புதன், 4 மே, 2011

நண்பருக்கு கடிதம்.

ஆன்ம நேய அன்புடையீர்  உண்மையான கடவுளை  நினைப்பவர்கள் உயிர்க்கொலை செய்யலாமா ?புலால் உண்ணலாமா ?கடவுளால் படைக்கப்பட்ட உயிர்களை அழிப்பதற்கு மனிதனுக்கு அனுமதியுண்டா ?உயிர்களை அழிப்பவனுக்கு கடவுளின் அன்பும் அருளும் கிடைக்குமா ?உண்மையான ஞானிக்கு மரணம் வரலாமா?மரணம் அடைந்தவரை ஞானி என்று ஏற்றுக்கொள்ள்லாமா?தன்னையே  காப்பாற்றிக் கொள்ள முடியாத ஞானிகள்,கர்த்தர்கள் எப்படி மக்களை காப்பாற்றமுடியும் ?சாதரண மக்களுக்கும் மரணம் வருகிறது,ஞானிகளுக்கும் மரணம் வருகிறது.இதில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடு எப்படி அறிந்து கொள்ள முடியும் ?இத்தனை ஞானிகள் இந்த உலகத்தில் தோன்றியும் ஏன் மக்கள் திருந்தவில்லை?துன்பமும் துயரமும் அச்சமும் பயமும் ஏன் ஒழியவில்லை ?இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?பவத்தின் சம்பளம் மரணம் என்றார் ஏசு அவரும் பாவத்தை செய்துள்ளாரா ?அதனால்தான் அவருக்கும் மரணம் வந்த்தா?உண்மையான ஞானிக்கு மரணம் வரலாமா? மரணம் அடைந்தவரை கடவுள் அவதாரம் என்று எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் .?கடவுள் அவதாரம் என்றால் மரணம் வரக்கூடாது.மரணம் வந்தால் அவர்களும் சாதரண் மனிதர்கள்தான்..உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று வகுக்கின்றீர் இருவரும் மாண்டு விடுகின்றீர்.இதனால் இருவருக்கும் ஒரே தண்டைதான் கடவுள் கொடுக்கின்றார் அப்படி இருக்க இதில் யார் உயர்ந்தவர் என்று எப்படி அறியமுடியும் ?இதற்க்கெல்லாம் உங்கள் பதிதான் என்ன ?எங்களுக்கு சரியான விளக்கம் தேவை.இதற்கு பதில் தெரியவில்லை என்றால் பதில் நாங்கள் தருகிறோம்.அன்புடன்;-கதிர்வேலு. 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு