புதன், 16 ஜூன், 2010

அருட் பெரும் ஜோதி ;-பாகம்---3


             அருட் பெரும் ஜோதி என்னும் மாபெரும் அணுவானது ,இயற்கை

உண்மை நிறைவாகி உள்ள ஓர் சுத்த சிவானுபவ வெளியில் ,இயற்கை விளக்க
நிறைவாகி விளங்கிய  அருட்பெரும்ஜோதிசொருபராய்  ,இயற்கை 
இன்ப நிறைவாகி ஓங்கிய சிவானந்த ஒருமைத் திருநடச செய்கையை ,
எல்லாஉயிர்கலும் இன்பம் அடைதல் பொருட்டுத் திறுவுளக்கருனையால்
செய்தருளுகின்ற ,
சர்வ வல்லபராகிய தனித்தலைமைக் கடவுள் அருட்பெரும்ஜோதி என்பதாகும்,
அருட்பெரும் ஜோதிக்கு பலபெயர் வழங்கப்பட்டு உள்ளது ,
அவைகள் ;-----இயற்கை உண்மையர் என்றும் ---,இயற்கை அறிவினர் என்றும் -----,இயற்க்கை அன்பினர் என்றும்---- ,நிற்குனர் என்றும் ,
சிற்குனர் என்றும் ,----சித்தியர் என்றும் ,-----சத்தியர் என்றும் ,----
ஏகர் என்றும் ,-----அநேகர் என்றும் ,-----ஆதியர் என்றும் ,---
அனாதியர் என்றும் ,----அற்புதர் என்றும் ,--நிர்அதிசியர் என்றும் ,---
எல்லாம் ஆனவர் என்றும் ,----எல்லாமுடையவர் என்றும் ,------
எல்லாம் வல்லவர் என்றும் ,-----அருட்பெரும்ஜோதியர் என்றும் ,
குறிக்கப்படுதல் முதலிய் அளவுகடந்த திருகுறிப்புப்  திருவார்தைகளால்,சுத்த சன்மார்க்க ஞானியாகிய வள்ளலாரால்,
துதித்தும்,நினைந்தும் ,உணர்ந்தும், புணர்ந்தும் அனுபவித்தும் ,வெளியிடப்பட்டதாகும் ,
அவ்வாறு விளங்குகின்ற ஒருவரே யாகிய கடவுளை, இவ்வுலகில்
உள்ள ஜீவர்களாகிய நாம் அறிந்து அன்பு செய்து ,அருளை அடைந்து ,
அழிவில்லாத் சத்திய பூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல் ,
பல்வேறு சமய,மத மார்கக்ங்களிலும்,பல்வேறு லஷயங்க்களைக்
கொண்டு ,நெடுங்காலம் பிறந்து பிறந்து ,இறந்து இறந்து ,அவத்தை 
வசத்தர்களாகிச சிறியஅறிவுமின்றி ,விரைந்து விரைந்து ,பல்வேறு 
ஆபத்துகளினால் துன்பத்தில் அழிந்து வீண் போகின்றோம் ,
இனியும் அப்படி வீண் போகாமல் ,வள்ளலார் காட்டிய ,
சமரச சுத்தசன்மார்க்க நெறியை கடைப் பிடித்து வளமுடன் 
வாழ்வோம்,
நன்றி ,;----மீண்டும் பூக்கும்; 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு