செவ்வாய், 29 ஜூன், 2010

தமிழ் மொழி;----பாகம்,2

         இவவுலகம் தோன்றியது எப்பொழுது .தமிழ் மொழி யாரால் எப்பொழுது தோற்று விக்கப்பட்டது,என்பது
 இதுவரையில் புரியாத புதிராகவே இருந்தது .    தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் மொழியில் சுமார் ஆறு ஆயிரம் அருட் பாடல்களைப்பாடி
 அருட் தமிழால் பதிவு செய்துள்ளவர் 
திருஅருட்பிரகாச வள்ளலார்

என்னும் ராமலிங்கம் என்பவராகும் .

அவருடைய பெருமையும் ,புகழையும் ,அவர் உலகுக்கு உரைத்த

உண்மைகளையும்,உலகுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே

இந்த வலைபூவை உருவாக்கி ,வள்ளலாரின்  உண்மைக் கருத்துகளைப்

பதிவு செய்து வருகிறோம் .என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் .

தமிழ் எப்பொழுது தோன்றியது ;--

தமிழ் தாய் மொழி அல்ல, தந்தை மொழி என்பது வள்ளலாரின்

கருத்துக்களாகும் .

விந்து ,நாதத்தால் தோற்றுவிக்கப்பட்டது தமிழ் ,

விந்து என்றால் ஒளி ,--நாதம் என்றால் சத்தம் ,

ஒளியும்,சத்தமும் சேர்ந்தது வரிவடிவாகும் ,வரிவடிவமும் ,ஒளிவடிவமும்

சேரும் போது ஓலிவடிவம் ,வரிவடிவம் பெறுகிறது ,

எப்படி என்பதை ,வள்ளலார் தெரியப்படுத்தியுள்ளார் .


  1. விந்து ;--------------------பெரிய வெளிச்சம் ,சூரிய வெளிச்சம் 
  2. நாதம் ;--------------------பெரிய நாதம் ;
  3. பரவிந்து ;----------------அதில் பாதி வெளிச்சம் ,சந்திர வெளிச்சம் 
  4. பரநாதம் ;----------------நாதம் ,
  5. அபரவிந்து ;------------வெளிச்சம் ,நஷ்த்தர ஓளி
  6. அபரநாதம் ;------------நாதம் ,
  7. திக்கிராந்தம்;---------அருகிய வெளிச்சம் ,மின்னல் ஓளி ,
  8. அதிக்கிராந்தம் ;-----சப்தம் ,
  9. வாமசக்தி ,
  10. ஜேஷ்ட சத்தி ,
  11. ரெளத்திரி சத்தி ,
  12. காளிசத்தி
அகரத்தைப் பற்றிய வினாக்கள் ,;--

புலவர்கள் பலர் ,அகங்காரத்தால் தம்மை மதியாது இயல் அறியாது 

எழுதிய வாறே ;---

புலமையிற் பெரியோர் என்னும் செருக்கின்றி ,அறிவறிந்து அடங்கியாரிர்

சிலர் ,எழுதியவற்றில் சில சில இடங்களில் வழுவினர் ,இவ்வழுக்கள் 

செருக்கால் வழுவியதன்று ;--விசாரத்தாலும் சிவானுபவ மேலீட்டாலும்

வழுவியது .

இவற்றைத் ---தேவார திருவாசக முதலிய உண்மை முறைகளில் 

.காண்கின்றோம்.

இக்காலத்து எமது ஆசிரியரை வணங்கி ;--[என்பது அருட்பெரும்ஜோதி]

ஐயரே /தேவரீர் எழுதிய சில வாசகத்தினும் ,செய்யுளிலும் கருத்துக்கு 

விளங்கப் புலப்படாமையால் மயங்குகின்ற சொற் சொடற்கள் சில 

உள்ளது ,எமது மாட்டாமையால் தோன்றுகிறது ;இதற்க்கு யாது 

செய்வோம் /என்று விண்ணப்பம் செய்ய அவர் ;---

[வள்ளலார் அருட்பெரும் ஜோதியிடம் விண்ணப்பம் செய்ய ]

;ஐய/ நீர் அஞ்சற்க ,யாம் எழுதிய வாசகத்தினும் செய்யுளினும்

அளவிறந்த குற்றங்கள் இருக்கின்றன ,என் செய்வோம் விசாரத்தால் 

ஆங்காங்கு தவறினோம் ,அதனைப் பெருங்கருனையுள்ள கடவுள் 

மன்னிப்பார் ,மற்றையோரும் மன்னித்தல் வேண்டும் ,யாம் யார் /

எமக்கு யாது தெரியும் /புழுவினும் கடைய புலையறிர்சிறியோம் ,

இதனால் நாணுதளுடையோம் என்றனர்,

ஐயர் புகன்ற மாற்றம் எவ்வாறு என்று எண்ணி நிற்கும் தருணத்து 

எம்மை ஆண்டு இருக்கப் பணித்து மீட்டுஞ் சொல்லுவர் ;--

மேலும் வள்ளலார் விளக்குகிறார்;--

தமிழைப்பற்றி ;-

  1. வரி வரலாற்றின் இலக்கணம் என்னை /
  2. ஓலி வரலாற்றின் இலக்கணம் என்னை /
  3. தன்மை வரலாற்றின் இலக்கணம் என்னை /
  4. உணர்ச்சி வரலாற்றின் இலக்கணம் என்னை/அதன் ,
  5. உண்மை அனுபவ இலக்கணம் என்னை /
  6. வரி உரு இலக்கணம் என்னை / 
  7. ஒரு யுறு இலக்கணம் என்னை /
  8. தன்மை யுருவி இலக்கணம் என்னை /
  9. உணர்ச்சி யுருவி இலக்கணம் என்னை /
  10. உண்மை யனுபவ வுருவி இலக்கணம் என்னை/  [அகர வுயிரின்]
  11. வரிச சொருப இலக்கணம் என்னை /
  12. ஒலிசசொறுபம் இலக்கணம் என்னை /
  13. தன்மை சொறுபம் என்னை /
  14. உணர்ச்சி சொறுபம் இலக்கணம் என்னை /
  15. உண்மை யனுபவ சொறுப இலக்கணம் என்னை /[அகர வுயிர்க்கு ]
  16. வரிச சுபாவ இலக்கணம் என்னை /
  17. ஓலி சுபாவ இலக்கணம் என்னை /
  18. தன்மை சுபாவ இலக்கணம் என்னை /
  19. உணர்ச்சி சுபாவ இலக்கணம் என்னை /
  20. உண்மை யனுபவ சுபாவ இலக்கணம் என்னை / [அகர வுயிரின்]
  21. வரிச செயற்கை இலக்கணம் என்னை /
  22. ஓலி செயற்கை இலக்கணம் என்னை /
  23. தன்மை செயற்கை இலக்கணம் என்னை /
  24. உணர்ச்சி செயற்கை இலக்கணம் என்னை /
  25. உண்மை செயற்கை இலக்கணம் என்னை /[அகர வுயிரின் ]
  26. வரி அதிகார இலக்கணம் என்னை /
  27. ஓலி யதிகார இலக்கணம் என்னை /
  28. தன்மை யதிகார இலக்கணம் என்னை /
  29. உணர்ச்சி யதிகார இலக்கணம் என்னை /
  30. உண்மை யதிகார இலக்கணம் என்னை /[அகர வுயிரின் ]
  31. வரிப் பொது இலக்கணம்என்னை /
  32. ஒலிப் பொது இலக்கணம் என்னை /
  33. தன்மைப் பொது இலக்கணம் என்னை /
  34. உணர்ச்சிப் பொது இலக்கணம் என்னை /
  35. உண்மைப் பொது இலக்கணம் என்னை /[அகர வுயிரின் ]
  36. வரிச சிறப்பிலக்கணம் என்னை /
  37. ஓலி சிறப்புபிலக்கணம் என்னை /
  38. தன்மை சிறப்பிலக்கணம் என்னை /
  39. உணர்ச்சிச சிறப்பிலக்கணம் என்னை /
  40. உண்மை சிறப்பிலக்கணம் என்னை /[அகரவுயிரின் ]
  41. வரிக் குண இலக்கணம் மென்னை /
  42. ஒலிக் குண இலக்கணம் மென்னை /
  43. தன்மைக் குணஇலக்கணம் மென்னை/
  44. உணர்ச்சிக் குண இலக்கணம் மென்னை /
    45 ,உண்மைக் குண இலக்கணம் மென்னை /

என்பன முதலாக இவ்வகர உயிர் ஒன்றிற்கே இன்னும் பற்பல 

இலக்கண நியாய விசார வினாக்கள் உளவாயின .

எம்போல்வார் உணர்ச்சிக்கண் அவ்வினாக்களுக்கு விடை 

எங்கனம் தோன்றும் ஓர் எழுத்திற்கே இங்கனமானால் ,பற்பல் 

எழுத்துக்களுக்கும்,அவ்வெழுத்துக களாலாகிய சொற்களுக்குஞ்,

சொற் பொருள்களுக்கும்,விடை கொடுப்பது எங்கனம் /

ஆதலால் கற்றோம் என்னும் செருக்கை முழுதும் விடுத்து விசார 

வசத்தராகி சிவபெருமான் [அருட்பெரும் ஜோதி] திருவருளை 

சிந்தித்து இருத்தல் வேண்டும் /

என்று எம்மை யோர் பொருளாகக கருதி இரக்கத்தால் இசைந்தனர் .

ஆகலின் கல்வியிற் செருக்கடைதல் எவ்வாற்றானும் பொருந்தாது ;   

                                        
அடுத்து வள்ளலார்;---

அகரத்தின் லஷ்ணம் பற்றிவிளக்கம் தருகிறார்;--

மூலாங்கக் பிரணவமாகிய அகர லஷ்னம் ஒருவாறு ;---


  1. ஊன்றல் ;----------------------------------------வாமை ,
  2. சுழித்தல் ;----------------------------------------ஜேஷ்டை,
  3. விசிரிம்பித்தல் ;-------------------------------ரெவ்த்ரி;
  4. மடித்து மேலேறல் ;--------------------------காளி,
  5. அங்கிருந்து கீழ்வரல் ;-----------------------கலவி கரணி,
  6. மேல் புடைபெயர்த்தல் ;--------------------பலவி கரணி ,
  7. கீழ்த்தாழல்;-------------------------------------பலப்பிரமதனி,
  8. கீழ் ஊன்றி நிற்றல் ;-------------------------சர்வ பூத  தமனி;
  9. வரிவடிவாதல் ;-------------------------------மனேன்மணி ,
இதில் விந்து நாதம் முதலிய நவ நிலைகளும் முள.நம் முன்னோர்கள் எழுதிய தமிழின்

இலக்கண,இலக்கியங்களில் ,சில .சில இடங்களில் குற்றம் நேர்ந்து இருக்கிறது

 என்கிறார்,நமது அருளாலார் வள்ளலார் அவர்கள்.சமயநூல்களிலும் ,பிழை

இருக்கிறது.சமய மத சாத்திரங்களில் அநேக இடத்தில் பிழைகள் இருக்கின்ற்ன.அதற்குக்

காரண்ம,அவற்றை இயற்றியவர்கள்,மாயையின் சம்பந்தத்தை

அடைந்திருந்தவர்கள்.ஆகையால் முன்னுக்குப் பின் மறைப்புண்டு தப்புகள்

நேரிட்டிருக்கின்றன்.மாயையை வென்ற சுத்த ஞானிகளுக்கல்லாது மற்றவர்களுக்குப்

பிழைய்ற இயற்றமுடியாது.அந்த பிழைகள் சுத்த சன்மார்க்கம் விளங்குகிற காலத்தில்

வெளிப்படும் என்கிறார் நமது அருள்லாளர் வள்ளார் அவர்கள்.அதேபோல புராண

இதிகாசங்களிலும்,நிறைய இடங்களில் பிழைக்காண்ப்படுகின்றன்.ஆதலால் தமிழ்

மனிதர்களால் ,தோன்றியமொழி அல்ல,இயற்கை உணமையான மெய்ப்பொருலாம்

அருட்பேரொளியால் தோற்றுவிக்கப்பட்ட தந்தை மொழி தமிழ்மொழியாகும்.

அருட் பெரும் ஜோதியைப் பற்றி வள்ளலார் '---

விதிப்பவர்கள் பலகோடி துதிப்பவர்கள் பல்கோடி

மேலவர்கள் ஒரு கோடி விரைந்து விரைந்து உனையே

மதிப்பவர்களாகி யவர் மதியாலே பல்கால்

மதித்து மதித்து அவர் மதிப்பெண் மதியாகி யலந்தே

துதிப்பதுவே நலமெனகக்கொண்டு இற்றைவரை ஏற்ற

சொற்பொருள்கள் காணாதே சுழ்லகின்றார் என்றால்

குதிப்பொழியா மன்சசிறிய குரஙகொடு உழல் கின்றேன்

குறித்துரைப்பது என்னவும் உளங் கூசுகின்றதரசே .

 இயற்க்கை உண்மையான்  அருட்பெரும்ஜோதி பேரொளி  இருக்கும்

 இடத்தை இதுவரையில் யாரும் காணவில்லை என்பது தெளிவாகிறது .

அதேபோல் தமிழ் மொழி தோன்றிய வரலாறு ,யாருக்கும் தெரியாமல்

இருந்தது .

வள்ளலார் தெளிவாக தமிழ் மொழி தோன்றிய வரலாற்றை தெளிவுப்

படுத்தியுள்ளார் .

தமிழ் மொழி ஆராய்ச்சி யாளர்களும் ,சிந்தனையாளர்களும் ,

பகுத்தறிவாளர்களும்,தமிழ் வல்லுனர்களும் ,முத்தமிழ் காவலர்

தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் கருணாநிதி அவர்களும் ,

வள்ளலார் எழுதிய திரு அருட்பாவை தமிழ் ஆராய்சிக்கு பயன் படுத்திக்

கொள்ளுங்கள் ,பயன் உள்ளதாக இருக்கும் .

உலகமே தமிழ் நாட்டுப் பக்கம் திரும்பிவிடும் .

வள்ளலார் எழுதிய திரு அருட்பா என்னும் அருள் நூல் இந்த உலகுக்கு கிடைத்த மாபெரும்

ஆராயச்சி அறிவு பெட்டகமாகும் .

தமிழ் வளர்க வாழ்க .

நன்றி ;---மீண்டும் பூக்கும்.                     

1 கருத்துகள்:

25 மார்ச், 2022 அன்று PM 12:46 க்கு, Blogger தாசெ கூறியது…

பதிவுக்கு நன்றி..
அன்புடையீர்!,
இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
#தமிங்கிலம்தவிர்
#தமிழெழுதிநிமிர்
#வாழ்க #தமிழ்
இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
÷÷ இஙூதைல

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு