செவ்வாய், 28 ஜூன், 2011

.தமிழ் தோன்றியது எப்போது?





அன்புசார் தமிழ்ப் பெருமக்களே,  இன்றுவரை நம்மை மயக்கத்தில் ஆழ்த்தி  வைத்திருந்த ஓர் மாயைத்திரையை உங்களுக்குக் கோடுகாட்ட  விரும்புகின்றேன்.

1.தமிழ் தோன்றியது எப்போது?

2.தமிழுக்கு ஆசான் யார்?

3.உண்மையான இறை அறிதல் எது?

4.சாகாக்கலையை போதிப்பது யார்?

மேற்கூறிய வினாக்களுக்கு -  இப்போதுள்ள குருமார்கள் -- யாராவது சரியான  பதிலைத்தந்துள்ளார்களா?. இதற்குச்சரியான விடை  அளிப்பவரால்  மட்டுமே  மறைக்கப்பட்ட பல உண்மைகளை வெளிக்கொணரமுடியும்.

திருமந்திரம் என்ற உலகின் முதல் வேதம் என்ன கூறுகிறது?,  இவ்வேதம் ஏன்,  யாரால் மறைக்கப்பட்டது?,  பின் எங்கிருந்து யாரால் காட்டப்பட்டது?,  மீண்டும் இப்பொழுது ஏன் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது?,  என்ற அனைத்திற்கும் பதிலைத்தேடுங்கள்.

உலகம் முழுதும் தீவிரவாதம் தாண்டவமாடக் காரணம் எந்த ஒரு  மார்க்கமும்  உண்மையான இறைக்கொள்கையைக் கடைப்பிடிக்காததேயாகும்.  ஓரிறைக்கொள்கை என்பது முதன் முதலில் தமிழில் பல கோடி வருடங்களுக்கு முன்பே திருமூலரால் சொல்லப்பட்டது.  ஆனால் சிலர் தங்களது சுய நலத்துக்காக மறைக்கப்போய் பொய்மையே  உண்மைபோல் தோற்றமளிப்பதால்தான்,  இத்தனை கலகம்.  மதமாற்றம்  நடந்த,-நடக்கின்ற  காரணமும்,  இதுவேயாம்.  திருமூலரின் கூற்று  வெளிப்பட்டாலன்றி,  உலகம் உய்ய வழியில்லை. உருவ வழிபாட்டை  நீக்கினாலன்றிச் சித்தியடைய முடியாது.  இல்லறத்துன்பத்தையும் வெல்ல  முடியாது.இதை நான் கூறவில்லை.  தமிழ் வேதம்  கூறுகிறது.

இறைவனை எங்கு காண்பது என்பதற்கு,  சித்தர் பாடல்களில் இருந்து  மாதிரிக்கு ஒன்று மட்டும் காட்டுகிறேன்.

கோவிலாவ தேதடா குளங்களாவ தேதடா

கோவிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே

கோவிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே

ஆவதும் அழிவதும் இல்லையில்லை இல்லையே.

அடுத்தபடியாக கயவர்களால் மறைக்கப்பட்ட திருமந்திரத்தில் இருந்து-

பதிபல வாயது பண்டிவ் வுலகம்

விதிபல செய்தொன்று மெய்ம்மை உணரார்

துதிபல தோத்திரம் சொல்ல வல்லாரும்

மதியிலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே.

மற்றுமோர் மந்திரம்

வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்

தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை

ஏத்தியும் எம்பெரு மானென் றிறைஞ்சியும்

ஆத்தஞ்செய் தீசன் அருள்பெற லாமே

கற்றிருந்தும் சிந்திக்க வலிமையற்றோர்,  சிந்திக்கத்தொடங்குவீர்களா

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு