வெள்ளி, 25 ஜூன், 2010

தமிழ் மொழி ,பாகம்;---1

      தமிழ் மொழியின் வரலாறு என்ன / தமிழ் மொழி எப்பொழுது

தோன்றிற்று / யாரால்தோற்றுவிக்கப்பட்டது , /தோன்றியகாலம்

எப்பொழுது , /என்று கேட்டால் ,பலபேர் பலவிதமான ,கருத்துக்களை

சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் .கல தோன்றி, மண்தோன்றா,

காலத்தே முன தோன்றிய மூத்த தமிழ் என்றும் ,யாம் அறிந்த

மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் ,

என்றும் ,பெருமை பட சொல்லி இருக்கிறார்கள் .

தமிழ் ;---

தமிழ் மொழி யாருக்கும் சொந்தமான மொழியல்ல ,மதம் சார்ந்த

மொழியா /சமயம் சார்ந்த மொழியா / இனம் சார்ந்த மொழியா /

ஒருநாட்டிற்கு மட்டும் சொந்தமான மொழியா /தமிழ் நாட்டிற்கு

மட்டும் சொந்தமான மொழியா /தமிழ் பேசும் தமிழர் களுக்குமட்டும்

சொந்தமொழியா/திராவிடர் இனத்துக்கு மட்டும் சொந்த மொழியா /

இல்லவே இல்லை ,

தமிழ் வளர்க்கிறேன் என்று கூறும்தமிழ் அறிஞ்சர்களுக்கோ ,

சான்றோர்களுக்கோ,இலக்கியம் ,இலக்கணம்,வகுத்து தந்த ,

இலக்கியவாதிகளுக்கோ ,முத்தமிழ் காவலருக்கோ ,சொந்தமான

மான மொழியா ,

இல்லவே இல்லை;--

பின் யாருக்குசசொந்தம் தமிழ்,

உலக உயிர்கள் அனைத்திற்கும் சொந்தம் 

உலக நாடுகள் அத்தனைக்கும் சொந்தமானது தமிழ் மொழியாகும் .

வள்ளலார் தமிழுக்கு வைத்தப்பெயர் ,

தமிழ் மொழிக்கு உண்மையான் பெயர் மெய்மொழி ,

என்பதாகும் .இன்னும் சரியாக சொல்லவேண்டுமானால் ,

இயற்கை உண்மை மொழி ,காலபோக்கில் மெய்மொழி யானது ,

பின் தமிழ் மொழியாயிற்று,

தமிழ் எப்பொழுது தோன்றிற்று ;--

உலகம் தோன்றிய பிறகு உயிர்கள் தோன்றிற்று ,உயிர்கள் 

தோன்றிய பிறகு ,உயிர்கள் ஒன்றை ஒன்று,தெரிந்து கொள்வதற்கும் ,

அறிந்துகொள்வதற்கும் ,புரிந்து கொள்வதற்கும் ,ஒளியும் ,ஒலியும்,

தேவை என்பதை உணர்ந்த இயற்க்கை உண்மை என்னும்

அருட் பேரொளி

,வரி ,உரு ,ஒளி,ஒலி என்னும்,அகரம் ,உகரம் ,மகரம் என்னும்

சப்தத்தை இவ்வுலகிற்கு உருவாக்கி தந்தது ,

ஆதலால் தமிழ் மொழி உலகம் தோன்றிய காலத்தே ,

இயற்க்கை உண்மை என்னும் அருட்பெரும்ஜோதியால,

தோற்றுவிக்கப்பட்ட அருள் மொழி தமிழ் மொழியாகும் .

மற்ற உலக மொழிகள் யாவும்

மனிதன் தோன்றியபிறகு, மற்ற உலக மொழிகள் ,

 மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட மொழிகளாகும்

ஆதலால் தமிழ் மொழி முதன்மை மொழியாகும் .த்மிழ் மொழிக்குள்

எல்லா மொழிகளும் அடக்கம் ,மற்ற மொழிகளில் தமிழ் அடக்கம்

கொள்ளாது, .தமிழ் அருளால் உருவாக்கப்பட்டது ,மற்ற மொழிகள் யாவும் ,

மாயை யினால் உருவாக்கிய மனிதனால் உருவாக்கப்பட்ட

மொழிகளாகும் .

தமிழ் தாய் மொழியில்லை ,தந்தை மொழி என்று வள்ளலார்

கூறியுள்ளார்.

தந்தை என்பது அருட்பெரும்ஜோதி ,

தாய் என்பது மாயை ,

அருட்பெரும் ஜோதி என்னும் இயற்க்கையால் எழுதப்பட்டது,தமிழ் .

மாயை என்னும் மனிதனால் எழுதப்பட்டது,மற்ற மொழிகள்யாவும்.

இயற்கை என்னும் அருட்பெரும்ஜோதி என்றும் அழியாதது, அதுபோல் ,

தமிழ் என்றும் அழியாது .

மாயையால,உருவாக்கப்பட்ட மனிதனுக்கு மரணம் உண்டு அதுபோல் ,

மனிதனால் உருவாக்கப்பட்ட அனைத்தும் ஒரு காலத்தில்

அழிந்துவிடும் அதுபோலவே மற்ற மொழிகளும் ஒருகாலத்தில்

அழிந்துவிடும் .

ஆனால் தமிழ் மொழி என்றும் அழியாது ,.யாராலும் அழிக்கமுடியாது.

இன்னும் பல நூறு ஆண்டுகளில் தம்ழ மொழி உலகம் அனைத்தும் ,

பறந்து விரிந்து ஆட்சி செய்யும் ஆட்சி மொழியாகப்போகிறது.

இதில் எந்தசந்தேகமும் இல்லை .

எதோ நான் தமிழ் மொழி மேல் பற்று உள்ளதால் இதைசசொல்கிறேன் ,

என்று நினைத்து விடாதீர்கள் . இது வள்ளலார் உரைத்த உண்மையாகும் .

தமிழ் எல்லா உலகத்திற்கும் சொந்தமானது ,உலகில் உள்ள அனைத்து

உயிகளுக்கும் சொந்தமானது .ஆதலால் அனைத்துலக மக்களும்

ஆர்வமும், ஆவலும் ,ஆசையும் கொண்டு விரும்பி ஏற்றுக்கொள்வார்கள்

தமிழ் மொழிக்கு அருள் என்னும் ஆற்றல் உள்ளது ,அருளை அனைவரும்

விரும்புவார்கள் .

அருள் ;---
அருள் என்ன என்பது யாருக்கும் தெரியாது .அருளை அனுபவித்தால் 

மட்டும் தான் தெரியும்.அருள் என்பது ஆன்மாவில் சுரக்கும் ஒருசுரப்பியாகும் .

அருளை அனுபவித்த ஞானிகள்.நம் தமிழ் நாட்டில் நிறைய பேர்,

வாழ்ந்து இருக்கிறார்கள் .,தொல்காப்பியர் ,இளங்கோஅடிகள் ,மற்றும் ,

திருவள்ளுவர் ,திருமூலர்,மாணிக்கவாசகர் ,சம்பந்தர் ,திருநாவுக்கரசர் ,

சுந்தரர் ,போன்ற நாயன் மார்கள் ,சேக்கிழார் .மற்றும் அவ்வையார்,

பாரதியார் ,பாரதிதாசன் ,போன்ற சிந்தனையாளர்களும்,தமிழைப்

புசித்து பல அருந்தமிழ் காவியங்களை படைத்துள்ளார்கள் சமய ,

மதத்திற்கு அப்பார்ப்பட்டவர்கள் ,

வள்ளலார் ;--

அதற்குப் பிறகு பதினெட்டாம் நூறறாம்ஆண்டில் இறைவனால் 

வருவிக்கப்பட்டவர் வள்ளலார் .

வள்ளலார் தமிழின் அருளையும் ,அருட்பெரும்ஜோதியின் அருளையும் ,

முழுமையாக அனுபவித்தவர் .பலஉயிர் ஓம்பவாழ்ந்தவர்,உலகத்திற்கு

உண்மையை உணர்த்த வந்த உத்தமர் ,மரணத்தை வென்ற மகான் ,

பிறப்பு, இறப்பு அற்றவர் ,

கொல்லாநெறியே குவலயம் ஓங்குக ,

எல்லா உயிர்களும் இன்புற்று வாழக் .

என்று எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்தியவர் .

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடியவர் வள்ளலார் .

அருள் மொழி தமிழ் ;---

வள்ளலார் தமிழைப்பற்றி தெளிவுப்படுத்துகிறார்.


அருளை அனுபவித்தவர்கள் மட்டும் தான் மெய்ப்பொருளை 

காணமுடியும் மெய் மொழியை தெரிந்துகொள்ளமுடியும்.என்கிறார் .

தமிழ் மொழியில் மட்டும்தான் உயிர் ,மெய் ,ஆயுத எழுத்துக்கள் அடங்கி

உள்ளது .

அதாவது ;--

உயிர் ,உடம்பு ,ஆன்மா ஆகிய மூன்றையும் பற்றி தெரிந்து கொள்ள

தமிழ் இறைவனால் படைக்கப்பட்டது .

தமிழ் என்ற மூன்று எழுத்துக்குள் ,எல்லா எழுத்துக்களும் அடங்கி

இருக்கிறது .தமிழ் என்ற எழுத்தின் விரிவுதான் மற்றைய

எழுத்துக்கள்யாவும் .

உலக உயிர்களை ;--படைத்தல் ,காத்தல்,பக்குவம் வருவித்தல் ,

மறைத்தல் ,தெளிவுசெயதல்,என்பன போன்ற தொழில்களை ,

செயல்படுத்திக் கொண்டு இருக்கும் அருட்பெரும்ஜோதியை ,

தெரிந்துகொள்ள தமிழால் ,தமிழ்மொழியால் மட்டும்தான் தான்

முடியும் என்கிறார் வள்ளலார் .

தமிழில் ;---தன்மை ---முன்னிலை ----படர்க்கை .

என்பவை யாவை /அவற்றின் கருத்து என்ன ,என்று கேட்பவர்களுக்கு ,

தன்மை ;---தன்னைப்பற்றி தெரிந்துகொள்வது .

முன்னிலை ;---தன் கண்களுக்கு தெரிந்தவற்றை தெரிந்து கொள்வது ,

படர்க்கை ;---தன் கண்களுக்கு தெரியாமல் இயங்கிக் கொண்டு

                       இருக்கும் அனைத்தையும் தெரிந்து கொள்வது

 [இதை விரிக்கில் பெருகும் பின்பார்ப்போம் .]

தமிழை வள்ளலார் ;--இயற்க்கை உண்மை ,இயற்க்கை விளக்கம் ,
  
                                       இயற்க்கை இன்பம் ,

என்றும் அழியாமல் விளங்கி உலக உயிர்களுக்கு இன்பம்

தரும் மொழிதான் தமிழ் மொழி என்கிறார் வள்ளலார் .

தமிழ் என்னும் அருள் மொழியால்தான் இவ்வுலகம் இயங்கிக்

கொண்டு இருக்கிறது .அணு ககூட்டங்கள்,நீக்கமற நிறைந்து ,

ஒலியும், ஒளியும வழங்கி தமிழுக்குஎன்றும் அழியாத ஆற்றல்

கொடுத்துக் கொண்டு இருக்கிறது .

தமிழ் நிலை ;--

தமிழ் ஐந்தலகு நிலையும்,உபய நிலையும் ,மூன்றுமெய் நிலையும் ,


அமைந்துள்ளதும் ,சம்பு பசசத்தாரால் அனாதியாய் கடவுள் அருள் 


ஆணையால் கற்பபிக்கபட்டதும் ,---எப்பாஷைகளுக்கும் பிதுர் 

பாஷை என்று ஆன்றோர்களால் கொண்டாடப் பட்டதும் ;--

இனிமை என்று நிறுத்தம் சித்திக்கப் பெற்றுள்ளதுமான்,தமிழ் என்னும்

இயற்க்கை உண்மைச சிறப்பு இயல் மொழியாகும் .என்று தமிழ்

மொழிக்கு விளக்கம் தந்துள்ளார் வள்ளலார் .

தமிழ் என்னும் சிறப்பு இயல்பு என்ன என்றால் பதினெண் மெய்களில் ,

பஷ்சமுடிபின் எண் குறிப்பில் நின்று சிவலோக பூமியாகிய ;----

பரத கண்டத்தில் பவுராணிக் தத்த்துவத்தால் குறிக்கப்பட்ட ஐம்பத்தாறு

தேசங்களுள் சுதேசம் தவிர மற்ற ஐம்பத்தைந்து தேச பாஷை களிலும் ,

இல்லாததாயும்,பதி எண் இலக்கமாக குறிக்கப் பட்ட ,

செந்தமிழ்,கொடுந்தமிழ் என்னும் இருமைக்கும் ஒற்றுமை

உரிமையும் .முத்துரைத் தமிழுக்குள் முதன்மைத் துறையானதும் ,

இருக்கு ,யஜிர்,சாம ,என்னும் சமஸ்கிருத வேதத்தில் பொருள்

அனுபவத்தை எளிதில் கற்று உணர்ந்து தெளிந்து அனுபவிக்க

இறைவன் திரு அருளையும் முத்தொழில் காரியமான கடவுளையும்

வேண்ட வேண்டியுள்ளது ,அப்படி வேண்டி உழைப்பெடுத்து

ஓதினாலும் பாடம் ஆவதற்கு அருமையாயும்,பாடமானாலும்

பாஷியம்செய்ய, டீக்கா,டூக்கா டிப்பனி,முதலிய உறைகோல்,கருவிகளை

பொருள் கொள்ளத் தேட வேண்டி உள்ளது,அவைகள் தேடிக் கைவரினும் ,

அக்கருவிகளால் போதிக்கவேண்டியதற்க்கு பாஷியக்காரர்கள்,

வியாக்கியான கர்த்தர்கள் ,டீக்கா வல்லுனர்கள் ,டூக்கா வல்லபர்கள் ,

மற்றும் ஸூசர்கள்,முதலிய போதக ,உப போதக ஆசிரியர்கள் கிடைப்பது

அருமையிலும் அருமையாயும் ,இருக்கிற ஆரியம் ,ம்காராட்டியம் ,

ஆந்திரம் என்ற பற்பல பாஷைகளைப் போலாகாமல்----

பெரும்பாலும் கற்பதற்கு ---எண்ணளவு---சுருக்கமாயும் --ஒளியில்

லேசாயும் ----கூ ட்டு என்னும் சந்தி அதி சுலபமாயும் --எழுதவும்

கவிசெய்யவும் மிக நேர்மையாயும் ---அஷ்ர ஆராவாரம் இன்றி

எப்பாஷையின் சந்தசுகங்களையும்,தன் பாஷைக்குள்அடக்கி

ஆளுகையால் ஆண்மைத் தன்மைப்பொருந்தியதுமான

தற்பாஷைக்கேஅமைவுற்ற ,

ழ் --ற்--ன்----என்னும் முடி --நடு --அடி சிறப்பிய லக்கரங்களில் முடிநிலை

இன்ப அனுபவ சுத்த மோனாதீதத்தைச சுட்டரச்சுட்டும் ,இயற்க்கை

உண்மைத் தலைமைப் பெருமைச் சிறப்பு இயல் ஒலியாம்.

மருள்இயற்க்கை மல இருளைப் பரிபாக சக்தியால் அருள் ஒளியாக்கி

அதற்க்கு உள்ளீடான சிதாத்ம சிற்கலாசத்தி என்னும் சுத்த ஆன்மாவை

தகர --ககன--நடன அருட்பெரும்ஜோதி என்னும் 

சுத்த சிவானந்த பூரணத்தை சுத்த மோனாதீத இயலால்

அனுபவிக்கும் இயற்க்கை உண்மையே தமிழ் என்னும் 

சொற்பொருளாகும்.

தமிழ் பாஷையே அதிசுலபமாகச் சுத்த சிவாநுபூதியைக்

கொடுக்கும் என்பதாகும் .

சிவம் என்பது ஒளியாகும்.[அருட் பேரொளி ]

இவ்வாறு தமிழின் பெருமையை வள்ளலார் திரு அருட்பாவில்

பதிவு செய்துள்ளார் .

மேலும் வள்ளலார் அவர்கள் ;----

[தென் மொழி தமிழ் ]

இடம்பத்தையும் ,பிரயாசத்தையும் ,பெரு மறைப்பையும்,

போதுபோக்கையும் உண்டு பண்ணுகின்ற ஆரிய முதலிய

பாஷைகளில் எனக்கு ஆசை செல்ல வொட்டாது பயிலுதற்கும்

அறிதற்கும் மிகவும் இலேசு உடையதாய் ,சாகாக்கல்வியை

இலேசில் அறிவிப்பதாய்த் திருவருள் வலத்தால் கிடைத்த

தேன்மொழி ஒன்றினிடத்தே மனம் பற்றச செய்து

அத்தென்மொழிகளால் பல வகைத் தோத்திரப் பாட்டுகளை

பாடுவித்து அருளினீர் .

என்று தமிழ் மொழியின் உண்மைத் தன்மையை தெளிவுப்

படுத்துகின்றார் வள்ளலார் .

மேலும் தமிழின் பெருமையை நிறைய எடுத்து உரைத்துள்ளார்

நமது தமிழக அரசு தமிழ்மொழிக்காக ,தமிழ் வளர்ச்சிக்காக,

தமிழ் மொழியின் பெருமைக்காக ,தமிழ் மொழியின் சிறப்புக்காக்

தொடர்ந்து செயல் பட்டுக் கொண்டு வருகிறது

குறிப்பாக சொல்ல வேண்டுமானால் கலைஞர் ,கருணாநிதி

அவர்கள் அதிக சிரத்தை எடுத்து  செயலாற்றிக்கொண்டு

வருகிறார்.

சென்னைப்பட்டினம் என்பதை மாற்றி ,தமிழ்நாடு ,தமிழ் மாநிலம் ,

தமிழகஅரசு என்பன போன்ற பல மாற்றங்கள் செய்துள்ளது .

இந்திய அளவில் மத்திய அரசுமூலமாக சட்டப்படி தமிழ் மொழிக்கு

செம்மொழிஅங்கிகாரம் பெற்றுள்ளது பெருமைப் படவேண்டியதாகும் .

கோவையில் செம்மொழி மாநாடு;---

உலகம் முழுவதும் உள்ளத்தமிழர்கள் மற்றும் உலகில் உள்ள

அனைத்து தரப்பு மக்களும்

தமிழ் மொழியின் பெருமையை ,உயர்வை ,

வளமையை, தோற்றத்தை ,ருசியை ,சுவையைப்பருக, சுவைக்க

கோவை மாநகரில் செம்மொழி மாநாடு நடை பெறுவதுக்குறித்து

பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன் .
        
செம்மொழி மாநாடு சீரும் சிறப்புமாக நடை பெற என் மனமார்ந்த

வாழ்த்தையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் .

குறிப்பாக தமிழக முதல்வர் ;---

மாண்புமிகு முதல்வர் கலைஞ்ர் அவர்களுக்கு நன்றியும் ,

வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துககொள்வதோடு

அருட்பெரும்ஜோதியர்  அவருக்கு நீண்டஆயுள் தந்து தமிழ்நாட்டு

மக்களுக்கும்,தமிழ் நாட்டிற்கும் தொண்டு ஆற்றவேண்டும்.என்று

எல்லாம் வல்ல அருட்பெரும்ஜோதியை வேண்டி விரும்பி

கேட்டுக்கொள்கிறேன்

வாழக தமிழ்
வளர்க உலக உயிர்கள்

நன்றி ;--மீண்டும் .பூக்கும்
    



,  ..        

.

1 கருத்துகள்:

25 மார்ச், 2022 அன்று PM 12:13 க்கு, Blogger தாசெ கூறியது…

பதிவுக்கு நன்றி..
அன்புடையீர்!,
இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
#தமிங்கிலம்தவிர்
#தமிழெழுதிநிமிர்
#வாழ்க #தமிழ்
இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
÷÷ ஞஙண

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு