திங்கள், 5 ஜூலை, 2021

ஜீவ காருண்யத்தின் எல்லை !

 *ஜீவ காருண்யத்தின் எல்லை!*

ஒருநாள் சில அன்பர்கள் *ஜீவ காருண்யத்தைக் குறித்து* நெடுநேரம் வாசாஞானமாய்ப்

(முடிவு தெரியாமல்) பேசிக்கொண்டே இருந்தார்கள்.

அவற்றை அறிந்த வள்ளலார் *ஜீவகாருண்யம் எவ்வளவு தூரம்* பரந்துள்ளது என்பதை அறிவீர்களா ? என்று கேள்விகேட்டு அதற்கு விளக்கம் சொன்னார்.

தெருவில் பெரியோர் இருவர் செல்லும்போது. ஒருவர் கால்பட்டு *ஒரு மண்கட்டி உடைந்துவிட்டது*

*அதைக்கண்ட மற்றொருவர் மூர்ச்சையாயினர்* மற்றொரு பெரியவர் மூர்ச்சையானவரைக் காரணம் கேட்க.

*தமது கால்பட்டு மண்கட்டியின் இயற்கை நிலையாகிய நேர்த்தி குலைந்துவிட்டது*  *அதனால் மூர்ச்சியாகிவிட்டேன் என்றனர்*.

அவ்வாறு *ஜீவ காருண்யத்தின்  எல்லையை* *அவர்களுக்கு வள்ளலார் விளக்கினார்.*

*உணவு வழங்குவது மட்டுமே ஜீவகாருண்யம் ஆகாது* 

எல்லா உயிர்களுக்கும் பசி பொதுவானது.அது  இறைவனால் கொடுக்கப்பட்ட

*உபகாரக்கருவி* என்பதாகும்.

*பசி முதலிடம் வகிக்கிறது. *பசியைப் போக்குவது அடிப்படை செயலாகும்*

*பசி.பிணி.தாகம்.இச்சை.எளிமை.பயம்.கொலை என ஏழுவகையான துன்பம் ஒவ்வொரு ஜீவனுக்கும் வருகிறது* இவையாவையும் *அவரவர் தரத்திற்கு தகுந்தவாறு போக்குவதே ஜீவகாருண்யம்*.

அருள் பெருவதற்கு உணவு வழங்குவது  மட்டும் போதாது. எல்லா உயிர்கள் மீதும் *இரக்கமும்* ( பரோபகாராமும்) இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மீது *அன்பும்* *(சத்விசாரம்)* அதாவது இடைவிடாது தொடர்பும் கொள்ள வேண்டும். 

நமது ஆன்மநேய அன்பர்கள் உணவு வழங்கினால் மட்டும் போதுமானது என நினைந்து உணவு வழங்கி வருகிறார்கள். மேலும் *கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் !*

என்பதை உணர்ந்து நமது உயிர்மூச்சாக ஒரே கடவுள் கொள்கையைப் பின்பற்றி வழிபடவேண்டும்.

*(வேறு ஜட தத்துவ கடவுள்களை வழிபட்டால் அருள் கிடைக்க வாய்ப்பே கிடையாது* என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்)

*வள்ளலார் பாடல்!*

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி தன்னையே நினைமின்கள் சுகம் பெற விழைவீர்.

*இது நீவீர்  மேலேறும் வீதி மற்றை வீதிகள் கீழ் செல்லும் வீதி* ! 

*வள்ளலார் பாடல்!* 

மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும்

கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும் நான் சகித்திடமாட்டேன்

எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்

*நண்ணும் அவ் வருத்தம் தவிர்க்கும் நல் வரந்தான் நல்குதல் எனக்கிச்சை எந்தாய்*.! 

இறைவனால் படைக்கப்பட்ட எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவிக்க வேண்டும். எல்லா உயிர்களையும் உடம்பையும் இயக்கும்

நமது சகோதர ஆன்மாக்கள் என்பதை  அறிவாலே அறிந்து ஆன்மநேய *ஒருமைப்பாட்டு உரிமையுடன் வாழ்வதே ஜீவகாருண்ய ஒழுக்கமாகும்.*

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு