செவ்வாய், 22 ஜூன், 2010

அருட் பெரும் ஜோதி;--பாகம் ,10


      அருட்பெரும்ஜோதி என்னும் அருள் அணு இல்லாத 

இடமே இல்லை ,ஆனால் நாம் நமது கண்ணாலும் 

மனோகருவி கரணங்களாலும்,எங்கும் காண்பது என்ன /

பரமான்மாவா ,கடவுளா/ அப்படிக் காண்கின்ற எதுவும் 

கடவுள் அல்ல என்பது சிறுகுழந்தைகளுக்கும் தெரியும் .

இபபிரபஞ்சத்தில் காணப்படும் எல்லாப் பொருட்களும்,

எல்லாஉயிர்களும் நித்தியமானவை அல்ல என்பதும் ,

தோன்றி சிறிதுகாலம் இருந்து மறைகின்றவையே 

என்றும் எவரும் அறிவர் .

ஆனால் நம் அருட்பெரும்ஜோதியார் நித்தியமானவர்,

அந்த நித்தியமானவர் யாவற்றிலும் அகம் மறைந்து நின்று 

அநித்தியமான வடிவங்களை ஆக்கிக்கொள்வதும் நீக்கிக் 

கொள்வதுமாய் இருக்கிறார் .மண் முதலான் ஐம்பூத

அணுக்களில் இருந்து கொண்டு அது அதுவாகித் தனித்திருந்தும் ,

ஒன்றுபட்டும் எல்லா பிரபஞ்ச வடிவங்களிலும் தன்னுள் 

வைத்துக்கொள்ளுகின்றன,ஆகவே காணும் பொருட்களிலும் 

அவற்றிற்கு ஆதாரமாய் இருக்கின்றது நமது கண்காணாப் 

அருட்பெரும்ஜோதியாகிய கடவுளாகும் .

எல்லாம் வல்ல அருட்பெரும்ஜோதி சமூகத்தில் நிறைந்து

விளங்கிக்கொண்டு இருப்பது ஆன்மாஎன்னும் சிறிய அணுக 

கூட்டங்களாகும் .அதற்க்கு ஆன்மா என்று பெயர் 

பொதுவாகக கடவுளைப் பற்றி பலர் பலவாகக் கற்பனை 

செய்து கொண்டு உண்மையை உள்ளவாறு காணாது ,

உளறி இருக்கிறார்கள், 


நன்றி ;--மீண்டும் பூக்கும். 

         

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு