செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

கடவுளைக் கண்டேன் !

 **கடவுளைக் கண்டேன்!*


பாகம் 5.


*வள்ளலார் பாடல்!*


ஐயநான் பயத்தால் துயரினால் அடைந்த அடைவை உள் நினைத்திடுந் தோறும்


வெய்ய தீ மூட்டிவிடுதல் ஒப்பது நான் மிகஇவற் றால்இளைத் திட்டேன்


வையமேல் இனிநான் இவைகளால் இளைக்க வசமிலேன் *இவைஎலாம் தவிர்த்தே*


*உய்ய வைப் பாயேல்*

*இருக்கின்றேன் இலையேல் உயிர்விடு கின்றனன் இன்றே.!*


*என்னும் வள்ளலார் பாடலில் உள்ளபடி மனம் அலைபாய்ந்து கொண்டே இருந்த்து*


*சென்னை மாநகரில் தெருத்தெருவாக அலைந்து பால்கோவா விற்று எந்த பயனோ லாபமோ கிடைக்காததால்,சென்னை தி நகரில் உள்ள பாண்டிபஜார்  போஸ்ட்ஆபீஸ் அருகில் உள்ள ஒரு பிரபலமான டைலர் கடையில் ஒரு அடையாளம் தெரியாத நபர் மூலமாக வேலைக்குச் சேர்ந்தேன்*


*அக்கடையின் உரிமையாளர் பெயர் ஓ. கே ராவ்,சிறந்த தையற்கலை தொழில் நிபுணர்.*


*அங்கு எனக்கு எடுபிடிவேலை,மற்றும் கடையை கூட்டி பெருக்கி சுத்தம் செய்வது. காஜாபட்டன் கட்டுவது, பெண்கள் ஆடைகளுக்கு  எம்மிங் ஊக்கு கட்டுவது போன்ற வேலை செய்வது, டைலர்களுக்கு வேண்டிய நூல் மற்றும் தையலுக்கு வேண்டிய பொருட்களை வாங்கித் தருவது. தைத்த துணிகளை வாடிக்கையாளர் வீடுகளுக்கு சென்று டோர் டெலவரி செய்வது.டீ காப்பி வாங்கிதருவது போன்ற எல்லா வேலைகளையும் சுறுசுறுப்பாக செய்து கடையின் உரிமையாளர் மனதில் நிலையான  ஆழமான நம்பிக்கையான முறையில் இடம் பிடித்துக் கொண்டேன்*

*அதுவே எனக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.*


*சினிமா நடிகர் நடிகைகள்!*


*ஆண்கள் பெண்களுக்குத் தகுந்த மாதிரி, அவரவர் விரும்புகிற மாடலில் ஆடைகள் வடிவமைத்தில் கடையின் உரிமையாளர் வல்லவர், பரத நாட்டிய டிரஸ் மிக நேர்த்தியாக தைத்துக் கொடுப்பதில் வல்லுனர்.*


*எங்கள் கடையில் அக்காலத்தின் முன்னனி சினிமா நடிகர் நடிகைகள் நிறைந்த வாடிக்கையாளர்கள் வந்து செல்வார்கள் அதுவே எனக்கு தையல் தொழில் மேல் விருப்பம் உண்டாக ஆசையைத் தூண்டியது.*


*டி ஆர் ராஜகுமாரி, லலிதா, பத்மினி,சாவித்திரி,சந்தியா,கே ஆர் விஜயா, சவுகார்ஜானகி, வைஜெயந்திமாலா, விஜயகுமாரி, அஞ்சலிதேவி,தேவிகா,போன்ற முன்னனி நடிகைகளின வீட்டிற்கு சென்று துணி டெலவரி கொடுத்துவிட்டு பணம் வாங்கிவரும் பொருப்புள்ள  வேலையை என்னிடம்தான் கொடுப்பார்.* 


*நடிகைகள் ஆடையை  அணிந்து அதில் உள்ள நிறைவு குறைவுகளை என்னிடம் சொல்லி அவற்றை சரிசெய்து கொண்டுவரச் சொல்வார்கள்.கடைக்கு கொண்டுவந்து அவர்கள் விருப்பம் போல் ஆல்டர் செய்து கொடுத்து எங்கள் முதலாலியிடமும் வாடிக்கையாளர்கள் மற்றும் நடிகைகள் இடமும் நல்ல பெயர் வாங்கிவிடுவேன்.* 


*மூன்றே மாதத்தில் தையல் தொழிலில் ஆர்வம் கொண்டு. ஆண்கள் பெண்களுக்கு அளவு எடுப்பதிலும்,அவர்கள் விருப்பம்போல் கட்டிங் செய்வதிலும்,அவர்கள் விரும்பியவாறு புதிய கோணத்தில் தைப்பதிலும் மிகவும் கவனத்துடன் பயிற்சி எடுத்து கொண்டேன்,* 


உண்மையான நேர்மையான  தொழில்!


*கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்ற வாக்கியத்திற்கு தகுந்தாற்போல்விரும்பி தையத்தொழில் செய்ய ஆரம்பித்தேன்*செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கு இணங்க தையல் தொழிலே தெய்வமாக நினைந்து வாழ்க்கையில் கடைபிடித்தேன்*  


*கடையின் முதலாளி,மற்றும் கடையில் வேலை செய்யும் டைலர்கள் அனைவரும் பாராட்டும்படியாகவும் ஆச்சரியப்படும் படியாகவும் சுரு சுருப்பாகவும்,நேர்த்தியாகவும் தையற் கலைகள் மற்றும் வேலைகள் யாவும் என் தனிப்பட்ட அறிவுக் கூர்மையைக் கொண்டு பழகிக் கொண்டேன்*.


*கலைகளிலே சிறந்த கலை தையல்கலை என்பதை உணர்ந்தேன்* 


*ஆண்கள் பெண்களின்  மனித உடல் அமைப்பிற்கு  தகுந்தவாறு தையல் கலையின்  பயிற்சியின் அளவு சம்பந்தமான கணக்குகளை வைத்து சரியான கட்டிங் பிட்டிங் கொடுக்கும் சூத்திரத்தை, என் முதலாளியிடம் தெரிந்தும் தெரியாமலும்.சுய அறிவோடும் கற்றுக்  கொண்டேன்.*


*பெண்கள் உடைகள் வடிவம்  (மாடல் கட்டிங் பிட்டிங் கொடுப்பதில்) அமைப்பதில் தனித்திறமை பெற்றுக் கொண்டேன்.*


நடிகை சந்தியா மகள் ஜெயலலிதா வீட்டிற்கு சென்றது.


*ஒருமுறை ஜெயலலிதா அவர்களுக்கு பரதநாட்டிய டிரஸ் கொடுக்க அவர் வீட்டிற்கு சென்று இருந்தேன்.ஜெயலலிதா அவர்கள் மாடியில் பரதநாட்டியம் பயிற்சி எடுத்துக்கொண்டு இருந்தார். சந்தியா அம்மாஅவர்கள் சோபாவில் அமரச்சொல்லி அம்மு வரட்டும் கொஞ்சம் நேரம் இருங்கள் என்று காப்பியும் பிஸ்கட்டும் கொடுத்தார்.*


*ஜெயலலிதா கீழே வந்து பரத நாட்டிய டிரஸ் அணிந்து பார்த்து சூப்பராக இருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் முதலாளியிடம் சொல்லச் சொன்னார். எங்க முதலாளி பரதநாட்டிய டிரஸ் தைப்பதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்.*


*பத்மினி, லலிதா, ராகினி, வைஜெயந்திமாலா,டிஆர் ராஜகுமாரி,சாவித்திரி,கேஆர் விஜயா போன்ற பெரிய முன்னனி நடிகைகளுக்கு எல்லாம் எங்கள் கடையில்தான் பரதநாட்டிய டிரஸ் மற்றும் பிளவுஸ்,மாடல்டிரஸ் சரியான அளவில் தைத்துக் கொடுக்கப்படும் என்பது அனைவரும் அறிந்ததே.*


( *என்னுடைய சுறுசுறுப்பையும் திறமையும்,தோற்றத்தையும்,பேச்சையும்  கண்காணித்து சினிமாவில் நடிப்பதற்கு என்னை அழைத்தார்கள்,எனக்கு விருப்பம் இல்லாமல் மறுத்துவிட்டேன்*)


மூன்று மாதத்தில் ஈரோடு சென்று விட்டேன்.!


*தையல் தொழிலில் தேர்ச்சி பெற்றதும் இந்த தொழிலை வைத்து முன்னேறி விடலாம் என்ற நம்பிக்கை எனக்குத் தோன்றியது.* *மனைவி குழந்தை ஞாபகம் வந்துவிட்டது*

*அந்தநேரம்  பொங்கல் காலம்,போகிப்பொங்கல்,பெரும்பொங்கல்,மாட்டுப்பொங்கல்.கழிந்து கரிநாள்  அதாவது காணும்பொங்கல் அன்று எங்கள் முதலாளியிடம் ஊருக்கு போய்வருகிறேன் என்று சொல்லிவிட்டு இரவு கிளம்பி ஈரோடு சென்றுவிட்டேன்* 


*காலை 5-30 மணிக்கு ஈரோட்டில் உள்ள என்மாமனார் வீட்டிற்குள் திடீர் என்று உள்ளே சென்றேன். மகனை அனைத்துக்கொண்டு மனைவி தனிமையில் படுத்திருந்தார்கள்.*


தொடரும்...


*வள்ளலார் பாடல்!*


ஆடஎடுத் தான் என்றறை கின்றீர் என்தலைமேல்

சூடஎடுத் தான்என்று சொல்கின்றேன் 


நாடறிய

இவ்வழக்கை யார்பால் இசைத்தறுத்துக் கொள்கிற்பாம்

கவ்வைஅற்ற அம்பலத்தான் கால்! 


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எதற்காக என்னை சுத்த சன்மார்க்கத்தி்ல் கொண்டு வந்து சேர்த்தார் என்பது இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்பது மட்டும் உண்மை*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் ஈரோடு கதிர்வேல்*

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு