புதன், 1 ஏப்ரல், 2020

சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றும் காலம் !

*சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றும் காலம்* !

மனிதகுல நல் வாழ்விற்காக வள்ளல்பெருமானால் தோற்றுவிக்கப்பட்டது தான் *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்* என்பதாகும்.

வள்ளலார் கொள்கைகளில் மிகவும் முக்கியமானது . *உயிர் கொலை செய்யக்கூடாது*. *அதன் புலாலை உண்ணக்கூடாது* என்பதாகும்.

*வாடிய பயிரைக் கண்டு வாடியவர்* வள்ளலார் என்பது உலகமே அறியும்.

தமிழ் நாட்டில் பிறந்து வாழ்ந்த திருவள்ளுவரும் வள்ளலாரும் *கொல்லாமை .புலால் உண்ணாமை* என்னும் விஷயத்தில்  ஒரே நேர்கோட்டில் நிற்கிறார்கள்.

உயிர்க்கொலை செய்வதாலும் அதன் புலாலை உண்பதாலும்.மனித குலத்திற்கு அளவில்லா துன்பமும்.துயரமும் அச்சமும் பயமும் ஆபத்தும் பிணியும் வந்து மனித உயிர்கள் சீக்கிரம் அழியும் வாய்ப்புள்ளது என்று தெளிவாக சொல்லி உள்ளார்கள்.

நாம் யாரும் செவிமடுத்து கேட்கவில்லை.

இனிமேலாவது திருவள்ளுவர் வள்ளலார் சொல்லிய ஞான கருத்துக்களை பின்பற்றி வாழ்ந்து பயன் அடைய வேண்டுமாறு *ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன்* தாள் வணங்கி கேட்டுக் கொள்கிறோம்.

*நல்லதை செய்வோம் நலமுடன் வாழ்வோம்.*

பயம் இல்லாமல் வாழ்வோம்.

*இனி சுத்த சன்மார்க்க காலம்* !

*வள்ளலார் பாடல்* !

திருநெறி ஒன்றே அதுதான் சமரசசன் மார்க்கச்
சிவநெறி என்று உணர்ந்து உலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு

வருநெறியில் எனையாட்கொண்டு அருளமுதம் அளித்து
வல்லப சத்திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்

பெருநெறியில் சித்தாடத் திருவுளங் கொண் டருளிப்
பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே

கருநெறி வீழ்ந்துழலாதீர் கலக்கம் அடை யாதீர்
கண்மையினால் கருத்தொருமித்து உண்மை உரைத் தேனே.!

என்று தெளிவாக சொல்லி உள்ளார்.

திருநெறியான இறை அருள் பெறும் நெறியே சமரச சுத்த சன்மார்க்க சிவநெறி என்ற உண்மையைச் சொல்லுகிறேன் என்கிறார் வள்ளலார்.

*சிவநெறி என்பது இறைவனால் தோற்றுவிக்கப்பட்டது*. எனவே இனி சுத்த சன்மார்க்கத்தை மக்கள் பின்பற்றும்  காலம் இதுவே என்பதை மக்கள் அறிந்து.தெரிந்து.
புரிந்து கொண்டு வாழ்க்கையில் பின்பற்றி இறை அருளைப் பெறுவோம்.

*மரண பயத்தில் இருந்து மீண்டு* *மரணத்தை வென்று உடம்பையும் உயிரையும்*  *அழிக்காமல்
பாதுகாத்துக் கொள்வோம்*.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு