அணுக்கத் தொண்டர்கள் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையை பின் பற்றவில்லை என்று வள்ளலாரே வேதனையடைகிறார்.ஆதலால் அவர்கள் ஆறாம் திருமுறையை வெளியிட வள்ளலார்  விருப்பமில்லாமல் காலம் வரும் போது வெளியிடலாம் என்று சொன்னாரே தவிர,ஆறாம் திருமுறையை வெளியிட வேண்டாம் என்று சொல்லவில்லை.ஆறாம் திருமுறை முழுவதும் அருள் நிறைந்த வாசகமாகும்,அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரால் எழுதப்பட்டதாகும்.வள்ளலார் ஒரு கருவியே தவிர அனைத்தும் அருட்பெருஞ் ஜோதியின் செயல்களே யாகும்.அதன் உண்மையை வள்ளலார் பல பாடல்களில் தெரியப்படுத்தியுள்ளார்.அதில் ஒருபாடல்வருமாறு ;--நாடு கலந்து ஆள்கின்றோர் எல்லோரும் வியப்ப,நண்ணி எனை மாலையிட்ட நாயகனே நாட்டில்,ஈடுகரைந்திடற்கரிதாம் திருச்சிற்றம் பலத்தே ,இன்ப நடம புரிகின்ற இறையவனே எனை நீ ,பாடுக என்னோடு கலந்து ஆடுக என்று எனக்கே பணியிட்டாய்,நான் செய் பெரும் பாக்கியம் என்று வுவந்தேன்,கோடு தவறாது உனை நான் பாடுதற்கு இங்கு கேற்ற,குணப்பொருளும் மிலக்கியமும் கொடுத்து மகிழ்ந்து அருளே! என்று வள்ளலார் ஆறாம் திருமுறையில் பதிவு செய்துள்ளார்,ஆறாம் திருமுறையை படிப்பதற்கும் தெளிவதற்கும் கொஞ்சமேனும் அருள் அனுபவம் தேவையாகும்.சாதாரண அறிவைக் கொண்டு படித்தால் தெளிவு கிடைக்காது,அதனால் தான் வள்ளலார் அறிவை அறிவால் அறிகின்ற போது அனுபவமாகும் என்றார் .உங்களைப் போன்ற இளைஞ்சர்கள் இந்த அளவிற்கு தெரிந்து கொள்ள அறிந்து கொள்ள துடிப்பதை பார்க்கும் போது,உண்மையிலே பேரு மகிழ்ச்சியடைகிறேன்,முதலிலே ஆன்மிகம் என்றால் வயது முதிர்ந்த வேலையற்றவர்களின் கூடாரமாக இருந்தது.இன்று அறிவியல்,விஞ்ஞானம்,சார்ந்தது  ஆன்மீகம் என்று அனைவராலும் போற்றப்படுகின்றது.அதற்கு காரணம் உங்களைப் போன்ற துடிப்பு மிக்க இளைஞர்கள் வள்ளலார் வழியை பின் பற்றி வருகிறார்கள்.நான்  செல்லுகின்ற இடங்களில் எல்லாம் இளைஞ்ச்ர்கள் அதிகமாக வந்து கொண்டு இருக்கிறார்கள்.சந்தேகங்களை கேட்டு தெளிவைப் பெறுகிறார்கள் .மகிழ்ச்சியாக இருக்கிறது. அன்புடன்.-ஆண்மநேயன் ,கதிர்வேலு  

Vallalar tirumurai the sixth. Letter to a friend.Platonic love and greetings to his brother. Vallalar sixth tirumuraiyai publish not saying no. People in ignorance there, caste, religion, religious, cattiram such false principles, has pursued the truth and telling it not enough, the false garbage on his uyirile (in spirit) to embed them. Why with me, going so far, what is the truth I know it may be. So now the sixth, Mr. formally issued by the People's garbled annum. when the time comes to publish the long talttukirare Besides, do not disclose that it did not. Vallalar with the access volunteers Vallalar the sheer Vallalar policy after the convictions that vallalare sorry. So their sixth tirumuraiyai publish Vallalar want when the time comes to issue said that except the sixth tirumuraiyai publish not saying no. VI tirumurai the grace-filled sayings, arutperun Jyoti God, written by. Vallalar a tool all arutperun Jyoti's practices yakum. the truth Vallalar many songs தெரியப்படுத்தியுள்ளார். The orupatalvarumaru; - nations alkinror all viyappa, nanni me malaiyitta nayakane country, ஈடுகரைந்திடற்கரிதாம் tiruccirram palatte, pleasant natama understand iraiyavane me, you, Play with me attending the sheep know paniyittay, I'm doing great pleasure that vuvanten, line, taking back my patutarku here kerra, kunapporulum milakkiyamum gave a good bliss! That Vallalar sixth tirumurai in, recorded the sixth tirumuraiyai reading telivatarkum some grace, the experience requirement. Common sense and read the resolution available, so Vallalar knowledge, knowledge learning during the experience, he said. Like you ilaincarkal this level learn to learn a beat when I really still am, mutalile Largest If the older unemployed of the tent was.'s fiction, science-based spirituality that everyone adored. because you beat a lot of youth Vallalar path to follow is coming. I, which places all ilaincrkal much're coming. suspicions about the luminosity receive. happy! Anmaneyan .- with love, katirvelu

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு