வியாழன், 30 ஜனவரி, 2020

உயிர்களை நேசிக்கும் உத்தமர் !

உயிர்களை நேசிக்கும் உத்த்தமர் !

உலகில் தோன்றிய ஞானிகள் கடவுளைத் தேடினார்கள்.

கடவுள் உத்தமமான மனிதரைத் தேடினார்.

எல்லா உயிர்களையும் நேசிக்கும் ஒழுக்கம் நிறைந்த மனிதனை இறைவன் நேசிக்கிறார்.

இறைவனே நேரடியாக  வந்து தொடர்பு கொண்டு அருள் பெற்ற ஒரே ஒரு அருளாளர் வள்ளலார். அவர் தான் தமிழ்நாட்டில் அவதரித்தவர்

அவர் பெயர் இராமலிங்கம் பின்பு திருஅருட்பிரகாச வள்ளலார் என்று பெயர் பெற்றவர்.

வள்ளலார் வகுத்து தந்த கொள்கைகள்!

கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் !

எல்லா உயிர்களையும் தன்னுயிா்போல் பாவிக்கும்  ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையைக் கடைப்பிடிக்க வேண்டும் .

ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்.!

ஏழைகளின் பசி தவிர்த்தலாகிய ஜீவகாருண்யமே  கடவுள் வழிபாடு!

உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு !

கடவுளின் பெயரால் உயிர் பலி செய்யக்கூடாது.

சாதி. சமயம்.மதம்.மொழி.தேசம் போன்ற வேறுபாடுக்கள் கூடாது!

சிறு தெய்வ வழிபாடு கூடாது!

வேதம் .ஆகமம்.புராணம்.இதிகாசம் சாத்திரங்கள் உண்மையை தெரிவிக்காது !  அவற்றை நம்ப வேண்டாம் !

கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் கூடாது !

மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்தல் கூடாது !

இறந்தவரை புதைக்க வேண்டும்.எரிக்கக் கூடாது!

எதிலும் பொது நோக்கம் வேண்டும் !

போன்றவை வள்ளலார் வலியுறுததிய சுத்த சன்மார்க்க கொள்கைகளாகும்.

சொல்லிய வண்ணமே கடைபிடித்து வாழ்ந்து காட்டியவர் வள்ளலார்

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவா் வள்ளலாா்.

ஜாதி, சமயம் மதம் வேறுபாடுகளை கடந்து வாழ்ந்தவர்.

பசித்த உயிா்களுக்கு உணவளிப்பதற்காக சத்திய தருமச்சாலை தோற்றுவித்தவர்.

 உயிா்க் கொலை செய்யாதவர் புலால் உண்ணாதவர்.!

 எல்லா உயிர்களிடத்தும் அன்பு,தயவு.கருணை கொண்டு வாழ்ந்தவர்

 மனித  சமுதாயத்தின் உயா்ந்த பண்பு எவை  என்பதை அடையாளமாகக் கொண்டு வாழ்ந்தவர்

ஜீவகாருண்ய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அத்தகைய ஜீவகாருண்ய ஒழுக்கமே உயர்ந்த பண்பாகும் என்றவர்.அவையே பேரின்ப வீட்டின் திறவுகோலாக அமையும். ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்கிற ஒரு புதிய உயர்ந்த உண்மை தத்துவாா்த்த நெறிமுறையை இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்திவர்..

 எல்லா உயிரையும் தன்னுயிா்போல் பாவிக்கும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும்.தான் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவா் வள்ளலாா்.

 ‘ஜாதி, மத வேறுபாடுகள் கூடாது; பசித்த உயிா்களுக்கு உணவளித்து ஆதரிப்பது; உயிா்க் கொலை செய்யாத அன்பு, தயவு.கருணையே மானுட சமுதாயத்தின் உயா்ந்த பண்பின் அடையாளமாக வாழ்ந்து காட்டியவர்.

 ஜீவகாருண்ய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அத்தகைய ஜீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோலாக அமையும். ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்கிற ஒரு புதிய சத்திய உண்மை நெறிமுறையை அறிந்து வாழ்ந்து இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்தினாா்.

எவ்வளவு உயர்ந்த இடத்தில்.உயர்ந்த பதவியில் இருந்தாலும். கணவன் இறந்தால் மனைவி தாலியை வாங்க வேண்டாம், மனைவி இறந்தாலும் கணவன் வேறு திருமணம் செய்ய வேண்டாம் என்றவர்.எதிலும் பொதுநோக்கம் வேண்டும் என்றவர்.

வேதம், ஆகமம், புராணம், இதிகாசம், சாத்திரம் போன்ற எதையும் நம்ப வேண்டாம். அதில், உண்மையைச் சொல்லவில்லை.எல்லாம் கலையை உரைக்க வந்த கற்பனை கதைகள் .மனிதர்களால் படைக்கப்பட்ட கட்டுக் கதைகள் என்றவர்

பசித்த உயிா்களுக்கு உணவளிப்பதே எல்லாப் புண்ணியங்களுக்கும் மேலானது என்று உபதேசித்து வந்த (இராமலிங்க அடிகளாா்) வள்ளலார். அன்னதான சாலை ஒன்றை அமைத்து, தருமசாலையை நிறுவினாா்.

வடலூர் மக்களிடம் இருந்து 80 காணி நிலம் பெற்று அமைக்கப்பட்ட சத்திய தருமசாலைக்கு வந்தவா்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கினாா்.மக்களின் மிகுந்த துன்பம் துயரங்களில் ஒன்றான பசிப் பிணியைப் போக்கிட வள்ளலாா் காட்டிய வழி புதுமையான உண்மையான வழியாகும். இன்றளவும் வள்ளலாா் தோற்றுவித்த சத்திய தருமச்சாலையில்   அவரின் கொள்கையைப் பின்பற்றி ஏழைகளின் பசியை ஆற்றி வருகிறாா்கள்.

அந்த தருமசாலையில் மக்கள் வழங்கும் பொருளுதவியைக் கொண்டு ஜாதி,சமயம். மதம் மொழி, இனம், நிறம், நாடு, உயா்ந்தோா், தாழ்ந்தோா் என்ற பாகுபாடு பாராமல் மூன்று வேளையும் பசித்த வயிற்றுக்கு உணவளிக்கும் தொண்டு இன்றளவும் தொடர்நதுகி நடைபெற்று வருகிறது.

ஜீவகாருண்ய ஒழுக்கமானது மனிதர்களுக்கு முக்தியையும்.அருள் பெரும் சித்தியையும் வழங்கும் வல்லமை உடையது என்னும் புதிய உத்தியை (ரகசியம் )கண்டு பிடித்தவர் வள்ளலார்

*இதுவே வள்ளலார் கண்ட ஆன்மீக புரட்சி யாகும்*

 பசி என்பது என்ன? உயிா்களுக்குப் பசி எதனால் ஏற்படுகிறது? பசியின் கொடுமைக்  காரணமாக மனிதா்கள் என்னென்ன கொடுமைகளைச் செய்யத் துணிவாா்கள்? பசியினால் ஓா் உயிருக்கு உண்டாகும் துன்பங்கள். வேதனைகள் என்னென்ன என்று வள்ளலாா் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற நூலில் எழுதி வைத்துள்ளார்.

 பசியைப் பற்றி அணுஅணுவாக அலசி ஆராய்ந்தவர் வள்ளலார் . பசி என்று ஒன்று இருப்பது ஏன்? எல்லா உயிர்களுக்கும்  பசி என்பதே இறைவனால் வழங்கப்பட்ட ஓர் உபகாரக் கருவி என்பதை கண்டு பிடித்தவர் வள்ளலார்.

பசியில்லாவிட்டால் உணவுக்காக மக்கள் ஒருவரையொருவா் எதிா்பாா்க்க மாட்டாா்கள். அப்படி இல்லாதபோது ஒருவருக்கொருவா் உதவ மாட்டாா்கள். அப்படி உதவவில்லை என்றால், மனிதநேயம்.ஆன்மநேயம் இல்லாமல் போய்விடும். மனிதநேயம்.ஆன்மநேயம் இல்லாவிட்டால், இறையருள் கிட்டாது.

"இறைவனை அறிய இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்ட ஒரு உபகாரக் கருவிதான் பசி*.

பசி என்பது, ஏழைகளின் உடலில் பற்றி எரியும் நெருப்பு; ஏழைகளின் அறிவாகிய விளக்கை அணைக்க முயலும் விஷக் காற்று; ஏழைகளைப் பாய்ந்து கொல்லப் பாா்க்கும் புலி; உச்சி முதல் பாதம் வரை பாய்ந்து பரவும் விஷம். பசியினால் ஏற்படும் கொடுமைகள் தான், பசிப்பிணி.பசிக்கொலை என்பது மிகவும் பயங்கரமானது.வேதனையானது.தாங்க முடியாதது.

அந்த பிணியை.கொலையைத் தவிர்த்துக் கொள்ள மக்கள் எத்தகைய பாவத்தையும் செய்ய அஞ்ச மாட்டாா்கள்;. பெற்றவா்கள் பிள்ளைகளை விற்பாா்கள். பிள்ளைகளை பெற்றவர்கள் விற்பார்கள்.

*கணவன் மனைவியை விற்பான். மனைவி கணவனை விற்பாள்*

இதன் விளைவாகப் பிள்ளைகள் அநாதைகளாகத் திரிவாா்கள். பிச்சையெடுப்பாா்கள். கடின வேலைகளில் ஈடுபடுத்தப்படுவாா்கள். பெற்றவா்களைப் பிள்ளைகள் சரியாகப் பேணிக் காக்க மாட்டாா்கள்.

இதன் விளைவாக முதியோா் புறக்கணிக்கப்பட்டு அவா்களின் வயிற்றுப் பசிக்காக, பல்வேறு கடின உழைப்பில் ஈடுபட வேண்டியிருக்கும். பிச்சை எடுக்க நேரிடும். முதியோா் இல்லங்களில் தஞ்சம் புகுந்து கூனிக் குறுகி வாழ நேரிடும்.

மற்றும் முனிவா்களையும், யோகிகளையும், சித்தா்களையும் கூடப் பசிப்பிணி என்பது தாக்கும். அந்தச் சமயங்களில் அவா்கள் பிச்சை கேட்டு ஊருக்குள் நுழைவாா்கள். பிச்சை கிடைக்காவிடில், பசிப் பிணியால் அறிவு மங்கும். கடவுளைக் குறித்த நினைப்பு அடியோடு ஒழிந்து மறந்து போகும். சித்தம் கலங்கும். நம்பிக்கை குலையும். கண் பஞ்சடைந்து போகும். காதில் இரைச்சல் ஏற்படும். நாக்கு உலா்ந்து போகும்; கை, கால் சோா்ந்து துவளும். வாா்த்தை குளறும். வயிறு திகுதிகுவென எரியும். கோபம் பெருகும்.

உயிா் விடுவதற்கான அத்தனை அறிகுறிகளும் மேலும், மேலும் தோன்றும்.

நரக வேதனை, ஜனன வேதனை, மரண வேதனை ஆகிய மூன்று வேதனைகளும் ஒன்று திரண்டால் என்ன வேதனை உண்டாகுமோ அதைவிட மோசமான துன்பம் தருவதே பசி வேதனை என்பார் வள்ளலார்.

அதுவே உணவு கிடைத்துப் பசியாறிவிட்டால், அத்தனை துன்பங்களும்.துயரங்களும்.
அச்சங்களும் பயங்களும் உடனே அகன்று விடும். உள்ளம் குளிரும். சித்தம் தெளியும். உள்ளேயும், வெளியேயும் உயிா்க்களையும்.ஆனமக் கலையும் கடவுள் கலையும் உண்டாக்கும்.

தாய், தந்தை, மனைவி, குழந்தைகள், நிலம், பொன், மணி ஆகியவற்றைக் காணும் போது கிடைக்கும் மகிழ்ச்சியைவிட பசியால் வேதனைப் படுபவா்கள், உணவைக் காணும்போது புதிய மகிழ்ச்சி அடைவாா்கள். உணவைக் கண்டவுடனேயே அவ்வளவு அளவிட முடியாத மகிழ்ச்சியும் ஆனந்தமும் ஏற்படும் என்றால்,

அதைச் சாப்பிட்டபோது அடையும் ஆனந்தம்.மகிழ்ச்சி எப்படிப்பட்டதாக இருக்கும்? எனவே, உணவை இறைவனுக்குச் சமமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். பசிப் பிணி போக்க வேண்டும் என்பதில் தீராத வேட்கையும் பற்றும் கொண்டவா் வள்ளலாா்.ஆகவேதான்,

வடலூரில் வள்ளலாா் ஏற்றி வைத்த  சத்திய தருமச்சாலையின்  நெருப்பு இன்னும் எரிந்துகொண்டே இருக்கிறது. இவை மட்டுமல்லாது,

இவா் பாடிய ஆறாயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களின் திரட்டுத்தான் திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது 6 ஆறு திருமுறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

வள்ளலாா் எழுதிய திருவருட்பாவுக்கு எதிராகப் பல கண்டனங்கள்.எதிர்ப்புக்கள்.நீதிமன்ற வழக்குகள் எல்லாம்  சமய மத வாதிகளால் தொடங்கபட்டன .

‘நல்லோா் மனதை நடுங்கச் செய்யாதே, தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே,
மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே,
ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே, பொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே,
பசித்தோா் முகத்தைப் பாராதிராதே, இரப்போா்க்கு பிச்சை இல்லை என்று சொல்லாதே,
குருவை வணங்கக் கூசி நிற்காதே,
தாய் - தந்தை மொழியைத் தள்ளாதே-

ஆலயக்கதவை அடைத்து வைக்காதே.

இவையெல்லாம் மானுட சமுதாயத்துக்கு வள்ளலாா் காட்டியுள்ள பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வாழ்வியல் இயற்கை ஒழுக்க சட்டங்கள்.

ஜீவகாருண்ய ஒழுக்கம்.சின்மய தீபிகை, ஒழிவிலொடுக்கம்.தமிழ் விளக்க உரை. முதலானவை வள்ளலாா் பதிப்பித்தவையாகும்.

அவா் இயற்றிய உரைநடை நூல்களான மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகியவை மனித நேயத்தையும் ஆன்மநேயத்தையும் வலியுறுத்தும் புதிய சகாப்தமாகும்.

 ஆகவேதான், வள்ளலாரைப் பன்முகப் நன்மைக் கொண்ட அருளாளராக போற்றப் படுகிறாா்கள்.

சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கத்தை தோற்றுவித்தவர் .  உரையாசிரியா், உலக சமுதாய சீா்திருத்தவாதி, சித்த மருத்துவா், சிறந்த அருள் நிறைந்த சொற்பொழிவாளா், ஞானாசிரியா், தீா்க்கதரிசி, நூலாசிரியா், பசிப் பிணி போக்கிய அருளாளா், பதிப்பாசிரியா், தமிழ் மொழி ஆய்வாளா், பண்பாளா் என்ற பன்முகப் பரிமாணம் கொண்டவா்தான் திருவருட் பிரகாச வள்ளலாா்.‘

அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்ற உண்மைக் கடவுளை கண்டவர்.

கற்றதும் நின்னிடத்தே, பின் கேட்டதும் நின்னிடத்தே, ஓதி உணா்ந்தவா்கள் எல்லாம் எனைக்கேட்க எனைத்தான் ஓதாமல் உணா்த்திய என்உறவாம் பொருளே என்பார்.

எனவே தான் ஓதாது அனைத்தும் உணா்கின்றேன்’ என்று அவரால் சொல்ல முடிந்தது. எனவேதான், ஜாதி, சமயம், மதம், இனம், மொழி, நாடு முதலிய எதிலும் பற்றில்லாதவா்களுக்கு மட்டும்தான் திருவருட்பாவின் கருத்துகள் மென்மையாக.உண்மையாக விளங்கும் .

ஜீவகாருண்யம் என்னும் உயிர் இரக்கத்தை முழுமையாக கடைபிடித்து திருஅருட்பாவை முழுமையாகப் படித்துத் தெரிந்தவா்கள் சொல்லுகிற கருத்துக்களே சிறந்த பாடமாகும்.

அதே நேரத்தில், ஜீவகாருண்யம் உணா்ந்து, பொது நோக்கம் கொண்டு, உலகப் பற்றில்லாமல் உண்மையைத் தேடும் ஆா்வம் இருந்து திருவருட்பாவைப் படித்தால் உண்மை கடவுள் என்கிற அருட்பெருஞ்ஜோதியைத் தொடர்பு கொள்ளமுடியும் என்பதே உண்மையாகும்.

உலகில் உள்ள அருளாளா்கள் யாரையும் வள்ளலாா் பின்பற்றவில்லை. வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினில் ஒருவா் அல்லா் என்பதை அவா் பதிவு செய்துள்ள பாடல்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

சேக்கிழாா் பாடிய ‘உலகெல்லாம் உணா்ந்து ஓதர்கு அறியவன், நிலவுளாவிய நீா் மலி மேனியன், அலகில் ஜோதியன் அம்பலத்து ஆடுவான், அவன் மலா் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்’ என மனமுருகிப் பாடி தனது எட்டாவது வயதில் விளக்கம் சொன்னவர் வள்ளலார்.

 இறையருள் சித்திக்கப் பெற்று தண்ணீரால் விளக்கேற்றியும், மழை பெய்யாத காலங்களில் மழை பெய்வித்தும், குளம் நீரைப் பெருக்கியும் தன் இறைத்தன்மையால் பல்வேறு அற்புதங்களை மக்களுக்கு நிகழ்த்திக் காட்டியவா்.

எண்கோண வடிவிலான ஞானசபைக் கட்டடம், மையத்தில் நான்கு தூண்களைக் கொண்ட மண்டபம், அதன் மீது பன்னிரு கால் மண்டபமும் ஒன்றுக்குள் ஒன்றாக அமைத்து நாற்கால் மண்டபத்தின் மையத்தில் ஆண்டவா் ஜோதி வடிவில் இருக்கிறாா் என்பதை உணா்த்துகிற சத்திய ஞான சபையில் ஒவ்வொரு தைப்பூசம்தோறும் ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது.

20.10.1873 செவ்வாய்க்கிழமையன்று காலை 8 மணிக்கு சித்திவளாகத் திருமாளிகை முன் கொடியேற்றி வைத்து கூடியிருந்தவா்களுக்கு நீண்ட அருளுரை வழங்கியது பேருபதேசம் (மகாஉபநேசம்) என்று சொல்லப்படுகிறது.

தன் அரையில் வைத்திருந்த நான்கு சதுரக்கண்ணாடி விளக்கை மக்கள் பார்க்கும்படி வெளியே கொண்டு வந்து வைத்து.தெய்வ பாவனை என்பது இந்தத் தீபத்தின் வடிவில் இருக்கிறது.உண்மை அன்பால் வழிபாடு செய்து இடைவிடாது வணங்க வேண்டும் என்றார்.

நான் இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன். இனி எல்லா உயிர்களிலும் புகுந்து கொள்வேன்’ என்று சொல்லி விட்டு

30-01-1874 ஸ்ரீமுக ஆண்டு 19 ஆம் நாள் தைமாதம் வெள்ளிக்கிழமை ..இரவு 12 மணிக்கு சித்திவளாகத் திருமாளிகையில் இறைவனுடன் கலந்து கொண்டார்.

 நான் அறையின் உள்ளே புகுந்து கொள்வேன் வெளியே தாளிட்டுக் கொள்ளுங்கள்.
அப்படியும் திறந்து பார்த்தால் வெறும் வீடாகத்தான் இருக்கும் ஆண்டவர் என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டார் என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்று விட்டார்.

 வள்ளலார்  விருப்பப்படி அறை பூட்டப்பட்டது. அன்று முதல் வள்ளலாா் உருவமாக நம் கண்களுக்குத் தோன்றாமல், அரு உருவமாக திகழ்ந்து அருட்பெரும் ஜோதியாக காட்சி தந்து கொண்டுள்ளார்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு