ஆன்மாவைத் தொடர்பு கொண்டால் கடவுளைத் தொடர்பு கொள்ளலாம் !
ஆன்மா இருக்கும் இடம் !
மனித உடம்பில் ஆன்மா இருக்கும் இடம் தெரிந்து கொண்டால் கடவுள் இருக்குமிடம் தெரிந்து கொள்ளலாம்.
நமது உடம்பின் தலைப்பகுதியின் மத்தியில் உச்சிக்கும் கீழே உள்நாக்கு மேலே வச்ச விளக்கு ஒளிர்கின்றது.அதுவே ஆன்மாவாகும்.
*அந்தக்கரண கூட்டத்தின் மத்தியில் ஆன்மா இயங்கிக் கொண்டுள்ளது என்பார் வள்ளலார்*
அதற்கு சிற்சபை என்றும் பெயர்.அதற்குத்தான் அகம் என்றும் பெயர்.ஆன்மா தன்னந்தனியே எதற்கும் தொடர்பு இல்லாமல் சிறிய வெற்று இடத்தில் தன்னைத்தானே இயங்கிக் கொண்டு உள்ளது.
ஆன்மா இருக்கும் இடத்திற்கு புருவ மத்தி என்று சொல்லப்படும்.வெளியில் உள்ள புருவமத்தி அல்ல.சிரசின் உள்ளே இருப்பதாகும்.அந்த ஆன்மா என்னும் ஒளி இருக்கும் இடத்தைத்தான் *ஞானசபையாக* புறத்தில் காட்சிப்பொருளாக காட்டியுள்ளார் வள்ளலார்.
நம் உடம்பில் நம்மை இயக்கி இயங்கிக் கொண்டு இருக்கும் ஆன்மாவைத் தெரிந்து கொள்ளாமல்.ஆன்மாவைப் படைத்து அனுப்பிய கடவுளை எப்படி தெரிந்து கொள்ள முடியும்.சிந்திக்க வேண்டும்.
ஆன்மாவைத் தெரிந்துகொண்டு அதன் துணைக்கொண்டு கடவுளைத் தொடர்பு கொள்ள வேண்டும்.அந்தக் கடவுளிடம் பூரண அருளைப்பெற்று மரணத்தை வென்று.*கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் வேண்டும் என்கின்றார் வள்ளலார்*
வள்ளலார் முதலில் பல கடவுள்களை வணங்கி வழிப்பட்டு பல பக்தி பாடல்களை எழுதி வைத்து இருந்தாலும்.எந்த கடவுளுக்கும் அருள் வழங்கும் தகுதி இல்லை என்பதை அறிவால் அறிந்து கொள்கிறார்.
அறிவின் முயற்சியால் உண்மைக் கடவுளைத் தேடினார்.வெளியில் தேடவில்லை. தன் உடம்பிலே இயங்கும் ஆன்மாவைத் தொடர்பு கொண்டார்.ஆன்மாவைத் தொடர்பு கொள்வது எங்கனம் என்பதை நிணைந்து உணர்ந்து அறிந்து கொள்ளும் வழியைக் கண்டுபிடித்தார்.
வெளியில் அலைந்து திரியும் மனத்தை அடக்கி உள்ளே செல்லும் வழியைக் கண்டு பிடித்தார். புறத்திலே திரியும் மனத்தை அகத்திலே இயங்கும் ஆன்மாவைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக அறிந்து கொண்டார். மனத்தின் வாயிலாகத்தான் ஆன்மாவைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்கிறார்.
மனமானது ஆன்மாவை தொடர்பு கொள்வது எங்கனம் ? மனத்தை ஆன்மா ஏற்றுக் கொள்ளுமா ? மனம் என்ன புனிதமானதா ? பற்பல நல்லதும் கெட்டதும்.தீமையும் நன்மையும் செய்துள்ளது.மனத்தினால் செய்யும் செயல்கள் அனைத்தும் தான் திரைகளாக ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ளது.
அந்த திரைகளை நீக்காமல் ஆன்மாவைத் தொடர்பு கொள்ளவேமுடியாது.அதற்கு ஒரு *உளவு* கண்டு பிடித்தார்.
*உளவினில் அறிந்தால் ஒழிய மற்று அளக்கின் அளவினில் அளவா அருட்பெருஞ்ஜோதி!* என்னும் அகவலில் தகவலாக சொல்லுகிறார்.
மேலும்
உள்ளானைக் கதவுதிறந் துள்ளே காண
*உளவு* எனக்கே உரைத்தானை உணரார் பாட்டைக்
கொள்ளானை என்பாட்டைக் குறிக்கொண் டானைக்
கொல்லாமை விரதமெனக் கொண்டார் தம்மைத்
தள்ளானைக் கொலைபுலையைத் தள்ளா தாரைத்
தழுவானை யான்புரிந்த தவறு நோக்கி
எள்ளானை இடர்தவிர்த் திங்கென்னை ஆண்ட
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.!.

- திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே
- திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ
- உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும்
- ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ
- கருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தே
- கங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ
- செருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசே
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.!
திருக்கதவும் திறந்து திருஉருவு காட்டி அருள் பெறுவது எங்கனம் ?
ஆன்மா மகிழ்ச்சியும்.நெகிழ்ச்சியும் இன்பமும் அடைந்தால் தான் திரைக்கதவும் திறந்து ஒளி உருவைக் காட்டும்.
ஆன்மா இம்மைஇன்பலாபம்.மறுமைஇன்பலாபம்.
பேரின்பலாபம் அடைய அதற்கு என்ன செய்ய வேண்டும் ? இங்குதான் வள்ளலார் தனித்து நிற்கிறார்.இந்த உளவை உலகில் எந்த ஞானியும் கண்டுபிடிக்கவில்லை எனபதை உறுதியாக சொல்லலாம்.
வள்ளலார் பாடல் !
பேரின்பலாபம் அடைய அதற்கு என்ன செய்ய வேண்டும் ? இங்குதான் வள்ளலார் தனித்து நிற்கிறார்.இந்த உளவை உலகில் எந்த ஞானியும் கண்டுபிடிக்கவில்லை எனபதை உறுதியாக சொல்லலாம்.
வள்ளலார் பாடல் !
- காலையிலே என்றனக்கே கிடைத்தபெரும் பொருளே
- களிப்பேஎன் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே
- மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்
- மேவுகின்ற பெரும்பயனாம் விளைவைஎலாம் தருமச்
- சாலையிலே ஒருபகலில் தந்ததனிப் பதியே
- சமரசசன் மார்க்கசங்கத் தலைஅமர்ந்த நிதியே
- மாலையிலே சிறந்தமொழி மாலைஅணிந் தாடும்
- மாநடத்தென் அரசேஎன் மாலையும்ஏற் றருளே! .
*ஆன்மா லாபம் அடைய ஜீவகாருண்யமே வழி ஆதலால்.ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்பதை கண்டு கொண்டார்*
வள்ளலாரின் இடைவிடாத நன் முயற்சியால் இறைவனே வள்ளலாருக்கு நல்வழியை.நேர்வழியைக் காட்டுகின்றார்.
வள்ளலார் பாடல் !
- என்பாட்டுக் கெண்ணாத தெண்ணி இசைத்தேன்என்
- தன்பாட்டைச் சத்தியமாத் தான்புனைந்தான் - முன்பாட்டுக்
- காலையிலே வந்து கருணைஅளித்தே *தருமச்
- சாலையிலே வாஎன்றான் தான்*.!
ஆன்மா மகிழ்ச்சி நெகிழ்ச்சி இன்பம் அடைய தருமச்சாலை வழிதான் சிறந்த்து உண்மையானது நேர்வழியானது என்பதை ஆண்டவர் உணர்த்த தருமச்சாலையை முதன் முதலில் வடலூரில் 1867 ஆம் ஆண்டு வைகாசி 11 ஆம் நாள் தோற்றுவைத்துள்ளார்.என்பதை நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இங்கு ஒரு கேள்வி எழுகின்றது ! ஆன்மாவிற்கும் தருமச்சாலைக்கும் என்ன சம்பந்தம் ?
ஆன்மா இயற்கையிலே தயவு உடையது.ஆண்டவரும் இயற்கையிலே தயவு உடையவர்.எனவே சிறு தயவைக் கொண்டு பெரிய தயவு பெற வேண்டும் என்பதை வெளிப்படையாக வள்ளலார்..
சிறிய தயவும்.பெரிய தயவும் ஒன்றோடு ஒன்று இணைகின்ற போது.ஆன்மாவின் உள் இருந்து கருணை என்னும் அருள் சுரக்கின்றது.
சிறிய தயவை எங்கனம் பெறுவது ? .உலகில் உள்ள ஆன்மாக்கள் யாவும் இறைவனால் படைக்கப்பட்டது.அந்த ஆன்மாக்கள் அறியாமையால்.அஞ்ஞானத்தால் *.சாதி.சமய.மதக்கொளகைகளை* பின்பற்றி தவறான வழியில் வாழ்ந்து வந்த்தால் இறந்து இறந்து. பிறந்து பிறந்து துன்பத்தில் அழுந்தி வாழ்ந்து வருகின்றது.
அந்த துன்பம் தான் பசி.பிணி.தாகம்.இச்சை.எளிமை.பயம்.
கொலை போன்ற துனபங்களாகும்.அந்த துன்பத்தைப் போக்குவது ஆனமநேய உரிமையாகும்.அந்த உரிமையை அறிந்து துன்பங்களைப் போக்குகின்றபோது ஆன்மா நெகிழ்ச்சி மகிழ்ச்சி இன்பம் அடைகின்றது.இதுவே ஜீவகாருண்யத்தின் வல்லபமாகும்.
ஜீவகாருண்யம் செய்பவருக்கும் ஆன்மா நெகிழ்ச்சி மகிழ்ச்சி இன்பம் உண்டாகின்றது.பெறுபவருக்கும் ஆன்மா நெகிழ்ச்சி மகிழ்ச்சி இன்பம் உண்டாகின்றது.
ஜீவகாருண்யம் செய்பவருக்கும் ஆன்மா நெகிழ்ச்சி மகிழ்ச்சி இன்பம் உண்டாகின்றது.பெறுபவருக்கும் ஆன்மா நெகிழ்ச்சி மகிழ்ச்சி இன்பம் உண்டாகின்றது.
ஜீகாருண்யம் மட்டுமே போதுமா ? என்றால் போதாது.ஜீவகாருண்யத்தால் மோட்ச வீட்டின் திறவுகோல் என்னும் சாவி கிடைக்கும்.ஆன்மாவிற்கு நெகிழ்ச்சி மகிழ்ச்சி இன்பம் உண்டாகும்.ஆண்டவர் யார் என்பது தெரியாது.
ஆண்டவர் யார் ? என்பதை தெரிந்து கொள்ள சத்விசாரம் செய்ய வேண்டும்.சத்விசாரம் என்பது ஆண்டவரின் பெருமையும் ஆன்மாவின் சிறுமையும் இடைவிடாது விசாரித்தலே சத்விசாரமாகும்.
சத்விசாரம் எங்கனம் செய்ய வேண்டும் என்பதை *ஞானசரியை* என்னும் தலைப்பில் 28 பாடல்களில் தெளிவான விளக்கத்தோடு பதிவு செய்துள்ளார் வள்ளலார்.
ஆன்மாவைத் தொடர்பு கொள்ளவும் இறைவனைத் தெரிந்து கொள்ளவும்.அருளைப்பெற்றுக் கொள்ளவும். மரணத்தை வென்று கடவுள் மயமாகவும் இரண்டே வழிதான் அவைகள்தான் ஜீவகாருண்யம்.சத்விசாரம் என்பதாகும்.
ஜீவகாருண்யத்தாலும் சத்விசாரத்தாலும் வெற்றிபெற்று ஆண்டவரைக் கண்டுபிடித்தவர் தான் வள்ளலார்.
அந்த இயற்கை உண்மை கடவுள்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவராகும்.
அந்தக் கடவுளைத் தொடர்பு கொள்ளவே
மகாமந்திரத்தை வெளிப்படையாக ஆண்டவரே எடுத்து கொடுத்துள்ளார்.
அந்த மந்திரம் !
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி!!!!
என்பதாகும்.
எனவே நமது உண்மையான தாயும் தந்தையுமான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டால் மட்டுமே அருளைப் பெற்று மரணத்தை வெல்லமுடியும். பேரின்ப லாபத்தை பெறமுடியும். முத்தேக சித்தி பெறமுடியும்.அருள்ஒளி தேகமாக மாற்றி கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாற்றம் அடைய முடியும்.
வள்ளலார் பாடல் !
- தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
- தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்
- வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
- மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்
- காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்
- கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்
- சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்
- சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.!
ஒவ்வொரு ஆன்மாவின் சிற்சபையில் ஆடுகின்ற ஆட்டுகின்ற ஒரே தெய்வம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும்.
இயற்கைஉண்மை.இயற்கைவிளக்கம். இயற்கைஇன்பமாக விளங்கிக் கொண்டு உள்ளவராகும்.
வள்ளலார் காட்டிய உண்மை ஒழுக்கத்தை கடைபிடித்தால் மட்டுமே ஆன்மாவைத் தொடர்பு கொள்ள முடியும்.
சமய மதங்கள் சொல்லிய குறுக்கு வழிகளில் சென்று ஆன்மா அவதிப்படாமல..வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கைகளைப் பின்பற்றி நேர்வழியில் சென்று வெற்றி பெறுவோம்.
ஆன்மாவைத் தொடர்பு கொள்வோம் ஆண்டவரைத் தொடர்பு கொள்வோம்
அருளைப் பெறுவோம்.
மரணத்தை வென்று மரணம் இல்லாப்பெருவாழ்வு வாழ்வோம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு