புதன், 29 ஜூன், 2011

அன்பும் சிவமும்


Kathir Kathirvelu உயிர்கள் எல்லாம் இறைவன் இருக்கும் இடமாகும்.அதை உணர்ந்து உயிர்களுக்கு உபகாரம் செய்தால் ,உயிர்கள் மகிழ்ச்சி அடைகின்றன.அந்த மிழ்ச்சியை யார் உண்டு பண்ணார்களோ அவர்கள் உயிரில் மகிழ்ச்சி என்னும் அலைகள் பதிவாகிறது.அப்போது அங்கு அன்பு தோன்றுகின்றது.அதனால் அன்பு சிவம் என்றார்கள்,சிவம் என்பது உயிர் ஒளியாகும்,உயிரைக் காப்பாற்றுவது உயிர்களின் கடமையாகும்.அதாவது சிவம் என்னும் ஒளியின் கடமையாகும்.அதனால் சிவம் வேறு,உயிர் வேறு அல்ல.அன்பும் சிவமும் ஒன்றுதான் அதை உணர்ந்தவர்கள் வேறாக நினைக்க மாட்டார்கள் .
அதனால்தான் வள்ளலார் 
இடைந்துஒருசார் அலையாதீர் சுகம் எனைப்போல் பெறுவீர் 
யான வேறு நீர் வேறு என்று எண்ணுகிளேன் உரைத்தேன் 
எனிறார் .
உயிருள யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே 
உயிர் நலம் பரவுக என்று உரைத்த மெய்ச சிவமே !
என்கிறார் இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டும் .
ஆதலால் அன்பு வேறு சிவம் வேறு அல்ல,உயிர் வேறு,கடவுள் வேறு அல்ல.
அனைத்தும் ஒன்றிலிருந்து உருவாக்கப் பட்டதுதான் என்பதை உணர்ந்தால்
உலகம் அமைதி பெரும்.உயிர்கள் மகிழ்ச்சியுடன் வாழும் .
கொல்லா நெறியே குவலயம் ஓங்குக 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு