வியாழன், 5 மே, 2011

முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களுக்கு

உயர்திரு,முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம் ஐயா அவர்கள் சமூகத்திற்கு !

05 மே 2011, 12:39 க்குஇல் Kathir Kathirveluஆல்
உங்கள் குறிப்பு உருவாக்கப்பட்டது.
முன்னால் ஜனாதிபதி மதிப்பிற்குறிய அப்துல்கலாம் ஐயா அவர்களுக்கு வணக்கத்துடன் எழுதும் விண்ணப்பம்;------- நமது முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் மக்களால் மிகவும் மதிக்கத் தக்கவர் என்பது யாருக்கும் எந்தவித சந்தேகமும் இல்லை .அவர் புலால் மறுத்தவர் என்பதும் அனைவரும் அறிந்ததே.அவர் ஏன் உயிர்க்கொலை செயவதையும் புலால் உண்பதையும் தவிர்த்து வாழவேண்டும் என்று மக்களுக்கு போதிக்கவில்லை.திருக்குறளை நன்கு படித்தவர்,திருக்குறளில் புலால் மறுத்தல்,கொல்லாமை என்ற இரண்டு அதிகாரங்கள் ௨௦ திருக்குறள் எழுதிவைத்துள்ளார்,வள்ளுவரும் வள்ளலாரும்,உயிர்க்கொலை செயவதால்தான் இந்த உலகம் அறியாமையில் அழிந்து கொண்டு இருக்கிறது,என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்கள் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றும் ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்றும் தெளிவுபடுத்தி யுள்ளார்கள்.இதை எல்லாம் நமது முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் படித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். நமது இந்திய நாடு வல்லரசாக மாற வேண்டும் என்பதை விட நல்ல அரசாக மாறினால்,மக்கள் நலமுடன் வாழ்வார்கள் .இந்திய நாட்டில் அருளாளர்கள் அதிகம் வலியுருத்தியது கொல்லாமையும் புலால் உண்ணாமையுமாகும்.நமது மகாத்மாகாந்தியும் அதையே கடைபிடித்து,கத்தியின்றி ரத்தமின்றி அகிம்சை என்னும் சத்தியாக்கிரகத்தின் முலம சுதந்திரம் வாங்கித்தந்தார் என்பது உலகம் அறிந்த உண்மையாகும்.வாயில்லாத வாய பேசாத,உயிர்களை கொன்று தின்னும் வரை இந்த உலகம் உருப்படியாகாது.இதுவே ஞானிகளின் சத்திய வாக்காகும்.இறைவன் படைத்த உயிர்களை அழிக்கும் அதிகாரம் மனிதர்களுக்கு இறைவன் கொடுக்கவில்லை.உயிர்க்கொலை செய்வதும்,புலால் உண்பதும் இறைவன் சட்டத்தை மீறிய செயல்களாகும்.என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.இதை முன்னால் ஜனாதிபதி மதிப்பிற்குரிய பெரியவர் அப்துல்கலாம் அவர்கள் மக்களுக்கு போதிக்கவேண்டும்,என்பது இச்சிறியவனின் விண்ணப்பமாகும்,ஏன் என்றால் உங்களை மக்கள்,மாணவர்கள் மதிக்கின்றார்கள்.நீங்கள் சொன்னால் மக்கள் கேட்பார்கள்.உங்கள மேல அந்த அளவிற்கு மக்கள் மதிப்பு வைத்து இருக்கிறார்கள்.நீங்கள் உண்மையை சொல்லுங்கள்.பொய் சொல்லவேண்டாம்.இதுவே மக்களில் ஒருவனாக உங்கள் மீது வைத்துள்ள மரியாதையுடன் தெரியப்படுத்தி கொள்கிறேன்.அன்புடன் --ஆன்மநேயன் கதிர்வேலு.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு