திங்கள், 13 ஏப்ரல், 2020

தமிழ் வருடபிறப்பு நல்வாழ்த்துக்கள்.!

14-04-2020.தமிழ் வருடபிறப்பு நல்வாழ்த்துக்கள்.!

இயற்கை உண்மை கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் செயல்கள் !

1.தோற்றுவித்தல்

2.வாழ்வித்தல்.

3.குற்றம் நீக்குவித்தல்.

4.பக்குவம் வருவித்தல்.

5.விளக்கம் செய்வித்தல் .

மேலே கண்ட ஐந்தொழில்கள் உலகம் முழுவதும் இடைவிடாது நடந்து கொண்டே இருக்கும்.

இந்த ஐந்தொழில்களுக்கும் ஐந்து கர்த்தாக்கள் இருந்தார்கள்.

வள்ளலார் அருள் பெற்று மரணத்தை வென்று.சுத்த பிரணவ ஞானதேகம் பெற்று கடவுள் நிலை அறிந்து அம்மயமானதால்.

ஐந்தொழில் கரத்தாக்களிடம் இருந்த ஐந்தொழில்களையும் வள்ளலார் ஒருவரிடமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கொடுத்துவிட்டார்.

 இப்பொழுது ஐந்தொழில்களையும் வள்ளலார்  ஒருவரே திறம்பட செயலாற்றிக் கொண்டு உள்ளார்.

இது கலை உரைத்த கற்பனை கதைகள் அல்ல.உண்மை சம்பவம் . 31-01-1874 ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகின்றது.

வள்ளலார் பாடல் !

ஐந்தொழி லாதிசெய் யைவரா திகளை
ஐந்தொழி லாதி செய் அருட்பெருஞ் ஜோதி! ...அகவல்

மேலும்.

ஐந்தொழில் நான் செயப்பணித்தாய் அருளமுதம் உணவளித்தாய்

வெந்தொழில் தீர்ந் தோங்கிய நின் மெய்யடியார் சபைநடுவே

எந்தைஉனைப் பாடிமகிழ்ந் தின்புறவே வைத்தருளிச்

செந்தமிழின் வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.!

என்பன போன்ற ஆதாரமான பாடல்கள் திருஅருட்பா வில் நிறைய உள்ளன.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் செந்தமிழில் வளர்வதாகவும்.எல்லா ஆன்மாக்கள் இயங்கும் இடமான சிற்சபையின் நடுவில் நடிப்பதாகவும் எளிய தமிழில் தெளிவாக விளக்கம் தருகின்றார்.

மனிதர்களாகிய நாம் இதுவரையில் இருந்தது போல்.இனியும் வீண்காலம் கழிக்காமல். காலம் உள்ளபோதே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு ஆன்மலாபம் அருள்லாபம் பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்.

வருகிற தமிழ் புத்தாண்டு தொடங்கி.துன்பம் நீங்கி இன்பம் மலர்ந்து மக்கள் எல்லா நலமும் பெற்று மகிழ்ச்சி யுடன் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டிக் கொள்வோம்.

ஒரே ஒரு வேண்டுகோள்!

எந்த உயிர்களையும் கொல்லாமல் அதன் புலாலை உண்ணாமல்.வள்ளலார் சொல்லியுள்ள ஜீவகாருண்ய ஒழுக்கத்தை மட்டும் கடைபிடித்தால் போதுமானதாகும்.

ஒவ்வொரு வீட்டிலும் அணையா விளக்கு வைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.இருள் அகன்று ஒளி பிரகாசிக்கும்.உங்கள் வீட்டை சுற்றி அருளே பாதுகாப்பு வளையமாக கண்காணித்துக் கொள்ளும்

வருக தமிழ் புத்தாண்டு மகிழ்க உலக மக்கள்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு