புதன், 16 ஜூன், 2010

அருட் பெரும் ஜோதி,பாகம் ;--4

        அருட்பெரும்ஜோதி ,என்பது மாபெரும் அணுவாகும் ,
இதற்க்கு இயற்கை உண்மை என்று பெயர் ,இதை யாராலும் ,
உருவாக்க முடியாது ,அழிக்கவும் முடியாது .என்றும் உள்ளதாய் 
விளங்கபட்டது ,
பலகோடி அண்டங்களும் ,அண்டங்களில் உள்ள பூதங்க்களும்,
பூதங்களை இயக்கம் மாயை ,மாமாயை ,பெருமாயை என்னும் 
அணுக்களும்,உயிர்கள் தோன்ற காரணமாய் இருக்கும் ,
ஆன்மாக்களுக்கும் [ஆண்மானு ] மற்றும் உள்ள எல்லாவற்றிர்க்கும் ,
முழு முதற்ககாரணமாய் விளங்குவது அருட்பெரும் அணுவாகும் ,
இதற்கு,பெயர்,  சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை என்பதாகும்.
இதற்கு அருள்வெளி என்றும் பெயர் ,
இந்த அருள்வெளியில் அருள் சக்தி அனாதியாய் நீக்கமற நிறைந்தது ,
இருக்கிறது .ஆகாயம் அனாதியாய் நீக்கமற நிறைந்தது இருக்கிறது .
அதுபோல் ,அதற்க்குக காரணமான பரமாகாச சொருபராகிய
அருட்பெரும் அணு அனாதியாய் நீக்கமற் நிறைந்தது இருக்கிறது .
இந்த அருட் பெரு வெளியில் தான் ,ஆன்மா என்னும் அணுக்களும் 
நீக்கமற நிறைந்து நிரம்பி இருக்கின்றன் 
அருட்பெரு வெளியில் ;--
1 ,அருள்வெளி ,
2 ,அருள் காற்று 
3 ,அருள் அமுதம் 
4 ,அருள் ஆன்மா 
5 ,அருட்பெரும்ஜோதி என்னும் [மாபெரும் அணு ]
இவை ஐந்தும் அருட்பெரு வெளியில் நீக்கமற நிறைந்தது ,
இருக்கின்றன் .
அருட்பெரும் அணுவின் மூலமாக,பலகோடி அண்டங்களை ,உருவாக்கி,
 அண்டங்களில் வாழ்வதர்க்காக பலகோடி ஆன்மாக்களையும்   . 
அனுப்பி வைக்கப்படுகிறது ,
அருட்பெரும் ஜோதியின் தனிப்பெரும் பதியாகிய ,அருட்சமூகம்,
உண்மையில் இப்படி இருக்க,
நாம் இது  வரையில் ,பார்த்தும் ,கேட்டும் பற்று வைத்துக் கெண்டு 
இருந்த வேதம்,ஆகமம் ,புராணம் ,இதிகாசம் ,முதலிய கலைகள் ,
எவ்வளவு கதைகளையும் ,கற்பனைகளையும் புனைந்து உரைத்து ,
இருக்கிறார்கள்,என்பதை அறிவு கொண்டு சிந்திப்போம் ,
வள்ளலார் திரு அருட்ப்பாவில் கீழே கண்ட பாடல் மூலம் தெளிவு 
படுத்தி உள்ளார் ,
வேதாகமங்கள் என்று வீண் வாதம் ஆடுகின்றீர் 
வேதா கமத்தின் விளைவு அறியீர்,----சூதாகச
சென்னதளால் உண்மை வெளி தோன்ற உரைக்கவில்லை 
என்ன பயனோ இவை ,
உண்மையை சொல்லாத வேதம் ,ஆகமம்,புராணம் ,இதிகாசம் ,
இவைகள,இருந்து என்ன பயன் ,இவைகளைஅழித்து விடுவதே ,
நல்லது என்கிறார் வள்ளலார் ,
இனிமேலாவது உண்மையை தெரிந்து கொண்டு வள்ளலார் 
காட்டிய வழியில் வாழ்வோம் ,
நன்றி ,---மீண்டும் பூக்கும் ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு