ஞாயிறு, 8 மே, 2022

தமிழக அரசுக்கு வேண்டுகோள்!

 *தமிழக அரசுக்கு வேண்டுகோள்!*


*மாண்புமிகு உயர்திரு தமிழக முதல்வர் அவர்கள் சமூகத்திற்கு வந்தனம்*


*தி மு க தேர்தல் அறிக்கையில் சொல்லியவாறு  வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்கப் போவதாக அறிவித்தமைக்கு சன்மார்க்க சங்கங்களின் வாயிலாக நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.* 


*வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்க போவதாக சொல்லிய காரணத்தினால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையினால் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளீர்கள். அளவில்லாத மகிழ்ச்சியுடன் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.*


*சாதி சமயம் மதங்கள் அற்ற புதிய சமுதாயத்தை படைக்க வேண்டும் என்பதே வள்ளலாரின் அடிப்படை கொள்கையாகும்*

*உலக வரலாற்றில் கற்பனைக் கதைகளைச் சொல்லாமல் உண்மையை மட்டும் மக்களுக்கு போதித்து.மரணத்தை வென்ற மாபெரும் அருளாளர் திருஅருட்பிரகாச வள்ளலார்.* 


*1.இந்திரிய ஒழுக்கம்.*

*2.கரண ஒழுக்கம்.*

*3.ஜீவ ஒழுக்கம்.*

*4.ஆன்ம ஒழுக்கம் என்ற நான்கு வகையான  தனிமனித ஒழுக்கம் என்ன என்ன என்பதை போதித்த ஜீவகாருண்ய திலகம் வள்ளலார்.*


*உலகத்திற்கே நல்வழிக்காட்டவும் நேர் வழிகாட்டவும் இயற்கை உண்மையால் (இறை அருளால்) தமிழ் நாட்டில் வருவிக்க உற்ற  அருட்கொடையே திருஅருட்பிரகாசவள்ளலார்* 


*கற்பனைக் கடவுளை அகற்றி உண்மைக் கடவுளை உலகிற்கு காட்டியவர் வள்ளலார்*


*வள்ளலார் சென்னையில் சுமார் 35 ஆண்டுகாலம் வாழ்ந்துள்ளார்.*

*தருமம் மிகு சென்னை என்று பெயர் சூட்டியவர் வள்ளலார்* 


*உலகத்திற்கே நல்வழி காட்டும் உயர்ந்த அருளாளர்கள் தோன்றிய நாடு தமிழ்நாடு*


*வள்ளலார் கோட்டம் !*


*திருவள்ளுவர் பெயரில் சென்னையில் வள்ளுவர் கோட்டம்  அமைத்ததுபோல்* 


*வள்ளலார் பெயரில் சென்னையில்  வள்ளலார் கோட்டம் அமைத்தால் உலக அறிஞர்கள் அனைவரும் வந்து தங்கவும். வள்ளலார் வகுத்து தந்த சுத்த சன்மார்க்க கொள்கையை தெரிந்து கொள்ளவும் பின்பற்றவும் உலகம் முழுவதும் கொண்டு செல்லவும் மிகவும் சிறப்பு வாய்ந்த இடம் சென்னையாகும்*.


*தமிழகத்தின் தலைமை இடமாக சென்னை உள்ளதால் உலக விஞ்ஞானம் அறிவியல் சார்ந்த அறிவாளிகளும்.ஆன்மீக அருளாளர்களும் வருகை புரிந்து தங்கி வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கையை தெரிந்து கொள்ளவும். அக் கொள்கைகளை அறிவியல் விஞ்ஞானம் சார்ந்த ஆராய்ச்சி செய்து உலக மக்களிடம் கொண்டு செல்ல வாய்ப்பாகவும் வசதியாகவும் இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.*


*ஆதலால் வள்ளலார பெயரில் வள்ளலார் கோட்டம் அமைக்கவும் அதிலே வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்கவும் சென்னையை சிறந்த இடமாக தேர்வு செய்யுமாறு திருஅருட்பா ஆராய்ச்சி மையத்தின் சார்பாக "ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையோடு" தங்களின் மேலான பார்வைக்கு அன்புடன் வேண்டுகோள் விண்ணப்பம்  செய்து கொள்கிறோம்*


*நாட்டு மக்களுக்கு நன்மையே செய்து வரும் நீங்கள் ஒரு நல்ல முடிவை எடுத்து நலம் பெற செய்வீர்கள் என நம்புகிறோம்* 


அன்புடன் *ஆன்மநேயன்* *முனைவர் ஈரோடு*

*கதிர்வேல்*

*திருஅருட்பா ஆராய்ச்சி மையம்*

*9865939896.*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு