திங்கள், 21 ஜூன், 2010

அருட் பெரும் ஜோதி;--பாகம் .8

          அன்பு ,அறிவு .ஒழுக்கம் ,இல்லாததால் கடவுள் உண்மை சிறிதும்  
விளங்காமல் ,புலன் உணர்வு ,புலன்அறிவு மட்டும் மேலோங்கி, மன அறிவு
மூலம் தேக போகத்தில் வாழ்ந்து, வீழ்ந்து மக்கள் அழிந்து கொண்டு இருக்கிறார்கள் ,
அகம் கருத்து புறம் வெளுத்து இருந்த உலக மக்கள் 
அனைவரையும் திருத்தி,சமரசசுத்த சன்மார்க்க சங்கத்தில் சேர்த்து உண்மையை 
உணர்த்தி,வாழ வைக்க வேண்டும் என்று ,அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ,
என்னை இவ்வுலகிற்கு அனுப்பி வைத்தார் என்று வள்ளலார் 
தெளிவுப்படுத்துகிறார் .
 வள்ளலார் பதிவு செய்துள்ளபாடல் கீழே ;--
அகத்தே கருத்துப் புறத்து வெளுத்திருந்த உலகர் அனைவரையும் 
சகத்தே திருத்திச சன்மார்க்க சங்கத்திடை அடைவித்திட அவரும் 
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கு என்றே எனை இந்த
யுகத்தே இறைவன்வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேன் .
அடுத்துஒருபாடல் ;--
பேருற்ற உலகில் உறும் சமய மத நெறிகள் எல்லாம் 
பேய்பிடிப்புர்ற பிச்சுப்
பிள்ளை விளையாட்டென்றுஉணர்ந்திடாது உயிர்கள்பல 
பேதமுர்றுஅங்கும் இங்கும் 
போருற்று இறந்து வீண் போயினர் இன்னும் வீண் 
போகாதபடி விரைந்தே 
புனிதமுறு சுத்த சன்மார்க்க நெறிகாட்டி மெய்ப் 
பொருலினை உணர்த்தி எல்லாம் 
ஏற்ருர்ற சுகநிலை யடைந்திடப் புரிதிநீ 
என்பிள்ளை யாதலாலே 
இவ்வேளை புரிக என்று இட்டனன் மனத்தில் வேறு 
என்னற்க வென்ற குருவே 
நீருற்ற வொள்ளிய நெருப்பே நெருப்பினுள்
நிறைந்து இருள் அகற்றும் ஒளியே 
நிர்க்குனாநந்த பரநாதாந்த வரை யோங்கும் 
நீதி நடராஜபதியே ,
என்று வள்ளலார் தான் இவ்வுலகிற்கு வந்ததின் நோக்கம் 
பற்றி தெளிவுப் படுத்துகிறார்.
கடவுள் என்றும்,பரமான்மா என்றும்,இன்று  நாம்காணுகின்ற 
கடவுள் அல்லஅருட்பெரும்ஜோதி ,
சமய ,மத வாதிகள் பலவாகக் கற்பனை செய்து ,கற்பனைக் 
கடவுள்களை உருவாக்கி படைத்து விட்டு சென்றுவிட்டார்கள் ,
அவர்களைப் பின்பற்றிவந்தவர்களும் ,நாம, ரூப,பேதத் தோற்றங்களில் 
மயங்கி அவற்றை அப்படி அப்படியே தங்கள்உள்ளங்களில் 
பதியச்செய்து கொண்டார்கள்.இதனால் ஒரே கடவுளான ,
அருட்பெரும்ஜோதியை ,தெரிந்துகொள்ளமுடியாமல் 
போயிற்று .
ஆதலால் பலவிதமான் கடவுள்களும் ,மகான்களும் தீர்க்கதரிசிகளும்,
போதகர்களும் நுழைந்து விட்டார்கள். அவர்களால்தோற்றுவிக்கப் 
பட்ட சாதி ,சமயம் ,மதம் ,புராணம் ,இதிகாசம், சாத்திரங்கள்
போன்ற குப்பைகள் உலகம் முழுவதும் படர்ந்து விட்டது .
குப்பைகளைஅகற்றி உலகை தூய்மைப்படுத்தவே வள்ளலார் 
இவ்வுலகிற்கு வந்துள்ளார்.
மேலும் ஒருபாடலில்தெளிவுப்படுத்தியுள்ளார் .
பன்மார்க்கம் எல்லாம் பசையற்று ஒழிந்தனவே
சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே;--சென்மார்க்கத் 
எல்லா உலகும் இசைந்தனவே எம்பெருமான் 
கொல்லா நெறியருளைக் கொண்டு .


இனிஎல்லா உலகமும் உண்மையை அறிந்துகொண்டு 
நளமுடன் வாழ்வார்கள் வாழ வைப்பேன் என்று 
உறுதியுடன் கூறியுள்ளார் .
இனி நாம் அனைவரும் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க
நெறியில் வாழ்ந்து வளம் பெறுவோம் .
நன்றி ;----மீண்டும் பூக்கும். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு