வெள்ளி, 29 ஏப்ரல், 2011

ரஜினியின் உடல் நிலை புலால் மறுத்தல்.


29 ஏப்ரல் 2011, 19:22 க்குஇல் Kathir Kathirveluஆல்
உங்கள் குறிப்பு உருவாக்கப்பட்டது.
ரஜினி காந்த் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமணையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அவரது உடல் நிலை குணமாக எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள்புரிவார்.அடுத்து ஆன்மீகத்தில் உள்ளவர்கள் உயிர்க்கொலையும் புலால் உண்ணவும் கூடாது.ரஜினி புலால் சாப்பிடுகிறார்.அவர் அதனுடைய உண்மை தெரியாமல் உண்கிரார்.அவருக்கு அதன் உண்மையை எடுத்து சொல்ல யாரும் முன் வரவில்லை,புலால் உண்பவர்களுக்கு துன்பம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.அவர்களுக்கு எவ்வளவு செல்வம் இருந்தாலும்,புகழ் இருந்தாலும்.புலால் உண்பவர்களாய் இருந்தால் கடவுள் கருணை காட்டுவது குறைந்து விடும்.உயிர்க்கொலையும் புலைப்புசிப்பும் உடையவர்கள் எல்லாம் உரவிணத்தார்அல்ல அவர் புற இனத்தார் என்கிறார் வள்ளலார்.கடவுளுக்கு உரிமை உள்ளவர்கள் புலால் மறுத்தவர்கள்.மற்றவர்கள் கடவுளின் அருகில் செல்லமுடியாது என்கிறார்.வள்ளலார்.ஒரு பெண்ணை ஆணாக மாற்றவும்,ஒருஆணை பெண்ணாக மாற்றவும் ஆற்றல் உள்ளவர்களாய் இருந்தாலும்,அவர்கள் புலால் உண்பவர்களாய் இருந்தால் அவரை ஞானி யென கூறாதே,என்கிறார் வள்ளலார்,அவருடைய சித்துக்கள்.பயணில்லாமல் விரையமாகி விடும்.அவரை கடவுள் ஏற்றுக்கொள்ள மாட்டார்.கடவுள் எல்லா உயிர்களிலும் உயிர் ஒளியாக இயங்கிக் கொண்டு இருக்கிறார்.எந்த உயிரையும் கொலை செய்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை.கொலை செயவது இறைவன் சட்டத்தை மீறியதாகும்.ஒரு உயிரை உருவாக்க முடியாதவர்களுக்கு,அதை அழிப்பதற்கு அனுமதி இல்லை,இதை உணர்ந்தவர்கள்தான் ஆன்மீக வாதிகளாகும்.இதை வேதங்களும்,புரானங்களும்,ஆகமங்களும்,சமயங்களும்.மக்களிடம் முறையாக எடுத்து சொல்ல தவறி விட்டன.ஆதலால்,வள்லலார் அவ்ர்கள் வேதம் ஆகமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்,வேதம் ஆகமத்தின் விளைவரீயீர் சூதாக சொன்னதலால் உண்மை வெளி தோன்ற உரைக்கவில்லை என்ன பயணோ இவை! என்று சாடுகிறார்.இந்த உலகம் துன்பமும் துயரமும் அச்சமும் பயமும் உண்டாக காரணம்.உயிர்க்கொலையும் புலைப்சிப்பும் தான் காரணமாகும் இதை உணர்ந்து உலக மக்கள் அமைதியுடன் வாழவேண்டுமானால் உயிர்க்கொலையும் புலால் உண்பதும் தவறு என்று உணர்கிறார்களோ அப்பொழுது உலகம் அமைதி பெரும்.இதுவே சத்தியமாகும்.இதுவே ஆண்டவருடைய சத்திய வார்த்தையாகும்,உண்மையை உணர்ந்து ஒழுக்கத்துடன் வாழ்வோம்.இதையே வள்ளுவர் திருக்குறளில்,தன் ஊண் பெருகற்கு பிறிதூண் உண்பாணை எங்கணும் ஆளும் அருள் என்கிறார்.கொல்லான் புலால் மறுத்தாணை எல்லாஉயிர்களும் கை கூப்பி தொழும் என்கிறார்.திருவள்ளுவர் இரண்டு அதிகாரங்கள் கொல்லாமை,புலால் மறுத்தல்,என்று 20 குறள் எழுதிவைத்துள்ளார்.அதையும் படித்து பயன் பெருவோம்.அன்புடன்;-கதிர்வேலு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு