சனி, 18 டிசம்பர், 2010

உலகின் இரகசியம் இங்கே தெரிந்துகொள்ளலாம் ,

உலகின் இரகசியம் இதுவரையில் யாரும் சொல்லாதது,இரகசியம் என்பதை விட
உலகின் உண்மைகள் வள்ளலார் சொல்லுகிறார் .

     உலகம் என்றால் என்ன ?

      உலகம் என்பது பஞ்ச பூதங்களான,மண்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம்
போன்ற ஐந்து கலவைகளானதாகும்.இதை உலகம் என்று சொல்லுவதைவிட
அண்டம் என்று சொல்லுவது பொருத்தமானதாகும்.இதுபோல் பல கோடி
அண்டங்கள் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு இருக்கின்றன.நாம் வாழும்
இந்த உலகம் ஒரு அண்டமாகும்.
    அண்டத்தின் திசைகள் எட்டு என்பது தவறான சிந்தனைகளாகும்
அண்டம் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு இருக்கும் போது, எட்டு
 திசைகள் எப்படி  என்று சொல்லமுடியும்.இந்த அண்டத்திற்கு நான்கு
திசைகள் இருக்கின்றன என்று வள்ளலார் சொல்லுகின்றார்.
      திசைகள் நான்கு
     அதாவது அகம்,அகப்புறம்,புறம்,புறப்புறம்,என நான்கு பிரிவுகளாக
இயங்கிக் கொண்டு இருக்கின்றது.
      அகம் என்பது --------அக்கினி
      அகப்புறம் என்பது --சூரியன்
      புறம் என்பது ---------சந்திரன்
      புறப்புறம் என்பது ---நட்ஷத்திரங்கள்
என்பதாகும் அதே போல் நம் உடம்பான பிண்டத்தில் நான்கு பிரிவுகளாக
இயங்கிக் கொண்டு இருக்கிறது .அவை யாதெனில்,
     அகம் ----------ஆன்மா
     அகப்புறம் ----ஜீவன்
     புறம் -----------கரணங்கள்
     புறப்புறம் -----இந்திரியங்கள் .
என்பனவாகும் .
இந்த நான்கு இடத்திலும் கடவுள் அதாவது அருள் ஒளி பிரகாசமுள்ளது .
அதனில் காரியத்தாலுள்ள விபரம் .
     அகம் என்னும் ஆன்மா ;--ஒரு பொருளினது உண்மையை அறிதலாகும்
அதற்க்கு ஆன்ம அறிவு என்பதாகும்.
    அகப்புறம் என்பது ஜீவன் ;--ஒரு வஸ்துவின் பிறயோஜனத்தைஅறிதலாகும்
அதற்க்கு ஜீவ அறிவு என்பதாகும் .
     புறம் என்பது கரணம் என்பதாகும் அதாவது மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம்
என்பதாகும் ,இவை மனத்தின் மூலமாக,ஒரு வஸ்த்துவின் நாம ரூபத்தையும்,
குண குற்றங்களையும் விசாரித்து அறிதலாகும்.இதற்கு மன அறிவு என்பதாகும்.
     புறப்புறம் என்பது இந்திரியங்கள் என்பதாகும்.இந்திரியங்கள் என்பது,கண்,
காது,மூக்கு,வாய்,உடம்பு என்பதாகும் .இவைகள் ஒரு பொருளினது நாம உரூப,
குண குற்றங்களை விசாரியாமல் அந்தப்பொருளைக் கானுதலாகும்.இதற்க்கு
இந்திரிய அறிவு என்பதாகும்.
    மனித உடம்பான பிண்டத்தில் காட்சிகள் நான்கு வகைப்படும் அவைகள்,
ஆன்மாவின் மூலம் பார்ப்பது ;--ஆன்ம காட்சி ,ஆன்ம அறிவு
ஜீவன் மூலம் பார்ப்பது ;------------ஜீவ காட்சி -----ஜீவ அறிவு
கரணம் மூலம் பார்ப்பது ;----------கரணக் காட்சி,--மன அறிவு
இந்திரியங்கள் மூலம் பார்ப்பது;-இந்திரியக் காட்சி--இந்திரிய அறிவு,
     என்பதாகும் இதுபோல்
அண்டத்தில் ;--
நான்கு இடத்தில் கடவுள் அதாவது,அருள் ஒளி பிரகாசாமாய் உள்ளது
அகம் ;--அக்கினி ஒரு பொருளினது உண்மையை அறிதலாகும் அதற்க்கு
               அக்கினி காட்சி என்பதாகும்.
அகப்புறம் ;--சூரியன்,ஒரு வஸ்துவின் பிறயோஜனத்தை அறிதலாகும்
                அதற்க்கு,சூரியக் காட்சி என்பதாகும்.
புறம் ;---சந்திரன் ;-ஒரு பொருளின்  நாம உரூபத்தையும் அதன் குணம் குற்றங்களையும்.
               விசாரித்து,  அந்தப் பொருளைக் காணுத்லாகும் .அதற்கு சந்திரக்
               காட்சிஎன்பதாகும்
புறப்புறம் ;-நட்சத்திரங்கள்;-ஒரு பொருளின் நாம உரூபத்தையும் குண குற்றங்களையும்
               விசாரியாமல் அந்த பொருளைக் காணுதலாகும்.  அதற்கு நட்சத்திரக் காட்சி
               என்பதாகும் .
ஆதலால் ;--அக்கினி பிரகாசம்
                       சூரியப்பிரகாசம்
                       சந்திரப்பிரகாசம்
                       நட்சத்திரப்பிரகாசம்
என்பவையாகும் அதேபோல்
அண்டத்தில்  நான்கு இடத்திலும்,  பிண்டத்தில்  நான்கு இடத்திலும்
ஆக எட்டு இடத்திலும் கடவுள் பிரகாசம்,காரியத்தால் உள்ளது ..
     காரணத்தாலுள்ள இடம் ;--
பிண்டத்தில் ;--புருவமத்தி
அண்டத்தில் ;-பரமாகாசம்
    காரிய காரணமாக உள்ள இடம் நான்கு ;-
பிண்டத்தில் ;---விந்து,--நாதம்
அண்டத்தில் ;---மின்னல்---,இடி,
    சர்வயோனி இடத்தும்,விந்து விளக்கமாகிய மின்னல் இடத்தும்,
நாத விளக்கமாகிய இடி இடத்தும் ;இதல்லாது பாரோடு விண்ணாய்ப்
பரந்ததோர் ஜோதி என்றும்,ஜோதியுள் ஜோதியுள் ஜோதியாயும் விளங்கிக்
கொண்டு இருக்கிறது,
   கடவுள் ;--
மேற்குறித்த அகமாகிய ஆன்மப் பிரகாசமே ஞான சபையாகும்.அந்தப்
பிரகாசத்துக் குள்ளிருக்கும் பிரகாசம் கடவுள் என்பதாகும்.அந்த உள்ளொளியின்
அசைவு நடம் என்பதாகும் .இதுதான் ஞானாகாச நடன மென்றும்,
சொல்லப்படுகின்றது .இவை தெரியாமல் கடவுளை உருவங்களாக
படைத்து வழிபாடு செய்து வருகிறார்கள்,
மத,சமய வாதிகளும் உண்மைதெரியாமல் பொய்யான தத்துவங்களை,
கற்பனைகளாகபடைத்து தெய்வம்,கடவுள் என்று நம்பி,தானும் குழம்பி,மற்றவர்களையும்,குழப்பிவருகிறார்கள்.
     ஆதலால் ஏமம்,கனகம்,ரஜிதம்,ரெவுபபியம்,முதலாக்ச சொல்வதில்
சூரியனிடத்தில் கனகமும், சசியிடத்தில் ரஜிதமும் இருக்கிறன்றன.
இதுபோல் பிண்டத்தில், ஆன்மாகாசம் பொற்சபை என்றும்,ஜிவாகாசம்
ரஜிதசபை என்றும் சொல்லப்படுகின்றன,
     ஆதலால் மேற்குறித்த இடங்கள் யாவற்றிலும் கடவுள் பூரண இயற்க்கை
விளக்கம்,காரியமாயும்,காரணமாயும்,காரிய காரணமாயும் இருக்கின்றது;.
முக்கிய இடங்களாகிய பிண்டத்தில் நாலும்,அண்டத்தில் நான்கு இடத்திலும்,
கடவுள் விளக்கம் விஷ்சமுள்ளது.இந்த எட்டு இடத்திற்கும் அருள் என்ற
கருணை,
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
தனிப்பெருங் கருணை அருட்பெரும்ஜோதி.
என்னும் அருள், இயற்க்கை உண்மை என்றும்,இயற்கை விளக்கம் என்றும்,
இயற்கை இன்பம்,என்னும் அருள் ஒளி, இந்தஅண்டங்களையும்,அண்டங்களில்
உள்ள பஞ்ச பூத்தங்களையும்,பஞ்ச பூத்தங்களில் வாழும் உயிர்களையும்,
உயிர்களை வாழவைக்கும்,சூரிய,சந்திர,நட்ஷ்த்திரங்களையும்,அருள்
என்னும் ஒளியால் இயக்கிக் கொண்டு இருக்கிறது .
     அண்டத்தில் நான்கு இடத்திலும்,பிண்டத்தில் நான்கு இடத்திலும் .அருள்
என்னும் ஒன்றும் சேர்ந்து ஒன்பது இடத்திலும்,கடவுள் விளக்கம் விசேஷ்
மாக உள்ளது .ஆதலால் நாம் தினம் அருட்பெரும்ஜோதி என்னும் கருணைக்
கடவுளை இடைவிடாது வணங்க வேண்டும்,எப்படி வணங்கவேண்டுமென்றால்,
      நம் பிண்டத்திலுள்ள (உடம்பு )ஆன்ம பிரகாசமே சபையாகவும்,அதன்
உள்ளொளியே பதியாகவும்,நினைத்துக் கொண்டு,எக்காலத்திலும் ''புருவ ''
மத்தியின் கண்ணே நம்முடைய காரணத்தைச செலுத்த வேண்டும்.
எல்லாம் வல்ல தலைவன் அருட்பெரும்ஜோதி என்பதை அறிவு பூர்வமாக,
உணர்ந்து வணங்குதல் வேண்டும் .
     ஞான சபையும் நடராஜரும் !

ஒரு பொருளினது நாம உரூப குண குற்றங்களை விசாரியாமல்,அந்தப்
பொருளைக் காணுதல் இந்திரியக் காட்சியாகும்.அதற்கு இந்திரிய அறிவு
என்பதாகும் .ஒரு பொருளினது நாம உரூபத்தையும் குண குற்றங்களையும்
விசாரித்து அறிதல் மன அறிவாகும்.அதற்கு மன அறிவு என்பதாகும்.
ஒரு பொருளினது பிரயோஜன்த்தைஅறிதல் ஜீவ அறிவு என்பதாகும் .
அந்த பொருளினது உண்மையை அறிதல் ஆன்ம அறிவு என்பதாகும் .
     அந்தப் பிரகாசத்திற்க்குள் இருக்கும் பிரகாசம் கடவுள் (அருள் ஒளி )
அந்த உள்ளொளியின் அசைவே நடனம்,இவற்றைத்தான் சிற்சபை
என்றும் ஞானசபை என்றும்,நடராஜர் என்றும் ,நடனம் என்றும்
சொல்லப்படுகின்றது
   அதன் உண்மையை விளக்கும் ஒரு பாடல் ;-
அருணிலை விளங்கு சிற்றம்பல மேனும் சிவ
சுகாதீத வெளி நடுவிலே
அண்ட பகிரண்ட கோடிகளும் சராசர
மனைத்தும் மவை யாக்கன் முதலாம்
பொருணிலைச சததரோடு சத்திகள் அனநதமும்
பொற்பொடு விளங்கி யோங்கும்
புறப்புறம் மகப்புறம் புறம் அகம் இவற்றின் மேல் .                 .
பூரண கார மாகித்
தெருணிலைச சச்சி தானந்த கிரணாதிகள்
சிறப்ப முதலந்த மின்றித்
திகழ்கின்ற மெய்ஞ் ஞான சித்தி யனுபவ நிலை
தெளிந்திட வயங்கு சுடரே
சுருனிலைக் குழலம்மை யானந்த வள்ளி சிவ
சுந்தரிக் கினிய துணையே
சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
ஜோதி நடராச பதியே.
என்பதை தெளிவாக விளக்கியுள்ளார் வள்ளலார் அவர்கள் .
        பிண்ட ஒளியும் ,அண்ட ஒளியும் 

பிண்ட ஒளி;                  அண்ட ஒளி;
ஆன்ம ஒளி ------------------------------அக்கினி ஒளி
ஜீவ ஒளி ----------------------------------சூரிய ஒளி
மன ஒளி ----------------------------------சந்திர ஒளி
கண்ணொளி ;----------------------------நட்சத்திர ஒளி
கடவுளின் அருள் ஒளியானது எப்படி அண்டத்திலும்,பிண்டத்திலும்
வியாபகமாய் செயல் பட்டுக் கொண்டு இருக்கிறது என்பதைப்
பார்த்தோம்,அடுத்து பிண்ட,அண்டத்தில் எப்படி செயல்படுகிறது
என்பதைப் பார்ப்போம்.
             பிண்டாண்ட கிரகண சித்தாந்தம்

      இவ்வுலகமும் இவ்வுலகிலுள்ள சராசர பேதங்களில் முக்கியமாய்
உள்ள,சரமாகிய உயிர் உள்ள ஜீவராசிகளும் கற்ப பேதமும் தோன்றி
உய்யும் பொ ருட்டு,அநேகவிதமான வாயு (காற்று )பேதங்கள் அனாதியில்
கடவுளால் உண்டு பண்ணப்பட்டு இருக்கின்றன,
    அமுதக்கார்று,விஷக்காற்று,பூதக்காற்று,உஷ்ணக்காற்று ,
இவை நான்கும் பேதப்பட்டு செயல் பட்டுக்கொண்டு இருக்கின்றன.
இவைகளில் மிக முக்கியமானது
     அமுதக்காற்று  ,விஷக்காற்று ;

கடவுளால் உண்டு பண்ணப்பட்டு இருக்கும் காற்றில்  மிக முக்கியமானது,
அமுதக் காற்றும் ,விஷக்காற்றும்,அவை விசேஷ வியாபகமா இருந்துக்
கொண்டு இருக்கிறன்றன.இவற்றில் அமுதக் காற்று பிரமாண்ட பகிரண்ட
கடாகத்தில்; விசேஷ வியாகபமாயும்,இம்மகா அண்டத்திலும் பிண்ட
ஜீவரிடத்திலும் ஏகதேச வியாபகமாயும் இருக்கின்றது .
      விஷக்காற்று ;---மேற்படி பிரமாண்டாதி கடாகத்தில் ஏகதேசம்
நிமிஷகாலம் அல்லது முகூர்த்தம்,அசாதாரநத்தில் ஜாமம் வரையில்
வியாபகமாயும், இம்மகா அண்டாதி ஜீவராசிகளிடத்தில் விசேஷ
வியாபகமாயும் இருந்து கொண்டு இருக்கின்றது.
       பிரமாண்டதிகளில் அமுதக் காற்று விசேஷ வியாபகமாயுள்ளதால்,
அவ்வண்டங்களிலுள்ள,சூரிய,சந்திர உடுக்கன் முதலியவைகளும்,
சொற்ப காலத்தில் அழிவடைதலின்றிஇருக்கின்றன.
      விஷக்காற்று ஏகதேச வியாபகமாதலால்,கற்பகாலத்தில்
வியாப்பியமாயும் வியாபகமாயும் இருத்தலால்,அந்தக் காலங்களில்
அவை நஷ்டப்படுகின்றன.
    விஷக்காற்று இரண்டு பாகமாய் உள்ளது .
        மேற்படி விஷக்காற்று கருமை வண்ணமாயும் செம்மைவண்ணமாயும்,
இரண்டு பாகமாய் பிரியும்.இவைகளை இராகு கேதுக்களென வழங்குகின்றனர்,
இது ஒரு முகூரத்தம்,ஒரு ஜாமம் ----அதற்குமேல் இவ்வண்ணமாய்,
இவ்வாண்ட கணிதப்படி,அவ்வண்டங்க்களிற் கணித காலத்தில்
வியாபகமாய் இருப்பதுதான் சந்திராதித்த கிரஹண் தோஷ் காலம்.
      தோஷ காலமென்பது பிரகாசமின்றி இருள் வண்ணமாய்ச சில
காலத்தில் முற்றும் மறைந்தும்,சில காலத்தில் ஏக தேசம் மறைந்தும்
இருப்பதால்,இவ்வண்ட புருஷனுக்குக் கரணஸ் தானமாகிய சந்திரனும்
ஜீவ்ஸ்தானமாகிய சூரியனும் பிரகாசம் மழுங்குகின்றபடியால் தோஷம்
எனப்பெயர் உண்டாயிற்று.தோஷம் என்பது இருள்,அறியாமை,அஞ்ஞானம்,
விஷக் காற்று வியாபகமாயுள்ளது.இவ்வண்டத்திலும்,ஜீவர்களிடத்திலும்
ஆதலால் ஜீவ கோடிராசிகள் சொற்பத்தில் அடிக்கடி நஷ்டப்பட்டுக்
கொண்டிருக்கின்றன.                    
    அமுதக் காற்று;----

      அமுதக் காற்று இவ்வண்டத்தில் அருணோதயம் தொடங்கி
உதய பரியந்தம் வியாபகமாய் இருக்கின்றது..அக்காலத்தில் ஜீவர்கள்
நன் முயற்ச்சியில் இருப்பது வ்சேஷநலம்.தேகாதி பிண்டத்தில் மேற்படி
அமுதக் காற்று வியாப்பியமாயிருக்கும்.ஒருகால் ஒரு ஷ்ணநேரம்
அந்தக் காற்று வியாபகமாயிருக்குங்கால்,ஜீவர்களுக்கு இது வரையில்
தாங்கள் அறியாததான கடவுள் விளக்கம் உண்டாகும் .
     மேற்படி காற்று வியாபகம் ஏகதேசமு மில்லாவிடில் ஜீவர்கள் ,
விஷக் காற்றினால் சதா வியாபகமடைதலில்,இந்தச சொற்ப ஜீவிப்பும்
விருத்திக்கு வர மாட்டாது.அமுதக்காற்று வியாபபியமன்றி வியாபகமாய்
இருக்குங் காலத்தில் ஜீவர்களுக்கு அறிவுவிளக்கம்,மனநெகிழ்ச்சி,
இந்திரிய அடக்கம்,ஈசுரபத்தி முதலியவும் விளங்கும்.
      அக்காலத்தை அமுதக் காற்றின் வியாபக காலமென்று அறிய வேண்டும்.
இதுவன்றி இருண்மயமாய் முன்பின் தோன்றாது அறிவின்றி இருக்குங்க்காலம்
விஷக் காற்று வியாபகமாய் இருக்குங்காலம் மென்று அறியவேண்டும்.
மேற்கண்டவாறு வள்ளலார் தெளிவுபட விளக்கியுள்ளார்.
     கிரகணம் என்பது;--
     ஆண்டத்தில் சந்திராதித்த கிரகண தோஷம் போல்--,நம் பிண்டத்தில்
(அதாவது உடம்பில் )கிரகண தோஷம் யாதெனில் பிண்ட புருஷனுக்குப்
புறமாகிய காரணமென்னும் சந்திரனாகிய தோற்றும் அறிவு,இரும்பில்
துரிசு ஏறுவதுபோல்,விஷய வாசனையில் அழுந்தி ஏகதேசப் பிரகாச
விளக்கமுடையதுதான் சந்திர கிரகணம் என்பதாகும் .
     இது அறியாமல் சூரிய கிரகணம் என்று வழங்கப்பட்டுவருகின்றன.
அகப்புறமாகிய ஜீவனென்னும் சூரியனாகிய தோற்றுவிக்கும்
அறிவு.செம்பிற் களிம் பேறுவதுபோல், விஷயவாசனைமயமாய் யாதும்      
 தோன்றாது அறிவின்றி நிற்குங் காலம் சூரிய கிரகணம் ,இஃது மாயா
சிருட்டிக்கு இயற்க்கையானாலும்,பரிசனாதி வேதிகளால் ரவுப்பியாதி
ஏமங்கள்செய்வது போல்,நன்முயற்சியாகிய ஜீவகாருண்ய மயமாய்ப்
பரிச்சியஞ் செய்தால் மேற்படி துரிசு நீங்கும்.மேலும் ஆசாரியார்(கடவுள் )
அனுகிரக்த்தாலும் நீங்கும் இது பிண்டாண்ட கிரகண சித்தாந்தம்.
என்பதாகும் .
     அண்ட பிண்ட திசைகள் ;--
     உலகம் உருண்டையானது,அது தன்னைத்தானே சுற்றிக் கொண்டு
இருக்கிறது என்பது,விஞ்ஞானம்,மெய்ஞ்ஞானம் அனைத்தும் ஒப்புக்
கொள்கிறது,உருண்டையான உலகம் (அண்டம் )சுற்றிக் கொண்டிருக்கும்
உலகத்திற்கு திசைகள் எப்படி கண்டறியமுடியும்,கிழக்கு,மேற்கு,வடக்கு,
தெற்கு,என்றும்,வடகிழக்கு,வடமேற்கு,தென் கிழ்க்கு,தென்மேற்கு.என்று
எட்டு திக்குகள் சொல்கிறார்கள்,இவை எப்படி பொருந்தும்,அதற்கு வள்ளலார்
சொல்லும் திசைகள் வருமாறு,
    அண்டத்திற்கு திசைகள்
அகம் --------- அக்கினி
அகப்புறம் ---சூரியன்
புறம் ----------சந்திரன்
புறப்புறம் ---நட்சத்திரங்கள்.
அப்படியே திசைகளாக வைத்துக் கொண்டாலும் .
அகம் ---------அக்கினி ;------------தெற்குபாகம்
அகப்புறம் --சூரியன் --------------மேற்குபாகம்
புறம் ----------சந்திரன் ------------கிழக்குபாகம்.
புறப்புறம் ---நட்சத்திரங்கள்---வடக்கு பாகம்                                           
என்பதை புரிந்து கொள்ள வேண்டும்,அண்டத்தில் உள்ள நான்கு
பாகத்திலும் நான்கு திசைகளிலும் கடவுளின் அருள் சக்தி அதன் அதன்.
சக்திக்கு தகுந்தாற்போல் விளங்கிக் கொண்டு இருக்கின்றது .அதன்
அதன் அருட் சக்தி யானது உலக உயிர்களுக்கு உயிர்களின் பக்குவத்திற்கு
தகுந்தாற்போல்,கொடுத்துக் கொண்டு இருக்கிறது.
      மழை ;--
     புகையின் மூன்றாவது கலையின் சீதள சக்தியினால்மழை உண்டாகின்றது.
இது போல் சூரிய கிரகண உஷ்ண ஆவியாகிய புகை ஒஷதிகளாலும்,
நீரிலும்,பாரிலும் பொறுப்பிலும் உள்ள திரவ சக்தியைக் கிரகித்து,
வாயு மண்டலத்தில் சேர்த்து,மேலும் கீழும் உஷ்ணம் நிரம்பி,மத்தியில்
உள்ள திரவ அணுக்கள் புழுங்கி நீராய்,கால பேத வண்ணம் வாயுவால்
பிரேரிக்கப்பட்டு அசைக்கும்போது,கீழும் மேலும் உள்ள உஷ்ணவாயு  .
தடிப்பு விலகும் போது மின்னலாகிய பிரகாசமும்,நெருங்கி யொன்று
படும்போது சத்தமாகிய இடியும்,அத்தொனியால் படலம் போல்மூடியிருந்த காராகிய மேகம் விலகி வாயுவால் கலங்கியபோது மழையும் உண்டாகும்,இத்வ ன்றி,மேகம்கடல் ஜ்லத்தைஉண்டு மழை பெய்வது என்பது பொய்.-அதேபோல் மனித உடம்பான பிண்டத்திலும்,அருள் சக்தி  செயல்பட்டுக்
 கொண்டு இருக்கிறது.மனித உடம்பில் அருள் சக்தி எப்படி செயல்பட்டுக்
கொண்டு இருக்கிறது.அதை எப்படி கிரகித்துக் கொள்வது என்பதை
பார்ப்போம்,  .  
      பிண்டம் அதாவது உடம்பு ;--

      பிண்டமான உடம்பில் அகம், அகப்புறம்,புறம் ,புறப்புறம் ,
என்னும்ஆன்மா,ஜீவன்,கரணங்கள்,இந்திரியங்கள்,என்னும் நான்கு
இடத்திலும் அருள் சக்தி காரியப்ப்டுகிறது,
அகம் என்பது ஆன்மா இருக்கும் இடம்,அது அக்கினி பிரகாசம் போல்
இருக்கிறது .அங்குதான் அருள் ஒளி முழு பிரகாசமாய்,உள்ளது
உடம்பிலுள்ளஅனைத்து இடங்களுக்கும்,அகப்புறமாகிய ஜீவனுக்கும்,
புறமாகிய கரணங்களுக்கும்,புறப்புற்மாகிய இந்திரியங்களுக்கும்,
அருள் ஒளி வழங்கிக் கொண்டு இருக்கிறது.அதனால் கடவுள்
இருக்கும் இடம் ஆன்மப் பிரகாசமாகும்.அதனால் நாம் இடைவிடாது
புருவ மத்தியின் கண், நம் மனதை செலுத்த வேண்டும் என்கிறார்
வள்ளலார் ,அதற்க்கு விளக்கமான பாடலை தருகிறார்
         ஞான சரியையில் ஒரு பாடல்;
குரித்துரைக்கின்றேன் இதனைக் கேன்மின்ங்கே வம்மின்
கொணுமனக் குரங்க்காலே நாணுகின்ற வுலகீர்
வெறித்த வும்மா லொருபயணும் வேண்டுகிலே னெனது
மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறு நினையாதீர்
பொறித்த மத்ஞ் சமயமெல்லாம் போய பொய்யே அவற்றில்
புகுதாதீர் சிவமொன்றே பொருளெனக் கண்டறிமின்
செறித்திடு சிற்சபை நடத்தைத் தெரிந்து துதித்திடுமின்
சித்தியெல்லாம் மித்தினமே சத்தியஞ் சேர்ந்திடுமே .
   என்று தெளிவாக விளக்கமாக தெரிவித்துள்ளார் வள்ளலார்
சிற்சபை என்பது ஆன்மா இருக்கும் இடம் அதாவது உள்ளொளி
இருக்குமிடமாகும்,அங்கிருந்துதான் எல்லா சக்திகளும் வேலை
செயவதற்கு அருள் என்னும் ஆற்றல் வெளிப்படுகிறது .இதை
தெரியாமல் மனித இனம்,கணடதெல்லாம் கடவுள் என நம்பி
ஏமாந்து கொண்டு இருக்கிறார்கள்
     ஆன்மாவிலுள்ள அருள்,உலக போகததினால்,குறைவு ஏற்ப்பட்டு
அனைத்தும் தீர்ந்து இறுதியில் மரணம் ஏற்படுகிறது, ஆன்மாவிலுள்ள
அருள் குறையாமலும் மேலும் அருளை சேமிக்கவும் நமக்கு ஒரு
அற்ப்புதமான வழியை காட்டுகிறார் வள்ளலார் .
அருள் இருக்கும் இடம் அவை கிடைக்கும் நேரம்,
இந்த அண்டத்தில் பிரமாண்ட பகிரண்ட கடாகத்தில்,அருள் அமுதக்காற்று
நிறைந்து இருக்கிறது,ஆதலால் இந்த உலகம் எக்காலத்திலும் அழியாது,
இயங்கிக்கொண்டே இருக்கும்,அங்குள்ள அமுதக் காற்று பூலோகத்திலுள்ள,
எல்லா உயிர்களும் நன்மை அடையும் பொருட்டு,ஜீவிக்கும் வகையில்
ஒவ்வொரு நாலும் அதி காலை மூன்று மணியிலிருந்து காலை ஆறுமணி
வரை பூமியை நோக்கி விசேச வியாபகமாய் இருந்து கொண்டு இருக்கிறது.
இந்த காலங்களில் ஜீவர்களாகிய நாம் துங்காமல் விழிப்புடன் இருந்து
அந்த காலங்களில் அமுதக் காற்றை சுவாசிக்க வேண்டும்,
     அந்த காலங்களில் அமுதக் காற்றை சுவாசிக்கும் போது ஜீவர்களுக்கு,
அறிவு விளக்கம்,மனநெகிழ்ச்சி இந்திய அடக்கம்,கடவுள் பக்தி,அதாவது
கடவுள் உண்மை போன்ற அனைத்தும் தெளிவாக விளங்கும் .இதை
இடைவிடாமல் தினந்தோறும் செய்து வரவேண்டும்.அப்படி செய்து
வந்தால் மருள் என்னும் அஞ்ஞானம் நீங்கி,அருள் என்னும் அமுதம்
ஆன்மாவில் நிரம்பி,அளவு குறிக்கப் படாத அற்புத சித்திகலெல்லாம்
விளங்கும்,மரணத்தை வெல்லும் ஆற்றல் கிடைக்கும் என்கிறார்
வள்ளலார்.இதைவிடுத்து கண்டதெல்லாம் கடைப்பிடித்து,உண்மை
தெரியாமல் வீண் காலம் கழித்துக் கொண்டு இருக்காதீர்கள்.என்பதை
வள்ளலார் தெரிவிக்கும் மற்றும் ஒரு பாடல்
ஞான சரியை என்னும் பதிகத்தில் ஒரு பாடல்;-

கண்டதெல்லா மனித்தியமே கேட்டதெலாம் பழுதே
கற்றதெலாம் பொய்யே நீர் களித்ததெலாங் வீணே
உண்டதெலா மலமே யுட் கொண்டதெலாங் குறையே
உலகியலீர் இதுவரையு முண்மை அறிந்திலிரே
விண்டதனால் லென இனிநீர் சமரச சன்மார்க்க
மெய் நெறியைக் கடைபிடித்து மெய்ப் பொருள் நன்குணர்ந்தே
எண்டகு சிற்றம் பலத்தே எந்தையருள் அடைமின்
இறவாத வரம் பெறலாம் இன்பமுறலாமே.

என்று தெளிவுப்படுத்துகிறார் வள்ளலார்.
     பிண்ட திசைகள் ;-
  
பிண்டதிசை ;--கிழக்கு,மேற்கு,தெற்கு,வடக்கு.என்பவற்றில்
தலை ---தெற்கு, கால் ---வடக்கு ,நெற்றி ---கிழக்கு,முதுகு--மேற்கு ,
என்றும் சொல்லுவார்கள்.
கிழக்கை------ நோக்கித் தியானம் செய்கின்றது ,போக சித்தியைப்
பெறுகிறதற்கு,
மேற்கு----நோக்கிதியானம் செய்கின்றதுசொர்ண சித்தியைப்
பெறுகின்றதற்கு.
தெற்கு -----நோக்கித் தியானம் செய்கின்றது சாகாக்கலையை
(நித்தியா தேகத்தையும் ஞான சித்தியையும் )பெறுகிறதற்கு .
வடக்கு ---நோக்கி தியானம் செய்கின்றது ,சித்தசுத்தியை பெறுகிறதற்கு.

    மேலும் வடக்கு காற்புறம்,தெற்கு தலைப்பக்கம்,இதனால்தான் தெற்கு
ஞானத்தில் சிறந்தது ;வடக்கு அஞ்ஞானத்தில் அழுந்தியது,என்பதாகும்
    தலை கீழ்,முடி மேல்,அடி தலை,முடி கால்,
தலை ---கிழக்கு,
கால் ;-----மேற்கு,
கிழக்குதாழ்ந்தது,;மேல் திக்கு உயர்ந்தது,மேலும் இவற்றை அனுபவத்தால்
அறிக எனமுடிக்கிறார் வள்ளலார்.அதன் உண்மை என்ன வென்றால்
அனுபவத்தால் உணர்ந்தால் தான் உண்மை விளங்கும் என்கிறார்,
ஏட்டில் எழுதினாலோ,சொன்னாலோ புரிந்து கொள்ள முடியாது .
ஒவ்வொருவரும் அனுபத்தினால்தான் அறியமுடியும் அப்பொழுதுதான்
உண்மை விளங்கும் என்கிறார்
 சொல்லால் அளப்பரிதாம் ஜோதி வரை மீது
தூய துரி அப்பதியில் நேயமற ஓது,
  இதை எல்லாம் சொல்லி தெரிந்து கொள்ள முடியாது அனுபவத்தால்தான்
தெரிந்து கொள்ளமுடியும்.அனுபவம் என்றால் இப்பிரபஞ்ச்சத்தில் உள்ள
ஆற்றல் மிகு அருளை யார் பெறுகிறார்களோ அவர்கள் தான் இந்த
உண்மைகளை அறிந்து ,தெரிந்து கொள்வார்கள்,அப்படி அறிந்து தெரிந்து,
கொண்டவர் இவ்வுலகில் வள்ளலார் ஒருவர்தான் என்பது அனைவரும்
அறிந்து கொண்ட உண்மை யாகும்.
      முழுமையான அருளைப் பெற்ற வர்களுக்கு,நரை,திரை பிணி,மூப்பு,
மரணம் எதுவும் வராது.மரணத்தை வென்றவர்களால் தான்,உலகின்
உண்மையை அறியமுடியும் என்பது வள்ளலார் வகுத்து தந்த உண்மை
நெறியான சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க நெறியாகும்.மற்ற
நெறிகளைப்போல் அல்லாமல் உலகம் முழுவதும்  ஏற்றுக் கொள்ளும்
அனைவருக்கும் பொதுவான நெறியாகும்.
     சாதி ,சமய மதம் அற்ற பொது நெறியாகும்.அதுவே திரு நெறியாகும்.
அதை வள்ளலார் திரு அருட்பாவில் ஞான சரியை என்னும் பதிகத்தில்
தெரியப்படுத்தியுள்ளார்
        பாடல் வருமாறு
திருநெறி யொன்றே யதுதான் சமரச சன்மார்க்க்ச
சிவநெறி என்று உணர்ந்து உலகீர் சேர்ந்திடுமின் நீண்டு
வருநெறியில் எனை யாட்கொண்டு அருள் அமுதம் அளித்து
வல்லப சத்திகலெல்லாம் வழ்ங்கிய வோர் வள்ளல்
பெரு நெறியிற் ச்த்தாடத் திருவுளங் கொண்டருளிப்
பெருங்கருணை வடிவினொடு வருதருணமிதுவே
கருநெறி வீழ்ந்து உழலாதீர் கலக்கமடையாதீர்
கண்மையிநாற கருத்தொருமித்து உண்மை யுரைத்தேனே

என்று விளக்கம் தருகிறார் வள்ளலார் .அடுத்து,சந்திரன் ,சூரியன்
அக்கினிப் பற்றி விளக்குகிறார் வள்ளலார்

  சந்திரன் -சூரியன் -அக்கினி 
  சூரியன் ஆணாகவும் சந்திரன் பெண்ணாகவும் ,வலம் இடம்
சத்தி சிவமுமாக உடையது மருட்டேக ஞாயம்
வலம் சந்திரனாகிய சததியாயும்,இடம் சூரியனாகிய சிவமாயுமிருப்பது
அனுபவம்.
திரிசிய அனுபவத்திலுள்ள இடம் வலமாகவும்,வலம் இடமாகவும்
அனுபவம் தோன்றும் ,
      சந்திர,சூரிய,அக்கினியின் கூட்டுறவால் ஏழு நாட்கள் தோன்றும் முறை .

சந்திரன் அக்கினியோடு குடியபோது பானுவும் (ஞாயிறு )
மேலும் சூரியன் அக்கினியோடு கூடினால் [திங்களும்)         
சூரியன் மதியோடு கூடியபோது பவுமனும் (செவ்வாய் )          
சந்திரன் பானுவோடு கூடியபோது சவுமியனும்(புதன் )
சூரியன் சவுமியனோடு கூடியபோது குருவும் (வியாழன்)
சந்திரன் ப்வுமனோடு கூடியபோது பிருகுவும் (வெள்ளி ) 
சூரிய சந்திரர்கள் அக்கினியோடு கூடியபோது மந்தனும் (சனி )
தோன்றும் ஆக ஏழு நாட்கள் தொன்றியவிதம் மேலே கண்டபடி
செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது .
      மேற்படி சூரியனுக்குக் கலை 16 ,மேற்படி கலை 16 ல்,சந்திரனுக்கு
கலை 4 ,போக இருப்பு கலை 12 ,சூரியன் காரியவுருவன்.
     சந்திரனுக்குக்  கலை 16 ல்,  சந்திரனுக்குக் கலை 4 ,போக இருப்பு
கலை 12 ,
     சூரியன் காரியவுருவன் சந்திரனுக்குக் கலை 16 ,மேற்படி கலை 16 ,ல்
தாரகைகளுக்குக் கலை 4 ,போக;;சூரியனால் கொடுத்த 4 ,கலையுஞ்
சேர்த்து சந்திரனுக்குக் கலை 16 ,
    சந்திரன் காரியகாரண உருவன் சகலன் சூரியன், கேவலன் சந்திரன் ,
அனுபவத்தில் இடம் வலம் போல் மாறும்..
    பிரமத்துவம் சூரியனிடத்திலும்.வ்ஷ்ணுத்துவம் சந்திரனிடத்திலும்,
உள்ளன
   திருவிளையாடல்கள் .
    அக்கினிக்குக் கலை 64 ,இப்போது எட்டுக் கலையோடு காரண
உருவனாய் மற்றைக் கலைகளை உள்ளடக்கி நீருறு தீப்போல்
எங்குமுடயவன் ஆகக் களை 96 ,தத்துவமாய்ப் பிண்டவடிவாயிற்று
96 ,மேற்படி 96 ,கலையே 96 ,தத்துவமாய்ப் பிண்ட வடிவாயிற்று
     அக்கினி கலை 64 ,ன் குணங்களே சைவத்தில் 64 ,திருவிளையாடல்கள்
ஆகவும் .உண்மை அடியார்கள் 63 ,வும் அதீதம் ஒன்று ஆகவும்
வழங்குகின்றன.
      சந்திரக்கலை 12 ,மே வைஷ்ணவ பரத்தில் துவாதச ஆழ்வார்களாக
வழ்ங்குகின்றன.மற்ற 20 ,கலையும்,கவுமாரம் ,பாசுபதம்,மகாவிரதம்,
சாத்தேயம் ,காணாபத்தியம்,காபாலம்,சவுரம்,மகம் மதியம்,பவுத்தம் ,
கிருத்தவம் ,முதலிய சமயங்களில் வழங்குகின்றன.இவற்றின்
அனுபவங்களைக் குரு முகத்தில் அறிக என்று முடிக்கிறார் வள்ளலார்.
    அமாவாசை,பவுர்ணமி ;--
   மேற்குறித்த சோம சூரியர்கள் ஒன்றுபடுவது அமாவாசை .
ஒன்று பட்ட ஒவ்வொரு கலையாகச சூரியன் இடத்திலிருந்து விடுபட்டு
மேலேறிப் ப்கிரண்டத்தில் செல்லும்போது 16 ,கலையும் பூர்த்த்தயாய்ப்
பிரகாசிப்பது பவுர்ணமி .
     ப்கிரண்டத்திலிருந்து பிரமாண்டத்திற்கு வியாபகமாகும் போது,
சூரிய உஷ்ணம் சோம கலையை ஒவ்வொன்றாகக் கிரகிக்க ஒருகலையோடு
பானுவுடன் சேர்தல் அமாவாசை .
     மேற்படி சோம கலையைப் பானு கிரகிக்காவிட்டால் இவ்வுலகம்
ஜீவிக்காது.சூரியன் பிரமாண்ட பகிரண்ட வியாபகி,சந்திரன் பகிரண்ட
பிரமாண்ட வியாபகி,சந்திரன் பகிரண்ட பிரமாண்ட வியாபகி,
சூரியன் வியாபகம் தோன்றாது ,சந்திரன் வியாபகம் தோன்றும் .
    அனுபவத்தில் சத்தி சிவம் ;-௦ ௦                                         
      சூரியன் அக்கினியோடு கூடியபோது சந்திரனாம் .
சந்திரன் அக்கினியோடு கூடியபோது சூரியனாகும் .
சூரியன் ஆணாகவும்,சந்திரன் பெண்ணாகவும்,வலதுபாகம்
சிவமாகவும்,இடதுபாகம் சத்தியாகவும் வழங்கி வருவது மருட்டேக
நியாயம் .வலது பாகம் சத்தியாகவும் இடது பாகம் சிவமாகவும்
இருப்பது அனுபவம் .

சந்திரன் ;---
ரூபாருபி
காரியகாரணன்
சொபாமாத்திரன்
சுடாததன்மை
கலை 12 ,தாரகை கலை 4 ,
அர்த்தவடிவன்
பிரமாண்ட பகிரண்ட வியாபகன்
பச்சை ,வெண்மை கலந்தமேனி
மன அறிவு
மன ஒளியே பதி
சூரியன் ;--                    
 ரூபி
காரியன்
ஒளிமாத்திரன்
சுட்டும் சுடாத தன்மை
கலை 16
வட்டவடிவன்
பிரமாண்ட வியாபகி
பஞ்ச வர்ணம்
ஜீவ அறிவு சபை
ஜீவ ஒளியே பதி ,
அக்கினி '== 
அரூபி
காரணன்
பிரகாச மாத்திரன்
சுடும் தன்மை
கலை 64 ,
பூர்ணவடிவன்
வியாபகி
எங்கும் வியாபகி
சுவர்ணம்
ஆன்ம அறிவு சபை
ஆனம் ஒளியே பதி
பஞ்ச வர்ணங்களாவன  ;--
வெண்மை-------ஆதிசத்தி ---------------அனுக்கிரகம்
பச்சை .    ---------பராசத்தி -----------------திரோபவம்
செம்மை ---------இச்சாசத்தி --------------சம்மாரம்
கருமை -----------கிரியாசத்தி -------------ஸ்திதி
பொனமை -------ஞான் சத்தி -------------சிருஷ்டி

சிருஷ்டி நியாயம் ;-- 
ஆகாயம் அனாதி, அதுபோல் அதற்குக் காரணமான பரமாகாச சொரூபமாகிய
கடவுள் அனாதி .அனாதியாகிய ஆகாசத்தில் காற்றும் அனாதி,
அநாதியான வெளியில் காற்று எப்படி அனாதியோ,அப்படிக் கடவுளிடத்தில்
அருட் சத்தி அனாதியாய் இருக்கின்றது.
ஆகாயத்தில் அணுக்கள் நீக்கமற நிரம்பியிருக்கின்றன .
இதுபோல் கடவுள் சமுகத்தில் ஆன்மாகாசத்தில் அணுக்கள் சந்தானமயமாய்
நிரம்பி இருக்கின்றன .
அந்த அணுக்களுக்கு ஆன்மா என்றே பெயர் .

அணுக்கள் எழுவகை ;--
      புதாகாயத்திலிருக்கும் சாதாரண அசாதாரண அணுக்கள் எழுவகையாய்ப்
பிரியும் .
அவைகள் ;-
வாலணு,
திரவ அணு,
குரு அணு ,
லகு அணு,
அணு ,
பரமாணு ,
விபு அணு ,

மேற்படி அணுக்கள் ஆனந்தவண்ண பேதமாய் இருக்கும் .இவற்றில்
காரிய அணு ,காரிய காரணஅணு,காரண அணு ,என மூன்று வகையாய்,
பக்குவம், அபக்குவம்,பக்குவா பக்குவம்,மென நிற்கும் .
     இவைபோல் ஆன்மாகாயமான கடவுள் சமுகத்தில் ஆன்மாக்களும்
மூன்று வகையாய் நிற்கும் .யாவையெனில் பக்குவ ஆன்மா,
அபகுக்குவ ஆன்மா,ப்க்குவாபக்குவ ஆன்மா ,என முவகைப்படும்.
     ஆகாயத்திலிருக்கும் அணுக்கள் மூன்று விதமானதற்குக் காரணம்
அங்குள்ள காற்றேயாம்.அதுபோல் ஆன்மாக்கள் முவிதமானதற்குக்
காரணம் கடவுள் சமூகத்திலுள்ள அருட் சத்தியேயாம்.
மூன்று தேகம் .
      அப்படி மூவகையான ஆன்மாக்களுக்கு அருட்சத்தியின் சமூகததில்
தோன்றிய இச்சை ,ஞானம் ,கிரியை என்னும் பேதத்தால் ஆன்மாக்களுக்குத்
தேகம் மூன்று உள்ளது யாவையெனில் ,
    கர்ம தேகம் ,பிரணவ தேகம்,ஞான தேகம் என மூன்று விதம். அப்படி
மூன்று தேகம் உண்டானதற்குக் காரணம்;பூத ஆகாயத்திலுண்டான வாயு
பேதத்தினால் சோம சூரிய அக்கினி யென மூன்று வகை நிற்பன போல்
உணர வேண்டும் .
   வாயுவின் பேதம் ;- 
     அந்த ஆகாயத்தை விரிக்கில் அனந்த பேதமாம் .வாயுவின் பேதம்
இவற்றில்
அமுதபாகம் -----அமுதக்  காற்று
விஷ பாகம் ------விஷக் காற்று ,
பூத பாகம் ---------பூதக் காற்று ,
உஷ்ண பாகம்---உஷ்ணக் காற்று
எனப் பல பேதப்படும்.
    உயிர்த் தோற்றம் ;--
மேற்படி அணுக்கள் அனந்த வண்ண மாதலால் அனந்த அணுக்கள்
சேர்ந்து ஒரு வித்தாய்,இவ்வித்து திரவ அணு சம்பந்தமாய் குருஅணுவோடு
சேரும் போது, பூதகாரிய அணுவாகிய கிரண உஷ்ணத்தால் ஜீவிக்கும் .
ஜீவித்த ஓஷதி முதலியன இந்த நியாத்தால் வர்ணம் ,ருசி ,முதலிய
பேதப்படுகின்றன.
      இவ்வண்ணமே பவுதிக பிண்ட அணுக்கள் காரண சூரிய உஷ்ணமாகிய
ஜீவ உஷ்ணத்தால் வடிவமாய் ,பரமகாரண தயையால் ஜீவிக்கின்றன .
சிலகாலத்தில் விருஷ் மாதியாம்,எல்லா வற்றிற்கும் ஆதியாயுள்ளது
பூதகாரிய அணுவாகிய சூரிய கிரணமேயாம் .
       அருள் சத்தி;--
    இவ்வண்ணமே ஒரு காலத்தில் கடவுள் பிரேரகத்தால் அருட் சத்தி
ஆன்மாகாசத்தில் விசிரிம்பிக்க,ஆன்மாக்கள் வெளிப்பட்டுப் பஞ்ச
கிருத்தியத் தொழிற்படும் .மேற்படி ஆன்மாக்கள் வெளிப்பட்ட
அக்கணமே,மேற்படி ஆகாயம் சந்தானமயமானதால் ஆன்மாக்கள்
நிரம்பி நிற்கும் .ஆதலால் பஞ்ச கிருத்தியம் எக்காலத்தும் தடையறாது.
ஆன்மாக்கள் தாழ்ந்த கதியடைவது அனாதி இயற்கை அல்ல .
ஆதி செயற்கை யாம் .ஆணவம் அனாதி இயற்கையாம் .இதன்
ரகசியம் குரு முகமாய் அறிக.

    பஷ்ச பேதமும் சிருஷ்டியும்;-
     சிருஷ்டிகள் பஷசபேதத்தால் அனந்தவகை ,பஷ்சமாவன
அணு பஷசம்,பரமாணு பஷசம்,சம்பு பஷசம்,விபு பஷசம்,பிரகிருதி பஷசம்,
ஆக 5 ,
     இவற்றில் சம்பு ,விபு இவ்விரண்டிற்கும் அபக்குவமில்லை.
மற்ற மூன்றிற்கும் பக்குவ் அபக்குவமுள,இதற்குப் பிரமாணம்
      பாடல் ;--
அடர்மலத் தடையால் தடையுறு மயன் மால் அரன் மயேச்சுரன் சதாசிவன் வான்
படர்தரு விந்து பிரணவப் பிரமம் பரை பரம்பர னெனு மிவர்கள்
சுடர் மணிப் பொதுவிற் திருநடம் புரியும் துணையடிப் பாதுகைப் புறத்தே
இடர் கெட வயங்கும் துகளென வறிந்தேன் ஏத்துவேன் திருவடி நிலையே .

தடையுறாப் பிரமன் விண்டு ருத்திரன் மயேச்சுரன் சதாசிவன் விந்து
நடையுறாப் பிரம முயர் பராசத்தி நவில் பரசிவம் மெனும் மிவர்கள்
இடையுறாத் திருச் சிற்றம்பலத்தாடும் இடது காற் கடை விரல் நகத்தின்
கடையுறு துகள்கள் என்று அறிந்தனன் அதன் மேற் கண்டனன்திருவடி நிலையே .

    மேலே கண்ட பாடலில் உள்ள விளக்கம் என்ன வென்றால் ,இந்த
உலகத்தில் ஐந்தொழில் கர்த்தாக்கள் என்று சொல்லப்படும் ,பிரமன்,
விஷ்ணு ,ருத்திரன்,மயேச்சுரன்,சதாசிவம் என்பவர்கள் எல்லாம்
பொய்யான கற்பனை வடிவங்களாகும் .அப்படியே அவர்கள் இருப்பதாகவே
இருந்தாலும் அவர்கள் நிலை என்ன வென்றால் என்னுடைய இடது கால்
கடை விரல் நகத்தின் ஒரு துகள் என அறிந்தேன்.
      மேலே கண்ட விபரங்கள் தெரியாமல் இப்படி பொய்யான தத்துவங்களை
கடவுள் என்று படைத்து விட்டார்கள்,அதையும் மெய என்று நம்பி இந்த
மக்கள் ஏமாற்றத்துடன் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள் என்று வள்ளலார்
மிகவும் வேதனையுடன் உண்மைகளை தெரிவிக்கின்றார்.இனிமேலாவது
இந்த உலக மக்கள்உண்மையை  புரிந்து கொளவார்கள்.என்பதை
வெட்ட வெளிச்சமாக்கி விட்டார் .
   மேலும் விபரத்திற்கு வருவோம்,
மேற்படி பஷ்ச சிருஷ்டி விசித்திரங்களாவன்;--      
       அணு பஷ்ச அபக்குவ சிருஷ்டி ;;
ஓஷ்திகளாலும் ப்வுதிகங்களாலும், ஆகாரம் மூலமாய்,ஸ்திரி புருஷ
சம்பந்தத்தோடு உண்டாக்குவது ;.
மேற்படி பக்குவ சிருஷ்டியாவது;--,புருஷன் ஸ்திரியைப் பார்ப்பதுபோல்
தன் அஷத்த்தால் ஸ்திரீயைத் தடவி ஊன்றி நோக்கிப் புருஷனோடு
தேக சம்பந்தஞ் செய்வித்து உண்டாக்குவது.
பரமாணு பஷ்ச அபக்குவ சிருஷ்டி;-தேகத்தைக் கரத்தால் பரிசித்து ஊன்றிப்
பார்த்த உடன் கருத்தரித்தல்.
மேற்படி பஷ்சத்தில் பக்குவம்;---கண்ணால் பாரதத் உடனே புணர்ச்சியின்றிக்
கருத்தரித்தல் .
சம்பு பஷ்சம் ;---வாக்கினால் சொன்னவுடன் கருத்தரித்தல் .
பிரகருதி பஷ்சத்தால் ;--சங்கற்பித்த முன்றேமுக்கால் நாழிகைக்குள்
பிண்டம் கீழத் தோன்றுதல்.
விபு பஷ்ச சிருஷ்டி ;---பார்த்தவுடன் திரண முதலானவற்றையும்
நரனாகச செய்வித்து அநேக விசித்திரங்கள் உண்டுபண்ணுவது .
மேற்படி பலவிதமான முறைகளில் சிருஷ்டிகள் விரிந்தன இவை
தெரியாமல் வேதம் ஆகமம் புராணம் இதிகாசம் போன்ற நுல்களில்
பொய்யான தகவல்களை தந்துள்ளார்கள் .அதையும் மக்கள் மெய் என்று
நம்பி ஏமாந்து வீண் காலம் கழித்துக் கொண்டு இருக்கிறார்கள் .
       வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் 
வேதாகமங்கள் என்று வீண் வாதம் மாடுகின்றீர்
வேதாகமத்தின் விளையரியீர் ---சூதாகச
சொன்னவலால் உண்மை வெளிதோன்ற வுரைத்த்லிலை
என்ன பயனோ இவை .
     என்று வேதாகமங்களை சாடுகிறார் ,இவைகளினால் எந்த பயனும்
இல்லை,இவைகளை அழித்து விடுங்கள் என்கிறார் .
உண்மையை உணர்ந்து கொள்ள வள்ளலார் எழுதிய திரு அருட்பாவை
படித்து சுத்த சன்மார்க்க கொள்கைகளை கடைபிடித்து ,உயிர்க்கொலை
செய்யாமலும் புலால் உண்ணாமலும்,ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடாகக்
கடைபிடித்து ,துன்பமும் ,துயரமும் .அச்சமும் இல்லாமல் மனஅமைதி
யோடு வாழ்வோம் .
   எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ,
  கொல்லா நெறியே குவலயம் ஓங்குக .
உங்கள் ஆன்மநேயன் அன்புடன் கதிவேலு .
மீண்டும் பூக்கும் .
    
                    

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு