திங்கள், 13 ஏப்ரல், 2020

சத்திய தருமச்சாலை !

சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை !

உலகில் உணவு இல்லாமல் மக்கள் இறந்துவிடக் கூடாது என்பதற்காக 1867 ஆம் ஆண்டு வைகாசி 11 ஆம் நாள் வள்ளல்பெருமான் அவர்களால் வடலூரில் தருமச்சாலை தோற்றுவிக்கப்படது.

வள்ளலார் ஏற்றிவைத்த அடுப்பானது அன்றிலிருந்து இன்றுவரை அணையாமல் எரிந்துகொண்டுள்ளது என்பது உலகம் முழுவதும் உள்ள ஆன்மீக சிந்தனையாளர்களுக்கும்.மற்றும் சன்மார்க்க சங்க அன்பர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும்.

வள்ளலார் தோற்றுவித்த சங்கத்திற்கு பெயர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்பதாகும்.

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கங்களின் அடிப்படை கொள்கையே ஏழை எளிய ஆதரவு அற்ற மக்களின் பசிப்பிணியை போக்க வேண்டியதே அடிப்படை கொள்கையாகும்.

அதற்கு ஜீவகாருண்யம் என்றும் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்றும்  பெயர் வைத்தவர் வள்ளலார்.

1 கருத்துகள்:

30 ஏப்ரல், 2020 அன்று 4:26 PM க்கு, Blogger J. Udhaya Shankar கூறியது…

உங்கள் அனைத்து பதிவிற்கும் நன்றி Brother...

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு