வியாழன், 17 ஜூன், 2010

அருட்பெரும் ஜோதி ;--பாகம் ;-5

        

         எல்லா அண்டங்களையும்,எல்லா புவனங்களையும் ,எல்லாப்

பொருள்களையும்,எல்லா ஜீவர்களையும் ,எல்லா ஒழுக்கங்களையும் 

எல்லாபயன்களையும்,தமது பூரண இயற்க்கை விளக்கமாகிய,

அருள் சக்தியால்,தோன்றி விளங்க விளக்கம் செய்விக்கின்ற ,

இயற்கைஉண்மை வடிவினராகிய்,ஒரே கடவுள் அருட்பெரும் ஜோதி
என்னும் மாபெரும் ,அணுவாகும் ,

        அருட்பெரும்ஜோதி என்னும்,அணுவானது எப்படி செயல் படுகிறது ,
என்பதை வள்ளலார் திருஅருட்பாவில்உள்ள நடராஜபதி மாலையில் ,
பதிவு செய்துள்ளார்.

ஒரு பிரமன்அண்டங்கள் அடி முடி பெருமையே 
உன்ன முடியாது அவற்றின்
ஓராயிரம் கோடி  மாலன்டம் அரனண்டம்
உற்ற கோடாகோடியே
திருகளறு பல கோடி ஈசன் அண்டம் சதா 
சிவன்அண்டம் எண்ணிறைந்த
திகழ்கின்ற மற்றைப் பெரும் சத்தி சத்தர் தஞ் 
சீரன்டம் என்புகழுவேன் 
உருவுறு இவண்டங்கள்அத்தனையும் அருள்வெளியில் 
உருசிறு அணுக்களாக
ஊடசைய அவ்வெளியின் நடுநின்று நடனம்மிடும் 
ஒரு பெரும் கருணை அரசே 
மருவி எனை ஆட்கொண்டு மகனாக்கி அழியா 
வரம் தந்த மெய்த்தந்தையே
மணி மன்றில் நடுநின்ற ஒரு தெய்வமே எல்லாம் 
வல்ல நடராஜபதியே,

என்றும்,அடுத்து வரும் பதிவிளக்கம்என்னும் பகுதியில் ,
ஒரு பாடல் பதிவு ,

இயற்கையிலே பாசங்கள் ஒன்ரும் இல்லார் குணங்கள் 
ஏதும் இல்லார் தத்துவங்கள் ஏதும் இல்லார் மற்றோர் 
செயற்கை இல்லார் பிறப்பு இல்லார் இறப்பு இல்லார் யாதும் 
திரிபு இல்லார் களங்கம் இல்லார் தீமை ஒன்றும் இல்லார் 
வியப்புற வேண்டுதல் இல்லார் வேண்டாமை இல்லார் 
மெய்யே மெய்யாகி எங்கும் விளங்கி இன்ப மயமாய்
உயத்தகுமோர் சுத்த சிவானந்த சபை தனிலே 
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் ,

அடுத்து ஒரு பாடல் ,

ஒன்றும் மிலார் இரண்டும் மிலார் ஒன்றும் இரண்டும் மானார் 
உருவு மளார் அருவுமளார் உ ருவருவுமானார்
அன்ருமுளார் இன்ருமுளார் என்ரும்முளார் தமக்குஒர்
ஆதிஇல்லார் அந்தமில்லார் அருட்பெரும்ஜோதியினார்
என்று கனல் மதி அகத்தும் புறத்தும் விளங்கிடுவார் 
யாவும் இல்லார் யாவும்முள்ளார் யாவுமளார் யாவும் 
ஒன்றுறு தாமாகி நின்றார் திருச்சிற்றம் பலத்தே 
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் ,

என்று வள்ளலார் அருட்பெரும்ஜோதியைப் பற்றித்தெளிவுப் 
படுத்தியுள்ளார் ,

சமய ,மதங்களில் சொல்லியககடவுள் அல்ல ,
வள்ளலார் காட்டிய ,கண்ட ,,உண்மையான தனிக்கடவுள் ,
அருட்பெரும்ஜோதியாகும்,என்பதை தெளிவாக ,
விளக்கயுள்ளார் ,

இனி வள்ளலார் கட்டிய சுத்த சன்மார்க்க நெறியை, 
உண்மையுடன்கடைப்பிடித்து வாழ்ந்து ,மற்றவர்களுக்கும் ,
வ்ழிகாட்டு வோம்,
நன்றி ,;----மீண்டும் பூக்கும்,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு