ஞாயிறு, 2 ஜனவரி, 2022

பொய் பேசுகிறவர்கள் !

 *பொய் பேசுகிறவர்கள் !*


*கடவுள் இல்லை என்பவனும் பொய் பேசுகிறான் கடவுள் உண்டு என்பவனும் பொய் பேசுகிறான்.*


*ஆத்தீக பொய்யர்களுக்கு  வள்ளலார்பாடல்!*


*தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும்*

சேர்கதி பலபல செப்புகின் றாரும்


*பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும்*

*பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்*


மெய்வந்த திருவருள் விளக்கம் ஒன் றில்லார்

மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்


எய்வந்த துன்பொழித்து  *அவர்க்கு அறிவு அருள்வீர்*

எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந்தீரே.! 


*மேலே கண்ட பாடலில் கடவுள் பல உண்டு என்று வெளியில் தேடுபவர்கள் அறிவு விளக்கம் விளங்காத  பொய்யர்கள்.அவர்களுக்கு அறிவைக் கொடுக்க வேண்டும் என்கிறார்.*

*மேலும் மேல்விளைவு என்னவென்று அறியாமல் வீணாக வாழ்க்கையை அழித்துக் கொண்டு உள்ளார்கள் என்கிறார் வள்ளலார்.*


*கடவுள் இல்லை என்ற  பொய்யர்களுக்கு வள்ளலார் பாடல்!*


நாத்திகம் சொல்கின்றவர் தம் நாக்குமுடை நாக்கு

நாக்குருசி கொள்ளுவதும் *நாறிய*

*பிண்ணாக்கு*! என்கிறார்.


*மேலே கண்ட பாடலில் கடவுள் இல்லை என்பவர்கள் நாக்கு ருசி கொள்வது நாறிய பிண்ணாக்கு உண்பதற்கு சமம் என்கிறார்* நாறிய பிண்ணாக்கு என்பது துர்நாற்றம் உள்ள *மலம்* என்பதாகும்.

மலம் திண்பதற்கு சமம் என்கின்ற வகையில் கடவுள் இல்லை என்பவர்களையும் சாடுகிறார் 


*கடவுள் இல்லை என்பவனும் பொய் பேசுகிறான் கடவுள் உண்டு என்பவனும் பொய் பேசுகிறான்.*


*தன்னை இயக்கிக் கொண்டு உள்ளவர் கடவுள் என்பது தெரியாமல்  இல்லை என்று சொல்கிறான் நாத்திகவாதி.*


*தன்னுள் இருக்கும் கடவுளைத் தெரிந்து கொள்ளாமல் கடவுளை வெளியில் தேடுபவன் அறிவு விளக்கம் பெறாத ஆத்தீகவாதி என்பவனாகும்*


*இருதரப்பினரும் பொய்யர்களே என்பதை வெளிப்படையாக சாடுகிறார் வள்ளலார்* 


*உயர்ந்த அறிவுள்ள மனிதர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது*

 *நம் சிரநடு சிற்சபையில் ஆன்ம ஒளியாக இயங்கிகொண்டு இருக்கும் உள் ஒளியே கடவுளின் இயற்கை உண்மை விளக்கம் என்பதை அறிந்து  சிற்சபை நடத்தை தெரிந்து துதித்திடுங்கள் சித்தி எல்லாம் இத்தினமே சத்தியம் பெற்றிடலாம் என்கிறார்*.


*வள்ளலார் பாடல்!*


குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின் இங்கே வம்மின்

கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்


வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது

மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்


பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில்

புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்


*செறித்திடுசிற் சபைநடத்தைத்* *தெரிந்துதுதித் திடுமின்*

*சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.!*


மேலே கண்ட பாடலில் உண்மையான கடவுள் யார்? என்று தெரியாமல் பேய் பிடித்த மனம் போல் தேடித்தேடி புறத்தில் அலைகின்றீர்கள் மேலும் *கடவுளைப் பற்றி பேசுகின்ற மதம் சமயம் எல்லாம் பொய் பொய்யே அவற்றில் புகுதாதீர்* என்கிறார். 


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு