வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

சிவராத்திரி என்றால் என்ன ?


சிவராத்திரி என்றால் வருடத்தில் ஒருநாள் தூங்காமல் கண்விழித்து சிவன் என்னும் இறைவனை நினைந்து வழிபாடு செய்வது.நம்குறைகளை துன்பங்களை நீக்க்வேண்டும் என பிரார்த்தனை செய்தால் நன்மை பயக்கும் என்பது ஐதீகமாக உள்ளன.

மனிதர்கள் சிந்திக்க வேண்டும் !  ஒருநாள் வேண்டுதலுக்கே சிவன் துன்பத்தை போக்குகிறார் என்றால் தினமும் சிவனைத் தொடர்பு கொண்டு வழிபட்டால் துன்பமே வராமல் பாதுகாப்பார் அல்லவா ! 

வள்ளலார் ! 

இதைத்தான் வள்ளலார் இடைவிடாது இறைவனைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்கிறார்.இடைவிடாமல் தொடர்பு கொள்பவர்களுக்கு  தூக்கம்.துயரம் அச்சம் பயம்.துக்கம்.பசி.பிணி.மரணம் எப்போதும் வரவே வராது என்கிறார்.

இறைவனைத் தொடர்பு கொள்வது என்றால் எந்த வேலையும் செய்யாமல் சோம்பேரியாய் இருப்பது அல்ல.*ஒவ்வொருவரும் தனக்காகவும் பிறருக்காகவும் நியாயமான முறையில் உழைக்க வேண்டும்*.

நம்முடைய சிந்தனையை.உள்ளத்தை மனத்தை *சிற்சபையின் கண்*  இடைவிடாது செலுத்தி தொடர்பு கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளலார்.

சிற்சபை என்பதுதான் நம் உடம்பில் ஆன்மா என்னும் உள்ஒளி இருக்கும் இடமாகும். அதிலே இறைவன் ஒளிவடிவமாக இயங்கிக் கொண்டு உள்ளார் என்பதை வள்ளலார் அறிந்து தொடர்பு கொண்டு.அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டு உள்ளார்.

தூக்கம்! 

தூக்கம் தான் மனிதர்களின் மரணத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்பதை உணர்ந்த வள்ளலார். தூங்காமல் இருக்கும் வழியைக் கண்டு பிடித்தார். உணவு அதிகமாக உண்பதாலும்.அதிக உடல் உழைப்பாலும் தூக்கம் வந்து கொண்டே இருக்கும்.என்பதை உணர்ந்த வள்ளலார் என்ன செய்தார்? 

*தூக்கமே  அதிக துன்பத்திற்கு காரணம்*.! 
*தூக்கமே  மரணத்திற்கு காரணம்* !

உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர் உலகம் எல்லாம் கண்டிடும் ஓர் உளவை அறிந்திலரே ! என்கிறார்.

நம்மை படைத்தை இறைவனை இடைவிடாது தொடர்பு கொண்டால் அழுத கண்ணீர் மாறுமோ ஆகாரத்தில் இச்சை செல்லுமோ  ! என்கிறார். *இறைவனை உண்மை அன்பால் நேசிக்கின்ற தருணம் தூக்கமே  வராது*

நம்மை படைத்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை இடைவிடாதொடர்பு கொள்ளும் போது அருள் என்பது ஆன்மாவின் வழியாக சுரந்து உடல் முழுவதும் நிறைந்து பஞ்ச பூத அணுக்களை வேதியல் முறைப்படி ஒளி அணுக்களாக மாற்றுவதே *சுத்த பிரணவ ஞான தேகம்*  என்பதாகும்.அதுவே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.

இறைவனை எவ்வாறு நேசிக்க வேண்டும் என்பதை வள்ளலார் சொல்லுகின்றார்.



என உண்மை உணர்வை சத்தியம் வைத்த

மேலும் வள்ளலார் பாடல் ! 

என்னும் பாடலிலே தூங்காமல் இருக்கிறேன் நான். ஏன் என்றால் ? என் இறைவன் எனை வந்து இணைந்து கொள்ள வருகின்றார் .எனவே தூக்கமே  எனை அணுகாது செல் என விரட்டுகிறார்.

எனவே நாம் நாம் தினமும் சிவம் என்னும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தூங்காமல் தொடர்பு கொள்வதே சிவராத்திரியாகும்.

எல்லா இரவும் பகலும் உயிர்கள் வாழ்வதற்காக இறைவன் படைத்ததே என்பதை அறிந்து .உயர்ந்த அறிவு படைத்த மனிதர்கள் இடைவிடாது இறைவனை தொடர்பு கொள்வதே சிறந்த வாழ்க்கையாகும்.
அதுவே சிறந்த சிவராத்திரி யாகும்.

விரிக்கில் பெருகும்...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

1 கருத்துகள்:

11 மார்ச், 2020 அன்று 7:48 PM க்கு, Blogger Unknown கூறியது…

Do you understand there is a 12 word sentence you can say to your man... that will induce intense feelings of love and impulsive attraction to you buried inside his chest?

Because hidden in these 12 words is a "secret signal" that triggers a man's instinct to love, adore and guard you with his entire heart...

12 Words Will Fuel A Man's Love Impulse

This instinct is so built-in to a man's mind that it will drive him to work better than ever before to take care of you.

In fact, triggering this dominant instinct is so mandatory to achieving the best ever relationship with your man that the moment you send your man a "Secret Signal"...

...You will instantly find him expose his heart and mind to you in such a way he never expressed before and he will see you as the only woman in the galaxy who has ever truly tempted him.

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு