வியாழன், 5 மே, 2011

தமிழ்! நண்பருக்கு கடிதம்

Kathir Kathirvelu உண்மை அன்பரே தமிழ் உலக மொழிதான் மற்ற மொழிகளெல்லாம் மனிதர்களால் உருவாக்கியது த்மிழ் மொழி இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட மொழியாகும் .இதை யாராலும் அழிக்க முடியாது அதே போல் தமிழைனை யாராலும் அழிக்கமுடியாது .இன்னும் கொஞ்சம்காலத்தில் தமிழ் மொழிதான் உலக ஆட்சி மொழியாகும் இதில் எந்த மாற்றமும் இல்லை.தமிழ் மொழி பற்றி வள்ளலார் தெளிவாக திரு அருட்பாவில் தெளிவாக எழுதிவைத்துள்ளார்கள்.சங்கராச்சாரியார் சமஸ்கிருதம் தாய் மொழி என்றார்.அதற்கு வள்ளலார் தாய் ஒன்று இருந்தால் தந்தை வேண்டுமல்லவா !உங்கள் மொழி தாய் மொழி என்றால் எங்கள் தமிழ் மொழி தந்தை மொழியாகும் என்று வாதத்தில் வென்று சங்கராச்சாரியார் வாயை அடைத்து வைத்தவர் வள்ளலாராகும்.இவை உண்மை வரலாறு.அதேபோல் திரு அருட்பா எழுதும் போது தமிழின் பெருமையை, கடவுளை சிற்சபையில் நடிக்கின்றாய் செந்தமிழில் வளர்கின்றாய்.என்று தமிழுக்கு பெருமை தேடித்ந்துள்ளார்.தமிழ் மற்ற மொழிகள் போல் இல்லாமல்,தென்மொழி -தமிழ்,அமுதமொழி தமிழ், -என்று ஒரு விளக்கம் தருகிறார் அதன் விளக்கம் வருமாறு ;--இடம்பத்தையும் ஆராவாரத்தையும் ,பிரயாசத்தையும் ,பெருமரைப்பையும்,போது போக்கையும்.உண்டு பண்ணுகின்ற ஆரிய முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்ல வொட்டாது.-பயுலதற்கும் ,அறிதற்கும் ,மிகவும் லேசுடையதாய்,பாடுதற்கும் ,துதிப்பதற்கும்.மிகவும் இனிமையுடைதாய்,சாகாக் கல்வியை இலேசில் அறிவிப்பதாய்த் திருவருள் வலத்தால் கிடைத்த தென்மொழி யொன்றினிடத்தே மனம் பற்றச செய்து.அத்தென்மொழி களால் பல்வகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித்து அருள் செய்துள்ளீர் ,இறைவா !உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுவேன் .என்று புகழ்ந்து போற்றியுள்ளார்.தமிழ் வாழ்க !தமிழ்மொழி வாழ்க! தமிழ் உலகமெல்லாம் வளர்க !அன்புடன் ஆன்ம நேயன் --கதிர்வேலு.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு