வெள்ளி, 31 டிசம்பர், 2021

செயற்கை இன்பம் இயற்கை இன்பம் !

 *செயற்கைஇன்பம்!*

 *இயற்கைஇன்பம்!* 


*செயற்கை இன்பம் இயற்கை இன்பம் என இரு வகைப்படும்!*


*செயற்கை  இன்பம் என்பது? இந்திரிய இன்பம்.கரண இன்பம்.ஜீவ இன்பம் ஆன்ம இன்பம் என பலவகைப்படும் இது எதுவும் நிரந்தரம் அல்ல. இயற்கை இன்பம் என்பது? அருள் இன்பம் ஒன்றுமட்டுமே என்றும் அழியாதது நிரந்தரமானது*..


 *அதேபோல் செயற்கையான ஆசைகள் மண்ணாசை பெண்ணாசை.பொன்னாசை என பலவகையான ஆசைகள் உண்டு . இயற்கையான ஆசை ஒன்றே ஒன்றுதான்* *அது என்றும் அழியாத அருள் ஆசை என்பதாகும்.*


 *மேலும் செயற்கையான லாபம் இம்மை இன்பலாபம்.மறுமை இன்பலாபம் என இரண்டு வகையாக உள்ளன.இயற்கை இன்பலாபம் ஒன்றுமட்டுமே உண்டு *அது என்றும் அழியாத பேரின்ப சித்தி பெருவாழ்வு என்னும் லாபமாகும்* 


*ஆன்ம இன்ப லாபம்!*


*உலகத்தில் மனிதப்பிறப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்மலாபத்தைக் காலமுள்ள போதே அறிந்து அடையவேண்டும் என்பார் வள்ளலார்*


*நம் உடம்பில்  இந்திரிய இன்பம்.  கரண இன்பம். ஜீவ இன்பம். ஆன்ம இன்பம் என நான்கு வகை இன்பங்கள் உண்டு.* *இவற்றில் ஆன்ம இன்ப லாபத்தை காலம் உள்ள போதே பெற்றுக்கொண்டால் அடுத்து அருள் இன்பத்தைப் பெற்று மரணத்தை வெல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்கிறார் வள்ளலார்.*

ஆன்ம இன்ப லாபத்தில் மூன்றுவகையான இன்பலாபம் அடங்கி உள்ளன.


*அவை இம்மைஇன்ப லாபம். மறுமை இன்ப லாபம். பேரின்ப லாபம் என்பதாகும் இதில் பேரின்ப லாபமே இயற்கை இன்ப லாபமாகும்*


*வள்ளலார் பாடல் !*


இடம்பெறும் இந் திரியஇன்பம் கரணஇன்பம் உலக

இன்பம் உயிர் இன்பம்முதல் எய்தும்இன்ப மாகித்


தடம்பெறும் ஓர் *ஆன்மஇன்பம்* தனித்த அறி வின்பம்

சத்தியப்பேரின்பம் முத்தி இன்பமுமாய் அதன்மேல்


நடம்பெறு *மெய்ப் பொருள்இன்பம்* நிரதிசய இன்பம்

*ஞானசித்திப் பெரும்போக நாட்டரசின் பமுமாய்த்*


திடம்பெற ஓங்கிய *இயற்கைத் தனி இன்ப மயமாம்*

திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.! 


*இன்பங்களை எந்த எந்த வழிமுறைகளில் அனுபவிக்கிறோம் எவ்வாறு கிடைக்கிறது அவற்றை எதன் மூலம் அனுபவிக்கிறோம் என்பதை மேலே உள்ள பாடலில் தெளிவாக விளக்கமாக சொல்லி உள்ளார்.* அவற்றில் இறுதியாக நாம் பெற்று அனுபவிக்க வேண்டிய இன்பம் *திடம் பெற ஓங்கும் *இயற்கை தனிஇன்பமாகும்* 

அந்த இன்பத்தை வழங்கும் கடவுள்  திருச்சிற்றம்பலம் தனிலே விளங்கும் தெய்வம் ஒன்றே கண்டீர்  என்று சொல்லுகின்றார். 


நாம் பெற வேண்டிய இறுதியான இயற்கை  இன்பம் *பேரின்ப சித்தி பெருவாழ்வு என்பதாகும்.*

அதற்கு என்ன அர்த்தம் உண்மை என்றால் *கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும்.*

கடவுளுடன் கலந்தால் மட்டுமே மீண்டும் பிறப்பு இறப்பு இல்லை என்பதாகும். அதுவே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்


*எந்த கடவுளுடன் கலப்பது ?*


இங்கே நாம் முக்கியமாய். தெரிந்து கொள்ள வேண்டியது *இயற்கை உண்மை கடவுள் யார்? என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்*


வள்ளலார் ஆரம்ப காலத்தில் உலகியல் வழக்கப்படி பல தத்துவ கடவுள்களை வணங்கியும் வழிபட்டும். அக்கடவுள்கள் மீது ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடியும் பதிவு செய்துள்ளார். 


*உண்மையான கடவுள் யார்? என்பதை அறிந்தபின்பு  தான் வழிபட்டு வணங்கிய  கடவுள்கள் யாவும்  தத்துவங்கள் என அறிந்துகொண்டார். அந்த கடவுள்களின் பெயரில்  பாடிய பாடல்கள் அனைத்தும் தத்துவ  பாடல்களேத் தவிர உண்மையான இறைவன் மேல் பாடிய பாடல்கள் அல்ல என்பதை தெளிவாக பேருபதேசத்தில்  விளக்கி உள்ளார்*.


மேலும் சொல்லுகிறார் சைவ சமயத்தெய்வங்களை பாடியகாலத்தில் எனக்கு அப்போது *அற்ப அறிவாக* இருந்தது என வெளிப்படையாக சொல்லுகின்றார்.


*அருள் வழங்கும் தெய்வம் ஒன்றே ஒன்றுதான் அதைக் கண்டேன் களித்தேன் கலந்துகொண்டேன்  அதன் பெயர் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி! என்னும் இயற்கை உண்மை கடவுளாகும் என்பதை உலக மக்களுக்கு தெரியப்படுத்துகின்றார்*


வள்ளலார் பாடல்!


எய்வகைசார் மதங்களிலே பொய்வகைச்சாத் திரங்கள்

எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமதுதெய்வம் என்று


கைவகையே கதறுகின்றீர் *தெய்வம்ஒன்றென் றறியீர்*

கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர்


ஐவகைய பூதவுடம் பழிந்திடில்என் புரிவீர்

அழியுடம்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர்


உய்வகைஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்

உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே.! 


*தெய்வம் ஒன்று உண்டு அது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பது தெரியாமல் மதங்களும் சயங்களும் பொய்வகையான சாத்திரங்களும் எமது தெய்வம் எமது தெய்வம் என்று குருடன் யாணையைத் தொட்டுபார்த்து சொல்வதுபோல் சொல்கின்றீர்* *மரணம் வரும்போது எந்த கடவுளும் காப்பாற்றாது எனத்தெரிந்தும் அதே தவறை செய்துகொண்டே உள்ளீர்கள்.* 


*இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகின்ற தருணம் தொடர்புகொண்டு அருளைப்பெற்று மரணத்தை வெல்லுவதற்கு வாருங்கள் என அன்புடன் அழைக்கின்றார் வள்ளலார்* 


*எனவே நாம் பேரின்ப சித்தி பெருவாழ்வு என்னும் இயற்கை இன்பத்தை பெற்று வாழ்வாங்கு வாழ்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய இயற்கை உண்மை கடவுள் ஒருவரே! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை அறிவால் அறிந்து அருளைப் பெறுவதற்கு இரண்டு வழிகள்தான் உள்ளன* 


*ஒன்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் படைக்கப்பட்ட உயிர்களுக்கு துன்பம் செய்யாமலும் அவ் உயிர்களுக்கு வரும் துன்பங்களைப் போக்கும் ஜீவகாருண்யம் ஒன்றே முதல் வழியாகும்.*


*வேறுஒன்று நம்மை படைத்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தெரிந்து தொடர்பு கொள்வதற்கு சத்விசாரம் செய்ய வேண்டும். அதாவது அக்கடவுள் மீது இடைவிடாது அன்புநிறைந்த தொடர்பும். பிரார்த்தனையும் தோத்திரமும் செய்து கொண்டே இருக்க வேண்டும்*


மேலே கண்ட இரண்டு வழிகளிலும் இடைவிடாது பயணம் செய்தால் பெறவேண்டியதை பெற்றுக் கொள்ளலாம்.


*தெளிவோம் தெளிவடைவோம்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு