சனி, 7 மே, 2011

எட்டும் இரண்டும் அன்பருக்கு கடிதம்

எட்டும் இரண்டும்

ஆன்மநேய அன்புடையீர் அனைவருக்கும் வணக்கம் எட்டும் இரண்டும் என்பது,எட்டு என்பது உடம்பாகும்.இரண்டு என்பது உயிராகிய ஆன்மாவும் ,கடவுளாகிய அருட்பெருஞ் ஜோதியாகும்.அதனால்தான் எட்டோடு இரண்டு சேர்த்து என்னவும் ஆரியீர் எத்துனை கொள்கின்றீர் பித்துலகீரே! அதையே கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்கிறார் வள்ளலார்.அதைவிடுத்து அகரம் உகரம் தகரம் மகரம் விகாரம் என்றெல்லாம் மக்களுக்கு சொன்னால் சாதாரண மக்கள் புரிந்து கொள்ளமாட்டார்கள்.அதையே வள்ளலார் உடம்பு வருவகை அறியீர்,உயிர்வகையை அறியீர் உடல் பருக்க உண்டு நிதம உறங்குதற்கே யறிவீர். மடம் புகு பேய் மனத்தாலே மயங்க்குகின்றீர் மனத்தை வசப்படுத்தீர் வழி துறை கற்று அறியீர்,இடம்பெறு பொய் வாழ்க்கையிலே இன்பம் துன்பம் அடுத்தே,எண்ணி எண்ணி இளைக்கின்றீர் ஏழை உலகிலீரே ,நடம புரி என்தனித்தந்தை வருகின்ற தருணம் நண்னுமினோபுண்ணியம் சார்வீரே .என்கிறார் வள்ளலார் .
     பெட்டி இதில் உலவாத பெரும் பொருள் உண்டு இதை நீ 
     பெருக வென அது திறக்கும் பெருந்திரவு கோலும்
     எட்டு இரண்டும் தெரியாத என் கையில் கொடுத்தீர் 
     இது தருணம் திறந்து அதனை எடுக்க முயல்கின்றேன் 
     அட்டி செய நினையாதீர் அரைக கணமும் தரியேன் 
     அரைக கனத்த்துக்கு ஆயிரம் ஆயிரம் கோடியாக 
     வட்டியிட்டு உம்மிடத்தே வாங்குவன் உம்மாணை
     மணி மன்றில் நடம புரிவீர் வந்து அருள்க விரைந்தே .

என்று திருஅருட்பாவில் பதிவு செய்துள்ளார் வள்ளலார் 
முதலில் நாம் குருவாக ஏற்றுக் கொள்வது தவறில்லை.அவர் எப்படி இருக்கவேண்டும் என்று வள்ளலார் தெளிவுப் படுத்துகிறார் .குருவாக இருப்பவர்களுக்கு ,நரை திரை ,மூப்பு,பயம் ,துன்பம்,நோய்,மற்றும் உணவு உண்ணாதவர்கலாய் இருக்கவேண்டும்.அப்படி யாராவது இருந்தால் சொல்லுங்கள்,அவர்களுடைய பாதமலர்களை நான் வணங்க தயாராக இருக்கிறேன்.

 அதற்கு வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ;-

நரை மரண முப்பறியா நல்ல உடம்பினரே 
நற்குலத்தார் என அறியீர் நானிலத்தீர் நீவிர் 
இதுவரையில் உயர்குலம் என்றும் தாழ்ந்த குளம் என்றும் 
வகுகுகின்றீர் இரு குலமும் மாண்டித்க் காண்கின்றீர் 
புரை உறும் குலங்கள் எல்லாம் புழுக்குலம் என்று அறிந்தேன் 
புத்தமுதம் உண்டோங்கும் புனித குலம் பெறவே 
உரை பெரும் என் தனித்தலைவர் வருகின்ற தருணம் 
உற்றது இது உற்ரிடுவீர் உண்மை உரைத்தேனே

என்று மனிதகுலத்தைப் பற்றி தெளிவுபடுத்துகிறார் ஆதலால் அன்பர்களே நாம் அடைவது புனிதகுலமான உயர்ந்த குலமான,மரணம் இல்லா பெருவாழ்வாகும்.அதுவே புனிதகுலமாகும் .நமக்கு உண்மையை உண்மையாக அறிவிக்கும் ஒரே குரு அருட்பெரும் ஜோதியாகும்.

மருட்பகை தவிர்த்து எனை வாழ்வித்து எனக்கே
அருட் குருவாகிய அருட்பெரும் ஜோதி !

என்கிறார் வள்ளலார்

நாம் மனித தேகத்தில் இருந்து கொண்டு சிற்சபை நடத்தை தெரிந்து துதிக்கவேண்டும் சிற்சபை நடம என்பது உயிர் ஒளியாகிய ஆன்மா இருக்கும் இடமான உச்சிக்கும் கீழே உள் நாக்கிற்கும் மேலே மத்தியில் இருக்கும் உயிர் ஒளியை இடைவிடாது தொடர்பு கொள்ள வேண்டும்.அதுவே சிற்சபை நடனமாகும் .அதுவே நமக்கு எல்லா உண்மைகளையும் தெரிவிக்கும் .அப்போது அறிவு தானாக விளங்கும் அப்பொழுது எல்லா உண்மைகளும் தன்னைத்தானே விளங்கும்

ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறு ஒன்றை நாடாதீர்
பொய் உலகை நம்பாதீர் ---வாடாதீர்
சன்மார்க்க சங்கத்தைச சார்வீர் விரைந்தினி இங்கு
கேன்மார்க்கமும்.ஒன்றாமே

என்பதை மனதில் பதியவைத்துக் கொண்டு அதன்படி நடந்தால் வாழ்ந்தால் அனைவரும் புனிதகுலம் பெறலாம் என்பதை அன்புடனும் மகிழ்ச்சியுடனும் தெரிவித்துக் கொள்கிறேன் .இவையாவும் என்னுடைய கருத்துக்கள் இல்லை எல்லாம் வல்ல அருட்பெரும் ஜோதி ஆண்டவருடையதாகும் .

அன்புடன் --ஆன்மநேயன் கதிர்வேலு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு