ஜீவகாருண்யம் என்றால் என்ன ?
*ஜீவகாருண்யம் என்றால் என்ன ?*
நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும்
*ஜீவன் என்றால் உயிர். காருண்யம் என்றால் உயிர் இரக்கம் என்றும் தயவு என்றும் பொருள்படும்*.
*ஒன்று அன்னிய உயிர்களுக்கு இம்சை உண்டாகாது (தீங்கு) நடத்தலே ஜீவகாருண்யம் என்பதாகும்.* *மற்றொன்று*
*உயிர்கள் படும் துன்பத்தை கண்ட போதும் துன்பப்படும் என்பதை அறிந்தபோதும் அத்துன்பத்தை போக்குவதே ஜீவகாருண்யம் என்பதாகும்.*
*ஜீவகாருண்யமும் சித்தியும்!* என்னும் தலைப்பில் வள்ளலார் பதிவு செய்துள்ளது!
*ஆன்மாக்கள் ஆன்மலாபம் அடைய வேண்டும்*. *ஆன்மலாபம் அடைவதற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தொடர்பும் அவருடைய அருளும் வேண்டும்.*
அதற்கு வள்ளலார் பதில் சொல்கிறார்!
*நம்முடைய தலைவராகிய கடவுளை நாம் அடைவதற்கு அவர் எழுந்தருளி இருக்கும் கோட்டையின் சாவியாகிய அருள் வேண்டும் அவ்வருள் அன்பினால் அல்லது வேறு வகையால் அடைவது அரிது* *அவ்வன்பு ஜீவகாருண்யத்தால் அல்லது வேறுவகையால் அடைவது அரிது அந்த ஜீவகாருண்யம் உண்டாவதற்கு ஏது துவாரம் யாதெனில்*?
*கடவுள் உடைய பெருமையையும் தரத்தையும் நம்முடைய சிறுமையையும் தரத்தையும் ஊன்றி விசாரித்தலே சத்விசாரமாகும்* *மேலும் அன்னிய உயிர்களுக்கு இம்சை உண்டாகாமல் நடத்தலே ஜீவகாருண்யம் என்பதாகும்*
*ஜீவர்களுக்கு உண்டாகும் பசி. பிணி. தாகம். இச்சை. எளிமை. பயம். கொலை போன்ற துன்பங்களினால் வருந்துகின்ற போது பொருள் உள்ளவர்கள் அத்துன்பத்தைப் போக்குவதே ஜீவகாருண்யம் என்பதாகும்*.. *இதுதான் முத்தி அடைவதற்கும் சித்தி அடைவதற்கும் முதற்படியாக இருக்கின்றது ஆதலால் இதைப் பாதுகாத்து கொள்ள வேண்டும் ஜீவகாருண்யம் தவிர வேறு படிகளும் உள்ளன என்கிறார் வள்ளலார்*
கீழே கண்ட வாக்கியத்தை பலமுறை சிந்தித்து ஊன்றி கவனிக்க வேண்டும்
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய அருளைப் பெறுவதற்கு ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்கிறார்.
*அடுத்து நம்முடைய தலைவராகிய கடவுளை நாமடைவதற்கு அவர் எழுந்தருளி இருக்கும் கோட்டையின் சாவியாகிய அருள் வேண்டும் என்கிறார்*
*இங்கே சாவி என்கின்ற அருள் பெற்றால் தான் ஆண்டவர் எழுந்தருளி இருக்கும் கோட்டையின் கதவு திறக்கும் என்கிறார்.அப்படி என்றால் இங்கே அருள் என்னும் சாவி வழங்குபவர் யார் ? அங்கே அருள் வழங்குபவர் யார்? என்ற கேள்வி எழுகின்றது.*
*அதற்கும் வள்ளலார் தெளிவான விளக்கத்தை தருகிறார்!*
*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒவ்வொரு ஆன்மாவிலும் உள் ஒளியாக புறக் கண்களுக்குத் தெரியாமல் இயங்கி கொண்டுள்ளார்*
*மேற்படி கண்களுக்குத் தெரியாமல் ஒரு அகக்கண் உள்ளது ( நெற்றிக்கண் என்பார்கள்) அக் கண்ணைத் திறப்பதற்கு ஒருகதவும் பூட்டும் உள்ளது மேற்படி பூட்டை அருள் என்கின்ற திறவுகோலைக் கொண்டுதான் திறக்கவேண்டு என்கின்றார்.*
*ஆதலால் மேற்படி அருள் என்பது ஆன்ம இயற்கையால் அடையும் பெருந்தயவாகும். நாம் தயா வடிவமானால் மேற்படி அனுபவம் நேரும் அந்த அக அனுபவ உணர்வே அருள் என்னும் சாவியாகும் என்கிறார்*
*அதாவது நினைந்து நினைந்து. உணர்ந்து உணர்ந்து. நெகிழ்ந்து நெகிழ்ந்து.
அன்பே
நிறைந்து
நிறைந்து.
ஊற்றெழும் கண்ணீர் அதனால். உடம்பு
நனைந்து நனைந்து. அருள்அமுதே
நன் நிதியே ஞான நடத்தரசே என் உரிமை ஞாயகனே என்பதே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மீது வைத்துள்ள தீராத அன்பு (காதல்) அனுபவ உணர்வாகும்*
மேலும் வள்ளலார் சொல்கிறார் !
*மேலும் வள்ளலார் சொல்லியுள்ள உண்மைப் பொதுநெறியான ஜீவகாருண்ய ஒழுக்கம் யாதெனில் இந்திரிய கரண ஜீவ ஆன்ம ஒழுக்கங்களாகும்* அவை யாதெனில் ?
*கருணையும் சிவமே பொருள் எனக் காணும் காட்சியும் பெறுக* *என்றதுதான் என்னை ஏறா நிலைமிசை யேற்றி விட்டது யாதெனில்* ? *தயவு. தயவு என்னும் கருணைதான் என்னைத் தூக்கிவிட்டது.*
*அந்த தயவுக்கு ஒருமை வரவேண்டும். அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும். தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம்*
*இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கும் அப்பாலும் கடந்திருக்கிறது அது அந்த "ஒருமையினாலே தான் வந்தது" நீங்களும் என்னைப்போல் ஒருமையுடன் இருங்கள் பெறவேண்டியதை பெற்றுக் கொள்ளலாம் என்கிறார்*
*மேலும் நான் இங்கே இருக்கின்ற ஜனங்கள் மட்டில் மாத்திரம் அல்ல உலகத்தில் இருக்கின்ற எல்லா ஜனங்களையும் குறித்தே ஆண்டவரிடத்தில் விண்ணபித்துக் கொண்டேன் ஏன் அப்படி ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன் என்றால்? எல்லவரும் சகோதரர்கள் ஆதலாலும் இயற்கை உண்மை ஏக தேசங்கள் ஆதலாலும் நான் அங்கனம் "ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை வைத்துக் கொண்டு இருக்கிறேன்" என்பதை தெளிவாக விளக்கி உள்ளார்.*
*இதுவே இந்திரிய கரண ஜீவ ஆன்ம ஒழுக்கத்தின் முடிந்த முடிபாகும்*
வள்ளலார் பாடல்!
எத்துணையும் பேதமுறாது *எவ்வுயிரும்*
*தம்உயிர்போல் எண்ணி* உள்ளே
ஒத்து உரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர் அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் *எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன்* அந்த
வித்தகர் தம் அடிக்கேவல் புரிந்திட என்
சிந்தைமிக விழைந்த தாலோ.!
எல்லா உயிர்களும் ஆன்மநேய சகோதர உரிமை உடையது என்று என்னும் உண்மையை உணர்ந்தவர் எவரோ அவருடைய ஆன்மாவில்.
மற்றும் உள்ளத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் வழங்கி அருள் நடம் புரிகின்றார் என்பதை அறிந்தவர் எவரோ அவரே எல்லாம் தெரிந்த *வித்தகர்* என்பவராகும் அவரையே அருட்பெருஞ்ஜோதி யாக வணங்கி வழிபடுவேன் என்பதை பாடல் வாயிலாக தெரியப் படுத்துகின்றார்.
சன்மார்க்கத்தில் உள்ள ஆன்ம நேய சகோதரர்கள் ஒவ்வொருவரும் எந்நிலையில் உள்ளோம் என்பதை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
*ஒவ்வொரு சன்மார்க்க சங்கங்களும் சன்மார்க்க அன்பர்களும் பசியைப் போக்குகிறீர்கள் மகிழ்ச்சியான செயல்தான் (பசிஎன்பது இறைவனால் கொடுக்கப்பட்ட ஓர் உபகாரக்கருவியாகும் பசி இல்லாமல் எந்த உயிரும் இவ்வுலகில் வாழமுடியாது என்பதும் உண்மைதான் எல்லா உயிர்களுக்கும் இறைவன் எவ்வகையிலாவது பசியைப் போக்குவதும் உண்மைதான் ) பசி என்பதும் ஒருவகையான பிணியாகும் அதனால்தான் அதற்கு பசிப்பிணி என்று வள்ளலார் பெயர் வைத்துள்ளார். பசிப்பிணியைப் போக்குவதுதான் அடிப்படையான முதன்மையான ஜீவகாருண்யம் ஆகும்.*
*பசியைப் போக்கும் அன்பர்கள் அவரவர்கள் உழைப்பால் வரும் பொருளைக் கொண்டு பசியைப் போக்குகிறீர்களா ? மற்றவர்களிடம் உபயமாக வாங்கி ய பொருளைக் கொண்டு பசியைப் போக்குகிறீர்களா ? அல்லது சுயநல வியாபார நோக்கத்தோடு பசிப்பிணியை போக்குகிறீர்களா ? என்பதையும் சிந்திக்க வேண்டும்.*
*பொருள் கொடுப்பவர்களுக்கும் பொருள் பெருபவர்களுக்கும். உணவு உண்பவர்களால் எவ்வளவு (சதவீதம்) பங்கு ஆன்மலாபம் கிடைக்கும் என்பதையும் சிந்திக்க வேண்டும்*
*இயற்கையிலே உண்மையாக பசிப் பிணியைப் போக்குகின்றவர்களுக்கு பசி எடுக்கபடாது. உணவு உட்கொள்ள விருப்பம் இருக்கபடாது. என்பதுதான் உண்மையான ஜீவ காருண்யம்*
*சோற்றிலே விருப்பம் சூழ்ந்திடில் ஒருவன் துன்னும் நல் தவம் எல்லாம் ஆற்றிலே கரைத்த புளி எனப்போகும் என்கிறார்*
மேலும் *சோற்றாசையோடு காமச் சேற்றாசை படுவோரை துணிந்து கொல்ல கூற்று ஆசைப்படும் என்கிறார்*
பசிப்பிணி வராமல் பாதுகாப்பதே ஜீவகாருண்யமாகும்
உடற்பிணி யனைத்தையு முயிர்ப்பிணி யனைத்தையு
மடர்ப்பறத் தவிர்த்த வருட்சிவ மருந்தே !( அகவல
உடற் பிணியும் உயிர் பிணியும் அருள் என்னும் மருந்தால்தான் போக்கமுடியும்.
*தன்னுடைய பசிப்பிணியை போக்கி உயிரையும் உடம்பையும் அருளைக் கொண்டு அழியாமல் காப்பாற்றுவதே ஜீவகாருண்யம் என்பதாகும்*
*எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி! (அகவல்)
*பிறப்பதையும் இறப்பதையும் தடுக்கவல்லதே ஜீவ காருண்யமாகும்*
*அன்னதானம் வழங்குபவர்களுக்கும் மரணம் வருகிறது உண்பவர்களுக்கும் மரணம் வருகிறது இது என்ன சன்மார்க்கம் என மக்கள் கிண்டல் செய்யும் அளவிற்கு உள்ளன என்பதையும் சிந்தித்து சன்மார்க்கிகள் செயல்பட வேண்டும் என்பதே வேண்டுகோளாகும்*
*மேலே வள்ளலார் சொல்லியுள்ள ஜீவகாருண்யம் என்றால் என்ன? என்ன? என்பதையும் ஜீகாருண்ய ஒழுக்கம் என்றால் என்ன? என்ன? என்பதையும் தெளிவாக சொல்லியுள்ளார் அவற்றை முழுமையாக பின்பற்றி வாழ்ந்தால்தான் மோட்ச வீட்டின் திறவுகோல் என்கின்ற அருள் கிடைக்கும்.*
*மோட்ச வீடு என்பதும் திறவுகோல் என்பதும் வெளியில் எங்கும் இல்லை எல்லாம் நம் உடம்பிற்குள்ளே உள்ளன என்பதை தெரிந்து அறிந்து புரிந்து கொண்டு வள்ளலார் சொல்லியவாறு ஜீவகாருண்ய ஒழுக்கத்தை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்.*
*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்வதற்கும் அருளைப் பெறுவதற்கும் இரண்டே வழிதான் உள்ளன*
*ஒன்று இயற்கையான ஜீவகாருண்யம். ஒன்று உண்மையான சத்விசாரம் என்பதாகும்*
*இந்த இரண்டு வழியைத்தவிர வேறு சாதி. சமயம். மதங்கள். சித்தர்கள். யோகிகள்.மற்றும் ஆன்மீக போதகர்கள் காட்டிய குறுக்கி வழிகளில் சென்றால் சிறு ஒளி உண்டாகும் அதனால் பல் இலித்து இருமாந்து கெட நேரிடும். ஆதலால் நமக்கு கிடைக்க வேண்டிய பெரிய ஆன்ம லாபம் கிடைக்காமல் போய்விடும் என்பதை சன்மார்க்கிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.*
மேலும் வள்ளலார் சொல்கிறார்!
*அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு எல்லாம் ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்பதை மிகவும் அறிவுறுத்துகிறார்*
*ஜீவகாருண்ய ஒழுக்கம் இல்லாமல் செய்யப்படுகின்ற ஞானம். யோகம். தவம். விரதம். ஜெபம். தியானம் முதலிய வைகளைச் செய்கின்றவர்கள் கடவுளுக்குச் சிறிதும் பாத்திரமாகார்கள். அவர்களை ஆன்ம விளக்கம் உள்ளவர்களாகவும் நினைக்கப்படாது என்றும். ஜீவகாருண்யம் இல்லாது செய்யப்படுகின்ற செய்கைகள் எல்லாம் பிரயோசனம் இல்லாத மாயாஜாலச் செய்கைகளே யாகும் என்றும் அறியவேண்டும் என்கிறார்.*
*நாம் அடைய வேண்டியது முடிவான ஆன்ம லாபமாகிய மரணம் இல்லாப் பெருவாழ்வாகும்.*
*சாகும் கல்வியை அகற்றி சாகாக்கல்வியை கற்றுக் கொடுக்க வந்தவர்தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்பதை நினைவில் வைத்துகொண்டு சாகாக் கல்வியைக் கற்க வேண்டும்*
*சாகாதவனே சன்மார்க்கி என்பது வள்ளலாரின் அருள் வாக்காகும்*
*வள்ளலார் பாடல்!*
*கற்றேன்சிற் றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணைநெறி*
*உற்றேன் எக் காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்*
*பெற்றேன் உயர்நிலை பெற்றேன் *உலகில் பிறநிலையைப்*
*பற்றேன்** *சிவானந்தப் பற்றேஎன் பற்றெனப் பற்றினனே.!*
*என்னும் பாடல் மிகவும் அனுபவம் வாய்ந்த வள்ளலார் பெற்ற அறிவியல் சார்ந்த அணு வேதியல் மாற்றம் கண்ட உண்மையான அருள் ஒளிதேகம் என்பதை சந்தேகம் உள்ளவர்கள் திருஅருட்பாவை நன்கு படித்து தெளிவு பெற வேண்டும்*
*தன்னையே யெனக்குத் தந்தரு ளொளியால்*
*என்னை வே தித்த என்றனி யன்பே!* (அகவல்)
*ஆன்மாவை மறைத்துக்கொண்டுள்ள அறியாமை அஞ்ஞானம் என்னும் மாயாதிறைகளை நீக்குவதே சாகாக்கல்வி பயிற்சியாகும்*
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு