Kathir Kathirveluஉடம்பு வரும் வகை அறியீர் உயிர் வகையை அறியீர்,உடல் பருக்க வுண்டு நிதம உறங்குதற்கே யரிவீர்,மடம் புகு பேய மனத்தாலே மயங்க்குகின்றீர் மனத்தை வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழித்துறை கற்றறியீர் ,இடம் பெரும் பொய் வாழ்க்கையிலே இன்பம் துன்பம் யடுத்தே எண்ணி எண்ணி இளைக்கின்றீர் ஏழை உலகீரே,நடம் புரி யென் தனித்தந்தை வருகின்ற தருணம் ந்ண்ணியது நண்ணுமினோ புண்ணியஞ் சார்வீரே,--என்று வள்ளலார் உலகர் அனைவரையும் பார்த்து அழைக்கிறார்,கடவுள் வருகின்ற தருணம்,வந்து விட்டார்,வரம் தருவார் வாருங்கள் வாருங்கள் என்று அனைவரையும் அன்புடன் அழைகின்றார்.இனியும் கவலைப்படவேண்டாம்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எல்லாஉயிர்களிலும் இருந்து இயங்கிக் கொண்டு இருக்கிறார்.ஆதலால் தன்னை அறிந்தால் தன் தலைவனை காணலாம்.என்னைப்பார் என்னுள் உண்ணைப்பார்க்கலாம்.உன்னைப்பார் உன்னுள் என்னைப்பார்க்கலாம்.இதுவே சிறந்த வழியாகும்.இதை விடுத்து யாரையும் தேடவேண்டாம்.புறப்பற்றை விடுத்து அகப்பற்றை பற்றிக்கொள்ளுங்கள் என்கிறார்.பற்றிய பற்று அத்தனையும் பற்றுஅற விட்டுஅருள் அம்பலப்பற்று பற்றுமினோ என்றும் இறைவீரே .அம்பலபற்று என்பது நம்மை இயக்கிக் கொண்டு இருக்கும் உயிர் ஒளியான ஆன்மாவைத்தான்,அம்பலம் என்கிறார் வள்ளலார்.வள்ளலார் காட்டிய வழியை பின் பற்றுவோம் அருளைப்பெற்று மரணத்தை வென்று மகிழ்ச்சியுடன் ஆனந்த வாழ்வு வாழ்வோம்.அன்புடன் --கதிர்வேலு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு